அச்சு முறுக்கு
Tue Oct 18, 2016 8:47 am
அச்சு முறுக்கு
தேவையான பொருட்கள்:
மைதா - கால் கிலோ
தேங்காய் கெட்டி பால் - 400 மில்லி
சர்க்கரை - 5 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
தண்ணீர் - ஒரு டம்ளர்
உப்பு - ஒரு பின்ச்
கருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
1.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
2.அச்சு முறுக்கு செய்யும் கருவி கொண்டு எண்ணெயை சூடுப்படுத்தி சூடான எண்ணெயில் அச்சை முதலில் விட்டு அப்படியே மாவில் தோய்த்து எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கவும்.
3.இப்படியே எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள்:
மைதா - கால் கிலோ
தேங்காய் கெட்டி பால் - 400 மில்லி
சர்க்கரை - 5 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
தண்ணீர் - ஒரு டம்ளர்
உப்பு - ஒரு பின்ச்
கருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
1.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
2.அச்சு முறுக்கு செய்யும் கருவி கொண்டு எண்ணெயை சூடுப்படுத்தி சூடான எண்ணெயில் அச்சை முதலில் விட்டு அப்படியே மாவில் தோய்த்து எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கவும்.
3.இப்படியே எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.
Re: அச்சு முறுக்கு
Tue Oct 18, 2016 8:48 am
ராகி முறுக்கு: தீபாவளி ரெசிபி
அந்த வகையில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக ராகி முறுக்கை செய்து சுவையுங்கள். இந்த முறுக்கு சற்று சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு ராகி முறுக்கை எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். இங்கு ராகி முறுக்கை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1/4 கப் கடலை மாவு - 1/4 கப் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் எள் - 1/2 டீஸ்பூன் வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில ஒரு பௌலில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், எள், வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மென்மையாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் முறுக்கு உழக்கில் அந்த மாவை சிறிது வைத்து, பின் அதனை ஒரு காட்டன் துணியில் முறுக்கு போன்று பிழிய வேண்டும். அடுத்து பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், ராகி முறுக்கு ரெடி!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum