கல்யாண கலாட்டா
Thu May 02, 2013 10:20 pm
கல்யாணம் முடிஞ்சு 6 மாதம்
"என்னமா இத்தனை தொட்டுக்க இருக்கு.. இப்போ போயி ஆம்லெட் போட்டுட்டு இருக்க, அதுவும் சின்ன வெங்காயம் எல்லாம் போட்டு.. வாம்மா வந்து உக்காரு சேந்து சாப்பிடலாம்.. எவ்வளோ தான் நீ கஷ்டபடுவ.."
"கொஞ்சம் பொறுங்க.. நீங்க தொட்டுக்க ஆம்லெட் இல்லேன்னா சரியா சாப்பிடமாட்டீங்க.. அத்துவும் சின்ன வெங்காயம் போட்டாதான் டேஸ்ட் நல்ல இருக்கும்னு சொல்லுவீங்க... அதுக்குதான்"
கல்யாணம் முடிஞ்சு 1 வருடம்
"என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல் "
"சாம்பார்,பெரிய வெங்காயம் போட்டு ஆம்லெட்"
"அவ்வளோதானா"
"முடியலைங்க"
கல்யாணம் முடிஞ்சு 1 1 /2 வருடம்
"என்னம்மா இன்னைக்கு சாப்பிடலாமா "
"இருங்க இந்த சீரியல் முடியட்டும். என்னங்க,கொஞ்சம் பெரிய வெங்காயம் உறிச்சு குடுங்க ஆம்லெட் போடறேன் "
கல்யாணம் முடிஞ்சு 2 வருடம்
"என்னம்மா வெங்காயம் இல்லாம ஆம்லெட் போட்டு இருக்க. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல"
" ஒரு நான் இதை சாப்பிட்டா என்ன... எல்லாத்தையும் நானே செய்யணுமா"
கல்யாணம் முடிஞ்சு 3 வருடம்
"என்னம்மா இத்துநூன்டு இருக்கு, கலக்க கூட இல்ல, அப்படியே உடைச்சு புல்பாயிலா ஊத்தி இருக்க.."
" முட்டை என்ன நானா போடுறேன். கோழி போட்டது சின்னதா இருக்கு , நானா என்ன செய்ய. சும்மா குறை சொல்லிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க"
கல்யாணம் முடிஞ்சு 5 வருடம்
"என்ன ஆப்பாயில் போட்டு இருக்க. எனக்கு புடிக்காது தெரியும்ல"
"ஒருநாள் தின்ன ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊர்ல இல்லாத ஆதிசய புருஷன் எனக்கு எனக்கு வந்து வாச்சிருக்கு.
கல்யாணம் முடிஞ்சு 7 வருடம்
"என்னம்மா இன்னைக்கும் ஒன்னும் செய்யலியா "
"சாதம் வடிசுருக்கேன். FRIDGE -ல நேத்தைய கொழம்பு இருக்கு. முட்டையும் இருக்கு. ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க"
கல்யாணம் முடிஞ்சு 10 வருடம் அதற்கு மேலே...
"என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யணும் "
"அதையும் நான் தான் சொல்லனுமா. எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு தெரியாதா.. அதை செய்யுங்க"
நன்றி: சுபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum