பொட்டுக்கடலை வடை, இளநீர் பாயசம் !
Thu Jul 09, 2015 2:50 pm
படங்கள்: பொன்.காசிராஜன்
தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், கடலை மாவு - அரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 8, கசகசா - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் பொட்டுக்கடலையை லேசாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தேங்காய் துருவல், கசகசா, முந்திரிப் பருப்பு, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மையாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலைப் பொடி, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வடை மாவு பதத் தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பொட்டுக்கடலை வடை: சிறிதளவு ரவை சேர்த்தால் 'க்ரிஸ்பி’யாகவும் சுவையாகவும் இருக்கும்.
இளநீர் பாயசம்: இளநீருடன் வழுக்கையை சேர்த்து அரைக்கும்போது தலா இரண்டு பாதாம், முந்திரி சேர்த்துக் கொண்டால்... 'ரிச்’சான ருசி கிடைக்கும்.
பொட்டுக்கடலை வடை
செய்முறை: கடாயில் பொட்டுக்கடலையை லேசாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தேங்காய் துருவல், கசகசா, முந்திரிப் பருப்பு, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மையாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலைப் பொடி, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வடை மாவு பதத் தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
- சுபஸ்ரீ பரத்வாஜ், சென்னை-87
இளநீர் பாயசம்
தேவையானவை: இளநீர் வழுக்கை - அரை கப், இளநீர் - ஒரு கப், திக்கான பால் - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: இளநீருடன் வழுக்கை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் காய்ச்சவும். பால் நன்றாகக் காய்ந்ததும், மில்க்மெய்டை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறவும். பிறகு, அரைத்து வைத்துள்ள இளநீர்க் கலவையை பாலுடன் சேர்த்து இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’ என்று பரிமாறவும். ஏலக்காய் சேர்க்கக் கூடாது.
- ராஜலட்சுமி, மதுரை
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...பொட்டுக்கடலை வடை: சிறிதளவு ரவை சேர்த்தால் 'க்ரிஸ்பி’யாகவும் சுவையாகவும் இருக்கும்.
இளநீர் பாயசம்: இளநீருடன் வழுக்கையை சேர்த்து அரைக்கும்போது தலா இரண்டு பாதாம், முந்திரி சேர்த்துக் கொண்டால்... 'ரிச்’சான ருசி கிடைக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum