உயிருள்ள சாட்சியாக!!
Thu Dec 17, 2015 8:18 am
சென்னை நகரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னாள் பிரபல ரவுடி ஒருவர் வாழ்ந்து வந்தார்! அரசியல் பிரமுகர்களின் வலது கையாக திகழ்ந்தவர், அடிதடி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், தன் தலைவனை எதிர்பவர்களின் கை, கால், வெட்டுவது போன்ற செயல்களை செய்து தன் வாழ்கையில் அணைத்து வசதிகளையும், செல்வாக்குகளையும் பெற்றிருந்தார்!!!
காலம் சென்றது அவர் உடலில் தீராத வியாதி பிடித்துக்கொள்ள சற்று பதறிபோனவர் உடனடியாக மருத்துவர்களை பார்த்தார், உங்கள் வியாதி முற்றி விட்டது இனி உங்களை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். இன்னும் சில காலங்களில் நாம் இறக்க போகிறோம் என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார், இருப்பினும் ஒரு நம்பிக்கை நம் தலைவரிடம் சென்றால் அவர் நிச்சயம் நம்மை வெளிநாடுகளில் இருக்கும் சிறந்த மருத்துவர்களை வைத்து தன் வியாதியை சரி செய்வார்கள் என்று, ஆனால்? அவர் தலைவர்களோ இனி எங்களை தொல்லை செய்யாதே என்று அனுப்பிவிட்டனர்,
கை விடப்பட்ட நிலை! தன்னுடைய செல்வாக்கு, அதிகாரம் எல்லாம் காற்றோடு கல்ந்துவிட்டதை எண்ணி கண்களில் கண்ணீரோடு ஒரு தேநீர் கடையில் அமர்கிறார், அங்கு தேநீர் கொடுக்கும் சிறுவனின் கையில் ஒரு வாசகம் "இயேசு உன்னை நேசிக்கிறார்" என்று, அதை படித்தவனுக்கோ புதிய நம்பிக்கை "யார் இந்த இயேசு? எங்கு இருக்கிறார்? என்னை காப்பாற்றும் வல்லமை இவரிடம் இருக்கிறதா? என்ற கேள்விகளோடு அருகில் இருக்கும் சிறிய தேவாலயம் நோக்கி செல்கிறார் அங்கு பிரார்த்தனை செய்து ஒரு பொருத்தனையும் செய்கிறார், நாட்கள் சென்றது மீண்டும் அவர் மருத்துவமனை செல்கிறார் அணைத்து மருத்துவர்களுக்கோ பெரிய ஆச்சர்யம்!!!
இவர் வியாதி மறைந்து விட்டது என்று தான், பூரண குணம் பெற்று பழைய தெம்புடன் வெளியே கண்ணீரோடு வருகிறார் இதயத்தில் இயேசுவுக்கு நன்றிகள் சொல்லிகொண்டே!! இதை கேள்விப்பட்ட பழைய அரசியல் தலைவர்கள் மீண்டும் இவரை அழைக்கிறார்கள், இவரோ அவர்கள் அனைவரையும் தூக்கி எறிந்தவராய் சென்றார் இந்தியாவின் வடதேசங்களுக்கு மிஷ்னரியாக, இன்னும் இயேசுவை பற்றி சொல்லிகொண்டே இருக்கிறார் உயிருள்ள சாட்சியாக!!! "GEMS" ஊழியத்தின் அங்கத்தினராக இருக்கும் இவரின் இந்த சாட்சியை கேட்கும்போது கர்வமாக இருந்தது நாமும் இயேசுவை பின்பற்றுபவர்கள் என்று!!!...
-உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.-சங்கீதம் 70:4..
Re: உயிருள்ள சாட்சியாக!!
Thu Dec 17, 2015 8:21 am
"தொட்டன்னா"
"தொட்டன்னா" என்ற மிருக குணம் படைத்த மனிதர் மந்திரம், மாந்திரீகம்,பில்லி சூனியம்,செய்வினை, குட்டி சாத்தான் ஏவுதல் போன்ற அசுத்த கிரியைகளின் அதிபதியாக இருந்தவர், சிறுவயது முதலே சுடுகாட்டுக்கு சென்று பூஜைகள் செய்து தன்னை பிசாசுக்கு அர்பணித்த மூர்ககுனம் கொண்டவர் நன்கு படித்தவரும் கூட...
கிறிஸ்தவர்கள் என்றால் அவரின் கோபத்துக்கு அளவே இருக்காது அவர்களின் குடும்பங்களுக்கு மந்திரம் செய்ய தனி டிஸ்கௌண்ட் என்ற அறிவிப்பு கூட கொடுத்திருக்கும் ஓர் உன்னதர், எங்கேனும் கிறிஸ்துவ கூட்டங்கள் நடைபெற்றால் அங்கு சென்று கொடிய பாம்புகளை கூட்டத்திற்குள் விட்டு விடுவார் "ஏன் ஓடுகிறீர்கள் உங்கள் இயேசு வருவார் காப்பாற்ற" என்று கிண்டல் செய்து சத்தமாக சிரிப்பார் ஏனெனில் அவர் அணைத்து அசுத்த கிரியைகளையும் அடக்கி ஆளும் வல்லமை படைத்த படித்த மந்திரவாதி...
ஒரு முறை ஒரு செல்வந்தன் தனக்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்திருகிறது அவளை அடைய விரும்புகிறேன் நீங்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கிறேன் அவளை வசியம் செய்யுங்கள் என்கிறான், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தொட்டன்னா திடிரென்று சரி என்று சந்தோசமாக ஒப்புகொள்கிறார் காரணம் அந்த பெண்ணின் பெயர் "எலிசபத்" என்ற கிறிஸ்துவ பெயர் மட்டுமே,
மந்திரவாதி தொட்டன்னா இரவு பூஜைகள் ஆரம்பிக்க போவதாக சொல்கிறார் அந்த இரவே அந்த கிறிஸ்துவ பெண் உன்னை தேடி வருவாள் என்றும் தெரிவித்து செல்கிறார்!!! இரவு முழு அசுத்த கிரியைகளின் சக்தியை கொண்டு வசியம் பூஜைகள் நடந்து கொண்டிருகிறது அனைத்தும் நல்லபடியே நடக்கிறது
இறுதி கட்ட நொடிகள் அந்த பெண் வசியத்தின் மூலம் அடிமையாக போகிறாள் என்ற கர்வத்தோடு இருந்த மந்திரவாதி தொட்டன்னா சிறிதும் எதிர் பார்க்காத அந்த சம்பவம் "தன் பூஜை அறையில் இருக்கும் அணைத்து அசுத்த ஆவிகளும் அலறியபடி ஓட்டம் பிடித்தது தான்" குழம்பிபோன தொட்டன்னா யோசிபதற்குள் "இயேசு கிறிஸ்து" சிலுவை காட்சி மூலம் தோன்றுகிறார்!!!
என் மகளை வசியம் செய்யாதே விட்டுவிடு அவள் என்னுடைய ஊழியகாரி என்று சொல்வதை தொட்டன்னா கேட்கிறார்.... கையில் வேதத்தை எடுத்த தொட்டன்னா ஒரு ஊழியக்காரராக தன் வாழ்கையும் அதன் சம்பவங்களையும் சாட்சியாக சொல்லி இயேசுவுக்கு சீடர் ஆகிபோனார் இன்று!!!!....
-உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
சகரியா 2:8..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum