சுவையான முருங்கை பாயசம்
Fri Sep 26, 2014 8:25 am
முருங்கை பூ பாயசம்
தேவையான பொருட்கள்:முருங்கை பூ - 1 பிடி
பால் - 2 டம்ளர்
ஏலக்காய் - சிறிதளவு
பாதாம் பருப்பு - 5
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
முருங்கை பூவினை எடுத்து காம்புகளை நீக்கி, பூக்களை சுத்தம் செய்து, வாணலியில் 2 ஸ்பூன் நெய்விட்டு வதக்க வேண்டும்.
பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து தோல் நீக்கிய முருங்கை பூவுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
பின்னர் பாலை கொதிக்க வைத்து, அதில் அரைத்து வைத்த முருங்கை பூ, பாதாம் விழுது சேர்த்து அதனுடன் தேன் மற்றும் ஏலப்பொடியை சேர்த்து கொதிக்க விடவும்.
சுவையான முருங்கை பாயசம் ரெடி.
மருத்துவ பயன்கள்:
கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுக்காமல் அதிக நேரம் கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கும், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், கண்கள் அதிகமாக சோர்வடையும். இதனால் கண்களில் எரிச்சலும், அதனை சுற்றி கருவளையமும் ஏற்படும். இம்முருங்கை பூவினை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கண் நரம்புகள் பலப்படும்.
கண்களுக்கு ரத்த ஓட்டமும் சீர்படும். கண்ணீர் சுரப்பிகள் சீராக செயல்படும். உராய்வு தன்மை குறையும். கண்பார்வை தெளிவு பெறும். கண்களில் உள்ள வெள்ளைப்படலம் அதிகரிக்காமல் கட்டுக்குள் வரும். ஆண்கள் முருங்கை பூவினை உணவில் சேர்த்துக் கொண்டால், நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் உபாதைகள் நாளடைவில் குறையும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum