முந்திரி அல்வா
Mon Sep 12, 2016 8:24 am
தேவையான பொருட்கள்
முந்திரி பருப்பு – 1 1/2 கப்
சர்க்கரை – 3 கப்
நெய் – 3 /4 கிராம்
பால் – 1 /4 கப்
செய்முறை
முந்திரி பருப்புகளை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அலசிய முந்திரி பருப்புகளை பால் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து முந்திரி பருப்பு விழுது, சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
சிறுது சிறுதாகநெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
நன்றாக சுருண்டு வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.
பின்பு வாணலியை கீழே இறக்கி, வைக்கவும்
கலவை பாத்திரத்தில் ஒட்டாதவாறு கிளறவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum