- charles mcசிறப்பு கட்டுரையாளர்
- Posts : 167
Join date : 12/11/2016
ஹரியானாவில் காவியின் சர்ஜிகல் தாக்குதல்!!!!!!
Tue Nov 22, 2016 9:48 pm
ஹரியானாவில் காவியின் சர்ஜிகல் தாக்குதல்!!!!!!
பெண் சாமியார் துப்பாக்கி: கேளிக்கையாக சுட்டாராம் - ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
#
அரியானா கர்னுல் நகரில் திருமண விழாவிற்குச் சென்ற பெண் சாமியார் ஒருவர் நடமாடிய படியே தன் னிடமுள்ள துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
#
பாஜக ஆளும் மாநிலங் களில் இந்துத்துவவாதிகளின் அராஜகம் தொடர்கதையாக இருக்கிறது, சங்பரிவார்களின் ஏதாவது ஒரு அமைப்பை தங்கள் பகுதியில் துவங்கி அதன் தலைவராக தன்னைத்தானே நியமித்துக் கொண்டு சிறுபான் மையினரையும் தலித்துகளையும் மிரட்டும் போக்கு தொடர் கதையாக உள்ளது, அரியானா கர்னூலைச் சேர்ந்தவர் தேவா தாக்கூர் பெண் சாமியாரான இவர் அப்பகுதி இந்து மகாசபாவின் தலைவி ஆவார்.
#
இவரிடம் பல்வேறு வெளிநாட்டுத்துப்பாக்கிகள் உள்ளது, இதற்கான தகுந்த அனுமதி பெற்றுள்ளாரா, எதற்காக இவர் நவீன ரக ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று யாரும் கேள்வி கேட்க முடியாது, இவர் கர்னூல் நகரில் ஒரு பிரமுகரின் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார். கூட்டத்தினருக்கு முன்பாக தனது ஆதரவாளர்களுடன் உற்சாகநடனமாடினார்.
#
அப்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இருந்தார். இதில் சில குண்டுகள் திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் தலையில் பாய்ந்தது, இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிலர் குண்டடிபட்டு சுருண்டு விழுந்தனர். நடந்ததை உணர்ந்த பெண் சாமியார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆதரவாளர்களுடன் தப்பி ஓடிவிட்டார்.
#
23 வயதான இவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன்னை கோமாதாவின் புத்திரி(பசுவின் மகள்) என்று அறிவித்துக் கொண்டார். இவரது வீட்டில் 13 கிலே எடையுள்ள தங்க சிம்மாசனம் ஒன்று உள்ளது.
#
இதில் அமர்ந்து தன்னைக் காணவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவாராம் இவர் 2014ஆம் ஆண்டு பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தவர். பிரச்சாரத்தின் போது ராமர் கோவில் வெறும் பஜனை மற்றும் கோரிக்கைகளால் கட்டமுடியாது, துப்பாக்கி களுடன் வாளும் ஏந்தினால் தான் ராமர்கோவில் கட்டமுடியும், துப்பாக்கியும் வாளும் ஏந்த வேண்டுமென்றால் மத்தியில் மோடி ஆட்சியில் அமர்ந்திருப்பதைப் போல் அரியானாவிலும் மோடி ஆட்சி வேண்டும் என்று கூறியவராவார். கர்னூல் மாவட்டம் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரின் தொகுதியாகும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum