ராகி நிலக்கடலை உருண்டை
Mon Oct 31, 2016 7:29 pm
தேவையான பொருள்கள்
ராகி-2 கப்
நிலக்கடலை -2 கப்
வெல்லம் -4 கப்
உப்பு-சிறிது
தண்ணீர்-1/2 கப்
செய்முறை
1.ராகிமாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.பின் உப்பு சேர்த்த அரை கப் நீரில் மாவை புட்டுக்கு ஈர பதமான மாவு தயார் செய்வது போல் தயார் செய்யவும்.
2.இந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஒரு தட்டில் துணி போட்டு ஆவியில் வேக வைக்கவும்.
3.2 கப் நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி,மிக்ஸில் பொடித்து கொள்ளவும்
4. பின் ஒரு பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்த ராகி புட்டு,பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, வெல்லம் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
5.இவற்றை மிக்ஸில் போட்டு 30 sec அரைத்தால் போதும்,உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தது விடும் .
பின் உருண்டையாக பிடித்து உபயோகிக்கவும்.
குறிப்பு:
இவை தென் மாவட்டத்தில் எங்கள் சமுதாயத்தினரால் செய்யப்படும் பாரம்பரிய உணவு வகை.முன்பு நாங்கள் அனைத்தையும் தயார் செய்த பின் உரலில் இட்டு இடிப்போம்.இப்போது உரல்கள் எல்லாம் மலை ஏறி விட்டதால்,மிக்ஸ்யில் சுலபமாக செய்யலாம்.முன்பு எல்லாம் 3 நாட்கள் வரை வெளியே வைத்து கொள்ளவோம்.இப்போது பொருள்கள் தரம் தெரியாததால் fridge இல் வைத்து சாப்பிடலாம்.பெண்களுக்கும்,வளரும் குழந்தைகளுக்கும் ஏற்ற டிபன் இது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum