சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை
Sat Jul 30, 2016 12:17 am
- அளவு சுடிதாரின் பேண்ட்
- பேண்ட் துணி
- கத்தரிக்கோல்
- சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
- தையல் மிஷின்
- நூல்
- இன்ச் டேப்
சுடிதார் பேண்ட் தைப்பதற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் அளவு சுடிதார் பேண்ட்டின் கால் உயரத்தை அளக்கவும். உயரத்தை அளக்கும் போது இன்ச் டேப்பின் ஸ்டீல் பகுதியை விட்டுட்டு அளக்கவும். இதில் உயரம் 34 இன்ச் உள்ளது. அதனுடன் ஒரு இன்ச் கூட்டவும்.
பேண்ட்டின் வயிறு பகுதிக்கு கீழ் இருப்பக்கமும் ஃப்ரில் வைத்து தைத்திருக்கும் நடுப்பகுதியை அளக்கவும். இவற்றிற்கும் ஸ்டீல் பகுதியை விட்டுட்டு அளக்கவும். 6 1/2 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டவும்.
அடுத்து தொடைப்பகுதியை அளக்க வேண்டும். இம்முறை அளக்கும்போது ஸ்டீல் பகுதியுடன் சேர்த்து அளக்கவும். தொடை அளவு 18 இன்ச் என்றால் அதனுடன் ஒரு இன்ச் சேர்த்துக் கொள்ளவும்.
காலின் அடிப்பகுதிக்கு 8 1/2 இன்ச் என்றால் ஒரு இன்ச் கூட்டவும்.
சுடிதார் பேண்ட்டின் கால்பகுதிக்கு மேலுள்ள வயிறு பகுதியை அளக்க வேண்டும். முதலில் வயிறு பகுதியில் உள்ள அகலம் 23 1/2 அதனுடன் ஒரு இன்ச் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்து வயிறு பகுதியில் உள்ள உயரம் 10 இன்ச் என்றால் 1 1/2 இன்ச் கூட்டவும். இனி சுடிதார் பேண்ட் துணியில் இந்த அளவுகள் எல்லாவற்றையும் குறிக்க வேண்டும்.
சுடிதார் பேண்ட் துணியில் வெட்டும் முறை : சுடிதார் பேண்ட் துணியை நீளவாக்கில் இரண்டாக மடித்து, அடியில் உள்ள முனையை மேல்நோக்கி மடிக்கவும். இந்த துணியின் கரை உள்ள பக்கத்தை உங்களிடம் இருப்பது போல் வைக்கவும். கரை உள்ள பக்கத்திலிருந்து அளந்து வைத்துள்ள பேண்ட்டின் உயரத்தை 35 இன்ச் என்று குறிக்கவும்.
அடுத்து பேண்ட் துணியின் மேல் ஓரத்திலிருந்து இன்ச் டேப்பை வைத்து தொடை அளவு 19 இன்ச் அளவை குறிக்கவும்.
கால் உயரத்துக்கு கீழ் காலின் அடிப்பகுதி அளவை 9 1/2 இன்ச் என்று குறிக்கவும்.
அடுத்து தொடை அளவு முடிந்த இடத்தில், பேண்ட் ஃப்ரில் வைத்த நடுப்பகுதி அளவு 7 1/2 இன்ச் குறிக்கவும்.
காலின் அடிப்பகுதி அளவிலிருந்து, நடுப்பகுதி அளவு வரை படத்தில் உள்ளது போல் ஒரு வளைவு வரைந்து அதனை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள பேண்ட் துணியில் வயிற்று பகுதியின் உயரம், அகலம் அளவை அளந்து குறித்துக் கொள்ளவும். பின்னர் அவற்றையும் தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
காலின் அடிப்பகுதி வெட்டிய பிறகு அதற்கு கீழுள்ள துணியை பட்டி தைப்பதற்காக காலின் அடிப்பகுதி அளவுக்கு சிறிய துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது வெட்டின கால்பகுதிக்கான துணி தனித்தனியாக இருக்கும்.
வயிறுப்பகுதிக்கான துணியை இவ்வாறு தனித்தனியாக மடித்து வைக்கும் போது ஒரு பக்கமுனை மட்டும் மடித்து வைத்தது போல் இருக்கும்.
Re: சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை
Sat Jul 30, 2016 12:18 am
சுடிதார் பேண்ட் தைக்கும் முறை
- அளவு சுடிதாரின் பேண்ட்
- பேண்ட் துணி
- கத்தரிக்கோல்
- சாக்பீஸ் (அ) க்ரையான்ஸ்
- தையல் மிஷின்
- நூல்
- இன்ச் டேப்
வெட்டிவைத்துள்ள பேண்ட் துணியை தைப்பதற்கு தயாராக எடுத்து வைக்கவும்.
முதலில் வயறுப்பகுதிக்கான இரு துணியையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும். அதில் ஒரு பகுதியின் ஓரத்தை மட்டும் கால் இன்ச் தள்ளி தையல் போட்டு முடிக்கவும்.
அடுத்த பகுதியை தைக்க ஆரம்பிக்கும்போது இரு துணிகளின் ஒரத்தை தனிதனியாக ஒரு மடிப்பு வைத்து மீண்டும் மடித்து படத்தில் கோடிட்டு காட்டியது போல் குறுக்கே தையல் போடவும். இந்த தையலை போட்ட பின்னர் அதன் கீழ் ஓரங்கள் இரண்டையும் சேர்த்து தைக்கவும்.
இதனை தைத்து முடித்த பின்புதான் நாடா கோர்ப்பதற்கான பகுதியை தைக்க வேண்டும். வயிறுப்பகுதிக்கான மேல்பக்கத்துணியை ஒரு இன்ச் அளவு மடக்கி ஓரத்தை தைக்கவும்.
இப்போது நாடா கோர்ப்பதற்கான வயிற்று பகுதி தயார்.
அடுத்து கால்பகுதிக்கான பட்டியை வைத்து தைக்க ஆரம்பிக்கவும். முதலில் கால்பகுதிக்கான அடிப்பகுதியை நல்ல பக்கத்தில் வைத்து, அதன் மேல் பட்டி துணியை திருப்பி வைத்து ஓரத்தை முதலில் தைக்கவும்.
பிறகு கால்பகுதியை திருப்பி வைக்கவும். பட்டி துணியின் முனையை கால் இன்ச் அளவு உள்நோக்கி மடித்து கால்பகுதி துணியுடன் சேர்த்து வைத்து தையல் போட்டு முடிக்கவும்.
இப்போது கால்பகுதியை நல்லபக்கத்திற்கு திருப்பி பட்டி தைத்த பகுதியை பார்க்கும்போது ஒரு தையல் போட்டது போல் இருக்கும். முதலில் உள்ள தையலுக்கு கீழ் மீண்டும் ஒரு தையல் போட்டு முடிக்கவும். இதேப்போல் மற்றொரு கால்பகுதிக்கான பட்டித்துணியையும் தைத்து வைக்கவும்.
கால் அடிப்பகுதிலிருந்து தொடைப்பகுதி வரை உள்ள ஓரங்களை தைக்கவும். மற்றொரு கால்பகுதிக்கான துணியை தைத்து முடிக்கவும்.
இப்போது பேண்ட்டின் நடுப்பகுதி அளவு தைக்கப்படாமல் இருக்கும். தைத்து வைத்திருக்கும் பேண்ட் துணியின் இரு பகுதிகளை படத்தில் உள்ளது போல் பிரித்து வைத்து ஓரங்களை தைக்கவும்.
கால்பகுதியின் முன், பின் இரண்டு பகுதியிலும் ஃப்ரில் வைத்து தைக்க வேண்டும். முதலில் முன்பக்க கால்பகுதி துணியில் ஒரொரு ஃப்ரில்லாக மடக்கி மடக்கி தைத்து கொண்டே வரவும். ஒரு 10 ஃப்ரில் தைத்து முடித்ததும் சாதாரணமாக தையல் போட்டு கொண்டே பின்பக்க கால்பகுதிக்கு வரவும். முதலில் தைத்த ஃப்ரிலுக்கு நேராக பின்பக்கத்திலும் ஃப்ரில் வைத்து தைக்கவும்.
இப்போது வயிறுப்பகுதிக்கான துணியையும், ஃப்ரில் வைத்து தைத்த கால்பகுதிக்கான துணியை நல்ல பக்கத்திற்கு திருப்பி வைக்கவும். ஸ்ப்ரில் வைத்து தைத்த கால்பகுதி துணி, வயிற்றுப்பகுதி துணியை விட அதிகமாக இருந்தால் இன்னும் கூடுதலாக இருபக்கங்களிலும் ஃப்ரில் வைத்து தைத்துக்கொள்ளவும்.
தைத்து வைத்துள்ள வயிற்றுப்பகுதிக்கான துணியை தலைக்கீழாக திருப்பி, அதனுள் கால்பகுதியை நுழைத்து வைக்கவும் (படத்தில் உள்ளது போல்).
மேலே சொன்னவாறு துணியை திருப்பி வைத்து ஒரு இன்ச் தள்ளி சுற்றிலும் இரண்டு தையல் போட்டு முடிக்கவும்.
சுடிதார் பேண்ட் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் தான் கற்றுக்கொண்ட சுடிதார் தைக்கும்முறையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர்.
Re: சுடிதார் பேண்ட் அளவெடுக்கும் முறை
Mon Aug 08, 2016 5:17 pm
சுடிதாரில் - லேஸ் மற்றும் மணிகள் வேலைப்பாடு செய்வது எப்படி?
பிளைன் துணி சாட்டின், வெல்வெர், இன்னும் ஜரி வொர்க் உள்ள பிளைன் சுடிதார் தைக்கும் போது அதை ரிச்சாக மாற்ற உள்ளே சின்ன சிம்பிள் வொர்க்குகள் கொண்டு கிராண்டாக பார்டிக்கு போடுவது போல் தைக்கலாம்.
அதில் சிம்பிள் அண்ட் ஈசியாக இது போல் பிளெயின் சுடிதாரில் டாப்பில் கழுத்து, கைக்கும் , சல்வார் பேண்டில் கால் கிட்டயேயும்,
துப்பட்டாவின் ஓரங்களிலும் மணி அல்லது வித விதமான கலர்களில் லேஸ்களும் வைத்து தைத்தால் ரிச் லுக்காக இருக்கும்
மணி தைக்கும் முறை கழுத்து கை சைட் ஓப்பனில் கலருக்கு தகுந்த வாறு மணிகளை வைத்து ஒரு செண்டி மீட்டர் இடைவெளியில் மணிகளை வைத்து தைக்கவும்.
பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.
லேஸும் வித விதமாக (அ) கலரில் கை , கழுத்து, சுடிதார் டாப்பின் சைடுகளில்,கால் பாட்டத்தில் வைத்து தைத்தால் மிகவும் நல்ல இருக்கும்.
அதே போல் ஷாட் டாப் தான் இப்போது பேமஸ், சில பேர் லாங்க் டாப்ஸ் தான் விரும்புவார்கள், எடுக்கும் துணி உயரம் பத்தாமல் போனால் கீழே ஒரு ஜான் அளவில் வெட்டி விட்டு இடையில் தேவையான அளவில் ஒரு இன்ச் முதல் முன்று இன்ச் வரையிலான லேஸ் களை இனைத்து தைக்கலாம். இப்படி தைப்பதால் உயரத்தை கூட்டலாம். அதே போல் கழுத்து பெரியதாகி விட்டாலும் லேஸ்களை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம் புது பேஷானாகவும் இருக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum