வெட்கம் மற்றும் தயக்கம் காரணமாக
Tue Aug 16, 2016 9:45 pm
சில நாட்களாகவே மதன் வகுப்பறைக்கு தாமதமாக வந்துகொண்டிருந்தான். தாமதமாவதற்கு காரணம் கேட்டாலும் அவனிடமிருந்து பதில் வரவில்லை. தனியாக கூப்பிட்டு பேசினேன்.
" உங்க வீடு பள்ளியிலிருந்து 2 கீமீ தூரத்தில் தானே இருக்கிறது. 8.10 க்கு வீட்டை விட்டு கிளம்பினால் கூட 8.30 க்கு முன்னால் பள்ளிக்கு வந்து விடலாம்"
பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
"காலையில் எப்போ எழுந்திருப்பாய்?"
"6 மணிக்கு"
"எழுந்து என்ன செய்வாய்?"
"6.30 மணியிலிருந்து 7 மணிவரைப் படிப்பேன். பிறகு குளித்துவிட்டு பள்ளிக்கு வருவேன்"
" வீட்டில் சாப்பாடு செய்து தார லேட்டாகுமா?"
"மதிய சாப்பாடு கொண்டு வரமாட்டேன்."
"மதிய சாப்பாடு எங்கிருந்து சாப்பிடுவே?"
"மதியம் பன் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பேன்"
அவன் சாதாரணமாகச் சொன்ன இந்த வாக்கியத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு நாள் இரண்டு நாள் அல்ல இந்த மாத துவக்கத்தில் இருந்தே அவன் மதிய சாப்பாடு சாப்பிடவில்லை. சென்ற வருடம் கூட பெரும்பாலான நாட்களில் அவன் மதிய சாப்பாடு சாப்பிடாமல் இருக்கிறான்.
என் முன்னால் இருக்கும் என்னுடைய மாணவன் சாப்பிடாமல் பசியோடு இருந்திருக்கிறான். அதை நான் உணர்ந்துகொள்ளாமல் பசியோடு இருந்த அவனை படிக்க வற்புறுத்தியிருக்கிறேன். என் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது.
பிரச்சனையை தீர்க்க அவனை சத்துணவு அமைபபாளரிடம் அழைத்துச் சென்று சத்துணவு சாப்பிட வைக்க முயற்சி செய்தேன்.
அமைப்பாளர் சாப்பிடச் சொன்னால்லும் மதன் சாப்பிட விரும்பவில்லை. அவனுக்கு வெட்கம். எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களே எங்கள் பள்ளியில் மதிய உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள். அவர்களில் சிலர் கூட வீட்டுச் சாப்பாடு கட்டிக் கொண்டுவந்து விடுகிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனாகிய மதனுக்கு தனியாக சாப்பிட போக சற்று தயக்கம்.
"மதிய உணவு சரியில்லையா?" என கேட்டதற்கு நன்றாக இருப்பதாகச் சொன்னான். சாப்பிடும் மாணவர்களும் குறை எதுவும் சொல்லவில்லை. பசித்தாலும் சத்துணவை பள்ளியில் சாப்பிடுவதில் ஒரு தயக்கம் இருந்தது. சாப்பிடாமல் இருந்தால் நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் பாதிப்புக்களைப் பற்றி பேசினேன். மதியம் அவனைக் கூட்டிகொண்டு அங்கிருந்த தட்டில் அவனோடு சேர்ந்து சத்துணவு சாப்பிட்டேன். அவனுடைய தயக்கம் சற்று குறைந்தது. மறுநாள் சத்துணவு சாப்பிட பள்ளிக்கு தட்டுடன் வந்தான்.
பிறகு வகுப்பறையில் விசாரித்தபோது தான் தெரிந்தது பல மதன்கள் வகுப்பறைக்குள் இருந்தது.
அரசுப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுவாக இருக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மதிய சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பள்ளிக்கு வருவார்கள். ஆனாலும் ஒருவித வெட்கம் மற்றும் தயக்கம் காரணமாக மதியம் வழங்கும் சத்துணவை வாங்கிச் சாப்பிடாமல் இருப்பார்கள். இந்த வெட்கத்தை உடைக்க வேண்டுமானால் வெட்கப்படும் மாணவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் வகுப்பறைகளில் கற்றுக் கொடுப்பதை விட
கற்றுக் கொள்வது அதிகமாக இருக்கிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum