பாலைவனப் பயணம்
Thu Aug 21, 2014 12:34 pm
ஒரு வியாபாரியும் அவன் வேலைக்காரர்களும் கொடூர பாலைவனத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். இதுவரை யாரும் கடந்திராத பாலைவனப் பகுதி அது.
அந்த பாலைவனத்தைத் தாண்டியிருக்கும் ரத்தினபுரியை அடைந்துவிட்டால் வாழ்வு வழமாகிவிடும் என்ற ஆசையில் வியாபாரி பயணித்துக் கொண்டிருந்தான்.
பாதி தூரம் கடக்கும் முன்பே அவர்கள் கையில் இருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. இனி அவர்கள் பிழைப்பதற்கு ஒன்றும் இல்லாத சூழ்நிலையில் சிக்கிவிட்டனர்.
தங்களது ஒட்டகங்களுக்கும் தங்களுக்கும் உணவு கிடைக்காதா என அலைந்து திரிந்து களைத்துப் போனார்கள். அப்போது தூரத்தில் இரண்டு மூட்டைகள் கிடந்தன. அவர்கள் ஆர்வத்தோடு ஏதாவது உணவு கிடைக்கும் என நம்பி அதைப் பிரித்தார்கள். அதில் விலையுயர்ந்த நவரத்தின கற்களும் முத்துகளும் நகைகளும் இருந்தன. உணவு கிடைக்கும் என தேடினவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினது.
வியாபாரியை விட்டுப் பிரிந்து கொண்டிருந்த ஜீவனை நவரத்தின கற்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்து, நாவு வறண்டு மரித்துப் போனார்கள்.
உலகத்தில் உள்ள எந்த பொருளும் ஒரு மனிதனுடைய ஜீவனை காப்பற்ற முடியாது.
ஆகவே,
உலக பொருட்கள் மேல் அல்ல
உலகையே சிருஷ்டித்தவர் மேல் நம் நம்பிக்கையை வைப்போமாக!
உலக பொருட்கள் பின் அல்ல
உலக இரட்சகர் பின் செல்வோமாக!
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத்தேயு 16:26)
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் (யோவான் 6:51)
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum