தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கல்யாண முருங்கை  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கல்யாண முருங்கை  Empty கல்யாண முருங்கை

Tue Mar 19, 2013 11:05 pm
தாவரப்பெயர் :- ERYTHRINA INDICA.

தாவரக்குடும்பம் :- FABACEAE.

பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, விதை, பட்டை ஆகியன.

கல்யாண முருங்கை தமிழமெங்கும் வேலிகளில் வைத்து வளர்க்கிறார்கள்.
மிளகுக்கொடிகளைப் படரவிட இதை வளர்ப்பார்கள். காப்பிப் பயிர்களுக்கு இடையில்
நிழலுக்காக வளப்பார்கள். இது சுமார் 85 அடி உயரம் வரை வளரக்கூடியது.

இதன் இலைகள் அகன்றும் பெரிதாகவும் இருக்கும். இதன் மலர்கள் அதிகசிவப்பாக
இருக்கும். இதன் இதழ்களை பெண்களின் உதடுகளுக்கு அக்காலத்தில் உவமையாக
ஒப்பிடுவார்கள்.

'முருக்கிதழ் புரையும் செவ்விதழ்' என வரும்.
உருட்டு விதைகளையும் முட்களையும் கொண்டமென்மையான கட்டைகளையும் உடைய மரம்.
விதைகள் கருப்பாக இருக்கும். முருக்க மரம் என்றும் வழங்கப்பெறும். கட்டைகளை
வெட்டி ஈரத்தில் நட்டால் உயிர் பிடித்துவளரும். விதை மூலமும்
இனப்பெருக்கம் செய்யப்படும்.

மருத்துவப்பயன்கள் :-

இது துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி,
தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய்
வேக்காடு, வயிற்றுப்புழு, ஆகிய வற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல்
செய்கையும் உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றி
யாகவும், விதை மலமிளக்கி குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட வலி தீரும்.

இதன் இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

இதன் இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள் குடித்து வர பெண் மலடு நீங்கி
கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சில் குணமாகும். உடலும் இளைக்கும்.

இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை
சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

இலைச் சாறு 30 மி.லி.யுடன் பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து அரிசி
கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம்
தவிர்க்கவும்.

60 மி.லி.இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை அருந்த பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மி.லி. பாலில்
ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு
குணமாகும்.

இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

சாறு 1 தேக்கரண்டி மோரில் கலந்து குடிக்க நீர்தாரை அழற்சி, நீர் எரிச்சல் தீரும்.

இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.
தோட்டங்களில் அலங்கார மலராக வளர்க்கப்படும் கல்யாணமுருங்கை ஏராளமான
மருத்துவகுணம் கொண்டுள்ளது. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும்,
அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இது துவர்ப்பும், கசப்பும் கலந்த
சுவையுடையது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
செயல்திறன்
மிக்க வேதிப்பொருட்கள்:இலைகள், விதைகள் மற்றும் மலர்களில் எரித்ரினைன்,
எரிசோவைன், எரிசோடைன், எரிசோனைன், எரிசோப்பின்,ஸ்டாக்கியாடின்,
எரிபிடின், ஃபெருலிக் அமிலம், கஃபியிக் அமிலம், அல்பினா, ஐசோப்ளவோன்,
டோகோசில் ஆல்கஹால் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படும். இலை சிறுநீர்
பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம்,
உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும்.
மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூகருப்பைக் குறை நீக்கியாகவும்,
பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும்
செயற்படும்.

வீக்கம் குறையும்
இலைகள் பேதி மருந்து
சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை
அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப்
பயன்படும். இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக்
கட்டி, வீக்கம் கரையும்.மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண
முருங்கையின் இலைச்சாறு 50 மில்லியை 10 நாள் சாப்பிட வலி தீரும். இதன்
இலைச்சாறு 15 மி.லி., ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள்
குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும். இலைச் சாறு 50 மி.லி., தேன் 20
மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

மலடு நீங்கும்
இதன் இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும்.
நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி,
வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும்,
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

கிருமிகள் வெளியேறும்
இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி
குளிக்க சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு
சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி
வெளியேறும்.கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30
மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா
குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.இலைச்சாறு 10 மில்லியுடன்
வெந்நீர் 10 மில்லி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கீரிப்பூச்சி
வெளியேறும். கபம், இருமல் தீரும்.1 தேக்கரண்டி மோரில் இலைச்சாற்றினை கலந்து
குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும். இலைச்சாற்றில் 5 அரிசி
எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

கண்நோய்க்கு மருந்தாகும்
மரப்பட்டைகல்யாண முருங்கையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன்
கொண்டவை. பட்டை துவர்ப்புள்ளது. ஜுரத்தைப் போக்கும், பூச்சிகளை அகற்றும்,
பாம்புகடிக்கு மருந்தாகும். ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு
மருந்தாகப் பயன்படும்.வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100
மில்லி பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மில்லி வீதம் கொடுக்க நிற்காத
வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

நன்றி: நலமறிய...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum