கோதுமை அல்வா
Mon Sep 12, 2016 8:01 am
கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 7
உலர் திராட்சை - 5
நெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பின் அதில் மெதுவாக தண்ணீரை விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.)
கிளறும் போது, தண்ணீரை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 2-3 நிமிடம் கிளற வேண்டும். தண்ணீர் ஓரளவு வற்றியதும், அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை உருகும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்
மாவானது அல்வா பதத்திற்கு வரும் போது, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின் அதன் மேல் ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு: பால் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இதில் தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்து செய்யலாம். அவ்வாறு பாலை சேர்க்கும் போது, நன்கு காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பால் வாசனை அல்வாவின் சுவையையே மாற்றிவிடும்.
கோதுமை அல்வா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum