சுடிதார் அளவெடுக்கும் முறை
Sat Jul 30, 2016 12:11 am
தேவையானவை:
- சுடிதார் மெட்டீரியல்
- அளவு சுடிதார்
- கத்தரிக்கோல்
- சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
- தையல் மிஷின்
- நூல்
- இன்ச் டேப்
செய்முறை:
சுடிதார் தைக்க தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
தைக்க போகும் துணியை மடித்து போடுவது முக்கியமான விஷயம். அந்த துணியின் கரை உள்ள இருப்பக்கங்களை ஒன்றாக நீளவாக்கில் மடிக்கவும். நீளவாக்கில் மடித்திருக்கும் துணியின், டிசைன் உள்ள பக்கத்தை முன்பக்கம் இருப்பதுப்போல் மடிக்கவும். பின்பக்கம் உங்களுக்கு ப்ளையினாக உள்ள துணி வந்திருக்கும். இப்போது துணியின் மடித்த பக்கம் நம்மிடமும், கரை உள்ள பக்கம் நம்மிடமிருந்து எதிர்ப்பக்கம் இருப்பது போல் வைக்கவும். உங்களிடம் மடித்த பக்கத்தை பார்க்கும் பொழுது இரண்டு துணிகள் தனித்தனியாக இருப்பதுபோல் இருக்கும்.
மாதிரி சுடிதாரின் அளவுகளை முதலில் அளந்து தைக்க போகும் துணியில் குறிக்க வேண்டும். முதலாவது சுடிதாரின் உயரத்தை அளக்க, இன்ச் டேப்பின் ஸ்டீல் பகுதியை விட்டுட்டு தோள்பட்டையின் அளவிலிருந்து சுடிதாரின் அடி பகுதி வரையில் அளக்கவும்.
உயரம் 42 இன்ச் என்றால் அதனுடன் ஒரு இன்ச் கூட்டி 43 என்று எடுத்துக் கொண்டு அதை துணியில் குறிக்கவும்.
அளவு சுடிதாரின் இரண்டு கைகளும் வலதுப்பக்கத்தில் ஒன்றாக இருப்பது போல் மடித்து வைக்கவும். இப்போது முன்பக்க கழுத்தின் அளவை அளக்கவும். முன் கழுத்தின் உயரம் 5 1/2 இன்ச், அகலம் 2 1/2 என்று குறிக்கவும்.
மேல் டாப் துணியில் முதலில் முன்கழுத்தின் உயரம் மற்றும் அகலம் அளவை குறிக்கவும். அடுத்து சோல்டர் அளவு 3 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டவும். (காட்டன் என்றால் ஒரு இன்ச் கூட்டவும், சிந்தடிக் மெட்டீரியல் எனில் 1/2 இன்ச் கூட்டவும்.)
சுடிதாரின் முன் கழுத்து அகலத்தின் கடைசி முனையிலிருந்து கால் இன்ச் தள்ளி ஒரு புள்ளி வைத்து படத்தில் உள்ளதுப்போல் கோடு வரைந்து விடவும்.
சோல்டர் அளவு குறித்தப்பிறகு அதன் கடைசி முனையிலிருந்து கைக்குழி(அக்குள் பகுதி) வரை கைக்குழி உயரமாக அளக்கவும். இதில் 6 1/2 இன்ச் உள்ளது. அளவு சுடிதாரின் கைக்குழிக்கு கீழிலிருந்து உடம்பின் அகலப்பக்கத்தை அளக்க வேண்டும். வலதுக் கைகுழிலிருந்து இடது கைக்குழிவரை அளந்து 20 இன்ச் என்றால் அதனுடன் ஒரு இன்ச் கூட்டி 21 இன்ச் என்று கணக்கிட்டு, அதில் பாதியளவு 10 1/2 என்று தைக்க போகும் துணியில் குறிக்கவும்.
கைக்குழியின் உயரம், அகலம் வரைந்தபின் அந்த இரண்டு கோடுகளும் இணையும் இடத்திலிருந்து இன்ச் டேப்பால் 1 1/2 இன்ச் அளவு குறிக்கவும். அந்த பகுதியை மட்டும் வளைவாக வரைந்து விடவும்.
10 1/2 இன்ச் கைக்குழியின் அகலம் குறித்த இடத்திலிருந்து கீழ் நோக்கி 6 1/2 இன்ச் அளந்து அந்த இடத்தை குறித்துக் கொள்ளவும்.
இந்த 6 1/2 இன்ச் அளவை மையமாக வைத்து, டேப்பிலிருந்து ஒரு இன்ச் அளவு உள்பக்கம் வைத்துக் குறிக்கவும். கைக்குழியிலிருந்து இந்த ஒரு இன்ச் புள்ளி வரை படத்தில் உள்ள வளைவு போல் வரைந்துக் கொள்ளவும்.
அடுத்து அளவு சுடிதாரின் அடிப்பக்கத்தின் அளவை அளந்து குறிக்கவும். அளவு சுடிதாரில் 27 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டி 28 என்று குறித்து வைக்கவும். இப்போது தைக்க போகும் துணியில் குறித்து கொண்டிருக்கும் சுடிதாரின் உயரத்திற்கு கீழ், இந்த 28 இன்ச் அளவை பாதியாக கணக்கிட்டு 14 இன்ச் குறிக்கவும். அந்த பகுதியை சாக்பீஸால் ஒரு கோடு போட்டு வைக்கவும். முன்பு ஒரு இன்ச் விட்டு வரைந்த வளைவின் முனையிலிருந்து, சுடிதாரின் அடியில் குறித்த அகலம் வரை குறுக்கே ஒரு கோடு வரையவும்.
இப்போது அளவு சுடிதாரில் சைடு ஒபன் எத்தனை இன்ச் என்று அளக்கவும். இதில் 20 இன்ச்என்று உள்ளது. அவரவரின் தேவைக்கேற்ப சுடிதாரின் சைடு ஓபன் அளவை மாற்றி வைத்துக் கொள்ளவும்.
ஏற்கனவே தைக்கபோகும் துணியில் குறுக்கே வரைந்திருக்கும் கோட்டின் அடியிலிருந்து இன்ச் டேப்பை வைத்து 20 இன்ச் அளவை குறித்து அந்த கோட்டின் மேலேயே குறுக்கே ஒரு சிறிய கோடு போடவும்.
Re: சுடிதார் அளவெடுக்கும் முறை
Sat Jul 30, 2016 12:13 am
சுடிதார் டாப் வெட்டும் முறை
- சுடிதார் மெட்டீரியல்
- அளவு சுடிதார்
- கத்தரிக்கோல்
- சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
- தையல் மிஷின்
- நூல்
- இன்ச் டேப்
இப்போது அளவுகள் குறித்த பகுதியை வெட்ட வேண்டும். முதலில் சுடிதார் டாப்பின் அடியின் அகலம் பகுதியிலிருந்து வெட்டவும். அடுத்து சைடு ஓபன் பகுதியை வெட்டவும். சைடு ஓபனில் அளவுகள் குறிக்கும்போது குறுக்கே கோடு வரைந்த கோட்டையும் சிறிது வெட்டி விடவும்.
அடுத்து வளைவுகள் மற்றும் கைப்பகுதியை வெட்டி முடிக்கவும்.
இவ்வாறு முழுவதுமாக வெட்டி முடித்ததும் மீதி துணியை பத்திரமாக எடுத்து வைக்கவும். சுடிதாரின் முன்கழுத்து, பின் கழுத்துக்கு பட்டி தைக்கவும், கைப்பகுதியை வெட்டி எடுக்கவும் இந்த துணி தேவை.
அடுத்து சுடிதாரின் முன்கழுத்து பகுதியை படத்தில் குறித்த அளவின் படி வெட்டவும்.
அளவு சுடிதாரின் பின்கழுத்து உயரம், அகலம் அளந்து, முன்கழுத்திற்கு அடியில் உள்ள துணியில் குறிக்கவும். பின்கழுத்தை வட்டமாக வரைந்து விடவும்.
பின்னர் அதனையும் வெட்டி எடுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள சுடிதாரின் சோல்டர் அளவை வெட்டி விட்டு இரண்டு துணியையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அளவு சுடிதாரின் கைப்பகுதியின் அளவை அளக்க வேண்டும். கையின் உயரம் 6 1/2 இன்ச் அதனுடன் ஒரு இன்ச் கூட்டவும்.
பிறகு கைநுழைக்கும் பகுதியை அளந்து அதனுடன் ஒரு இன்ச் கூட்டவும்.
நறுக்கின துணியில் மீதமுள்ள துணியை தனிதனியாக பிரித்தெடுக்காமல் அதிகம் இடம் உள்ள பகுதியில் கையின் அளவை குறிக்கவும். துணியின் கரை உள்ள பக்கத்திலிருந்து இன்ச் டேப்பை வைத்து 7 1/2 இன்ச் என்று குறிக்கவும். கரை ஓரத்திலே கைநுழைக்கும் பகுதியின் அளவை குறிக்கவும். அதன் கீழ் 7 1/2 இன்ச் குறித்த அளவிலிருந்து 2 1/2 இன்ச் கழித்து 5 இன்ச் என்று குறிக்கவும். பின்னர் படத்திலுள்ள வளைவுப்போல் சாக்பீஸால் வரைந்துவிடவும்.
வரைந்த கைப்பகுதியை அப்படியே வெட்டி எடுக்கவும். பின்னர் தனிதனியாக இரண்டு கைப்பகுதி கிடைக்கும்.
கைப்பகுதி வெட்டிய பிறகு சற்று தள்ளி அந்த துணியின் மேல், சுடிதாரின் முன்கழுத்து பகுதியை வைக்கவும்.
சாக்பீஸால் அந்த துணியின் மேல் முன் கழுத்து பகுதியை மட்டும் வரைந்து வெட்டவும்.
இதேப்போல் பின் கழுத்துப்பகுதியையும் வரைந்து அதனையும் வெட்டி எடுக்கவும். இவை இரண்டும் கழுத்துப்பகுதியில் பட்டி வைத்து தைப்பதற்கு உள்ள துணியாகும்.
Re: சுடிதார் அளவெடுக்கும் முறை
Sat Jul 30, 2016 12:15 am
சுடிதார் டாப் தைக்கும் முறை
- சுடிதார் மெட்டீரியல்
- அளவு சுடிதார்
- கத்தரிக்கோல்
- சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
- தையல் மிஷின்
- நூல்
- இன்ச் டேப்
முதலில் முன்கழுத்து பட்டியின் ஒரத்தை கால் இன்ச் அளவு ஒரு மடக்கு மடக்கி, மீண்டும் ஒரு மடிப்பு வைத்து தையல் மிஷினில் ஒரு தையல் போடவும்.
இரண்டு கழுத்துப்பட்டி துணியின் இரு ஒரங்களையும் இவ்வாறு மடக்கி தைத்து வைக்கவும். கழுத்துப்பட்டி துணியின் கீழ்ப்பகுதி கரை உள்ளதால் இதனை மடித்து தைக்க வேண்டாம்.
இப்போது சுடிதாரில் டிசைன் உள்ள முன்கழுத்து துணியின் மேல், முன்கழுத்து பட்டி துணியை திருப்பி வைத்து " ப " வடிவத்திலேயே தைக்க வேண்டும்.
பின்னர் இந்த முன்கழுத்து பட்டி துணியை சுடிதாரின் பின்பக்கத்தில் வைக்கும் போது பட்டியின் நல்ல பக்கம் சுடிதாரின் பின்பகுதியில் இருக்கும். முதலில் தைத்த தையலுக்கு கால் இன்ச் தள்ளி மீண்டும் " ப " வடிவிலேயே தைக்கவும்.
இதேப்போல் சுடிதாரின் பின் கழுத்து பகுதியில், பின் கழுத்துப்பட்டியை வைத்து தைக்க வேண்டும்.
அடுத்து சுடிதாரின் கைப்பகுதியின் ஒரங்களை ஒரு இன்ச் அளவு மடித்து தைத்து வைக்கவும்.
சுடிதாரின் முன்கழுத்து பக்கத்தை பார்க்கும்போது உங்களுக்கு ஒரத்தை மடித்து தைத்துப்போல் இருக்கும்.
அடுத்து வெட்டிவைத்துள்ள சுடிதாரின் முன்பக்கத்தையும், பின் பக்கத்தையும் திருப்பி சோல்டரை ஒன்றாக சேர்த்து வைத்து அரை இன்ச் அளவு விட்டு தைக்கவும்.
இரு சோல்டரிலும் 2, 2 தையல்கள் போடவும்.
இப்போது கைப்பகுதியை இணைக்க வேண்டும். கைக்குழியின் ஒரத்தில் சுடியின் கைப்பகுதி துணியை வைத்து கால் இன்ச் தள்ளி தையல் போட வேண்டும்.
கைப்பகுதி தைத்து முடித்ததும் சுடிதாரின் ஒரங்களை தைக்க வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி சாக்பீஸால் முதலில் தைக்க வேண்டிய இடத்தை குறித்துக் கொள்ளவும்.
பின்னர் குறித்த இடத்தில் தையல் போட்டுக் கொள்ளவும். இதுப்போல் மற்றொரு பக்கத்திலும் தையல் போட்டு முடிக்கவும்.
அடுத்து சுடிதார் டாப்பின் அடி ஓரங்களை தைக்க வேண்டும். முதலில் முன்பக்க அடிப்பகுதியை ஒரு இன்ச் அளவு மடக்கி, மீண்டும் மடிப்பு வைக்கவும். மடித்த ஓரங்களை முதலில் தைத்துக் முடிக்கவும்.
இப்போது முதலில் தைத்த தையலுக்கு கீழ் கால் இன்ச் குறைவாக இடைவெளிவிட்டு கீழ் ஒரத்தில் மீண்டும் ஒரு தையல் போடவும். இதேப்போல் சுடிதாரின் பின்பக்கத்தின் அடிப்பகுதியை தைத்து முடிக்கவும்.
இனி சுடிதாரின் சைடு ஓபன்களை தைக்க வேண்டும். முன்பக்க சைடு ஒபனை 1/2 இன்ச் அளவு ஒரு மடக்கவும். மீண்டும் ஒரு மடிப்பு வைக்கவும். மடித்த ஓரங்களை முதலில் தைத்துக் கொண்டே வரவும்.
சைடு ஓபன் ஆரம்பிக்கும் இடம் வந்ததும் துணியை அப்படியே திருப்பிக் கொண்டு பின்பக்க சைடு ஒபனை இதேப்போல் தைத்து முடிக்கவும்.
படத்தில் உள்ளது போல் சைடு ஒபனை இவ்வாறு தைத்து முடிக்கவும்.
சுடிதார் டாப் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் தான் கற்றுக்கொண்ட சுடிதார் தைக்கும்முறையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum