பவுலின் முதலாம் மிஷனெரி பயணம்
Thu Mar 21, 2013 8:49 pm
பவுல், பர்னபா, யோவான் மாற்கு ஆகியோர்
அந்தியோகியாவில் இருந்து புறப்படு, செலுக்கியாவில் கப்பல் ஏறி சீப்புரு
தீவில் உள்ள சாலமி பட்டணம் வந்தனர் தேவ வசனத்தை பிரசங்கித்த பின் பாப்போ
பட்டணம் வந்து செர்க்கியு பவுல் என்பவனிடம் சுவிசேஷம் அறிவித்தனர்.
அப்பொழுது எலிமா என்ற மந்திரவித்தைக்காரன் சுவிசேஷத்திற்கு தடையாய் இருந்தபடியால் பவுல் அவன் குருடனாகும்படி கடிந்துக் கொண்டார்.
பின்னர் கப்பல் ஏறி பெர்கே என்ற
பட்டணத்தில் இறங்கி சுவிசேஷத்தை அறிவித்தனர். யோவான் மாற்கு இங்கிருந்து
எருசலேமிற்கு திரும்பிவிட்டார்.
பின் அங்கிருந்து பிசிதியாவில் உள்ள
அந்தியோகியா வந்தனர். யூத ஜெபாலயங்களில் இயேசுவை பிரசங்கித்தனர். பலர்
பவுலை பின்பற்றினர். சில சுவிசேஷ எதிர்ப்பாளர்கள் கலகத்தை தூண்டிவிட்டனர்.
அதனால் இக்கோனியா பட்டணத்திற்கு வந்து
வசனத்தை போதித்தனர் அநேக அற்புத அடையாளங்கள் நடைபெற்றது. இக்கோனியாவில்
கலவரம் வருவதை அறிந்து லிஸ்திரா என்ற பட்டணத்திற்கு வந்து தேவ வசனத்தை
பிரசங்கித்தனர்.
லிஸ்திராவில் பிறவி சப்பானி ஒருவன்
எழுந்து அற்புதமாக நடந்தான். அதினால் அந்த பட்டணத்தார் தங்கள் தேவனே
மனிதனாக வந்து விட்டதாக கூறி பூமாலை சூட்டி எருது பலியிட்டனர். இவ்வளவு
நடந்தும், சுவிசேஷ எதிர்ப்பாளர்கள் முந்தைய பட்டணங்களிலிருந்து வந்து பவுல்
மேல் கல்லெறிந்து செத்துபோனான் என்று ஊருக்கு வெளியே இழுத்து போட்டனர்.
சீஷர்களின் ஜெபத்தால் எழுந்து தெர்பை என்ற பட்டணத்தில் சுவிசேஷத்தை அறிவித்தார்.
பல உபத்திரவங்கள் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று புத்தி சொன்னார்.
பவுலின் ஊழியத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்:
1. ஜெபம் ஆராதனை
2. சுவிசேஷத்தை அறிவித்தல்.
3. சீஷராக்குதல் (ஞானஸ்நானம்)
4. சபையாக கூட்டி மூப்பர்களை ஏற்படுத்தினர்.
5. ஜெபித்து தேவ கிருபைக்கு ஒப்புக்கொடுத்தனர்.
ஆறு முக்கிய பட்டணங்களின் எழுப்புதல்
1. பாப்போ 2. பெர்கே 3. பிசிதியா அந்தியோகியா 4. இக்கோனியா
5. லிஸ்திரா 6. தெர்பை
திரும்பி வந்த வழியே தெர்பை, லிஸ்திரா,
இக்கோனியா, அந்தியோகியா வந்து பெர்கேக்கு சமீபமான அத்தலியாவில் கப்பல் ஏறி
அந்தியோகியா வந்து சபையில் அறிக்கையாக சாட்சி சொன்னார்கள்.
1. ஜெபம் ஆராதனை
2. சுவிசேஷத்தை அறிவித்தல்.
3. சீஷராக்குதல் (ஞானஸ்நானம்)
4. சபையாக கூட்டி மூப்பர்களை ஏற்படுத்தினர்.
5. ஜெபித்து தேவ கிருபைக்கு ஒப்புக்கொடுத்தனர்.
ஆறு முக்கிய பட்டணங்களின் எழுப்புதல்
1. பாப்போ 2. பெர்கே 3. பிசிதியா அந்தியோகியா 4. இக்கோனியா
5. லிஸ்திரா 6. தெர்பை
திரும்பி வந்த வழியே தெர்பை, லிஸ்திரா,
இக்கோனியா, அந்தியோகியா வந்து பெர்கேக்கு சமீபமான அத்தலியாவில் கப்பல் ஏறி
அந்தியோகியா வந்து சபையில் அறிக்கையாக சாட்சி சொன்னார்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum