குழந்தையை வளர்க்கும் முறை
Fri Aug 02, 2013 11:05 pm
1. குழந்தைகள் உங்களைப் போலவே சாப்பிடவேண்டும் என நினைக்காதீர்கள். அவர்கள் சாப்பிடும்போது உணவு சிந்தும். உடலெல்லாம் அழுக்காகும். அதற்காக குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ தவறு. இது குழந்தைகள் உணவை வெறுக்க ஒரு காரணமாகிவிடும்.
2. குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் அளவு ரொம்ப முக்கியம். எந்த அளவுக்கு குழந்தைக்குத் தேவையோ அந்த அளவுக்கு மட்டும் ஊட்டுங்கள். “இன்னும் ஒருவாய் சாப்பிட்டா நல்லது தானே” என்பதெல்லாம் தவறான எண்ணங்கள்.
3. குழந்தைகள் அவர்களாகவே உண்ணப் பழக்குங்கள். அவர்களுடைய உண்ணும் ஆர்வத்தை இது அதிகப்படுத்தும். உணவு சிந்தும், டேபிள் அழுக்காகும், ரொம்ப நேரமாகும். என்றெல்லாம் கவலைப்படாதீர்கள்.
4. கொஞ்சம் சோறு சாப்பிடும்மா சாக்லேட் வாங்கி தரேன். கொஞ்சம் கீரை சாப்பிடும்மா குர்குரே வாங்கி தரேன். என்பதெல்லாம் அம்மாக்கள் செய்யும் தவறுகள். குழந்தை என்ன நினைக்கும் ? சோறும், கீரையும் மோசமானவை. அதை எப்படியாவது சமாளிச்சுட்டா சூப்பர் சாக்லேட், குர்குரே கிடைக்கும் என்று தானே ? இது குழந்தைகளுக்கு சோறு, கீரை இவற்றின் மீதெல்லாம் வெறுப்பு வர காரணமாகிவிடும்.
5. என் பிள்ளைக்கு இனிப்பே கொடுக்கமாட்டேன். என்று கர்வப்படும் அம்மாக்களே, கவனம் தேவை. குழந்தைகளுக்கு எல்லாம் தேவை. இனிப்பும் குறிப்பிட்ட அளவு கொடுப்பதே நல்லது. இல்லையேல் எப்போதேனும் இனிப்பைச் சாப்பிட ஆரம்பிக்கும் போது வட்டியும் முதலுமாய் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.
6. 90 – 10 முறையை உணவில் கடைபிடியுங்கள். அதென்ன 90 – 10 ? சிம்பிள். 90 சதவீதம் உணவுகள் ஆரோக்கியமானவையாய் இருக்கட்டும். 10 சதவீதம் இனிப்பு, பொரியல், சாக்லேட் என இருக்கலாம் தப்பில்லை.
7. எப்பவுமே ஏதாச்சும் கொறிச்சுகிட்டே இருந்தா தான் குழந்தை வளரும் என்பது மிகவும் தவறு. குழந்தைகள் உணவு உண்ண வேண்டிய நேரத்தில் உணவு உண்ண வேண்டும். சும்மா கொறித்துக் கொண்டே இருந்தால் சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவு சாப்பிட முடியாது.
8. குழந்தைகளுக்கு முன் மாதிரிகையாய் இருங்கள். உங்களுக்கு ஒரு டைப் சாப்பாடு, குழந்தைக்கு வேறு மாதிரி என்பது சரி வராது. அதாவது நீங்கள் சிப்ஸும் சாப்பிட்டு கோக்கும் குடித்தால், குழந்தையும் அதையே விரும்பும்.
9. ஜெர்னல் பீடியாட்ரிக் ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, எனர்ஜி டிரிங்க்ஸ், இதெல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தானவையாம். 100 % பழச்சாறு என்று ஜிகினா வேலை காட்டும் விளம்பரங்களில் நம்ப வேண்டாம். நீங்களே பழங்கள் வாங்கி குழந்தைகளுக்குக் கொடுங்கள். அதுவே பெஸ்ட் !
10. ஒரே மாதிரி சாப்பாடு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடாது. குறைந்தபட்சம் அதன் ஸ்டைலையாவது மாற்றுங்கள். கொஞ்சம் ஷேப்பை மாற்றுங்கள். உதாரணமாக, குழந்தைக்கு எழுத்துக்கள் வடிவத்திலோ, படகு, பூ போன்ற வடிவங்களிலோ பூரி சுட்டு கொடுங்கள். பிள்ளைகள் கேட்டுக் கேட்டு சாப்பிடுவார்கள்.
நன்றி: உங்களுக்கு ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum