இனிமேல் யூடியூப்பில் வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி இத கொஞ்சம் தெருஞ்சுக்குங்க!
Thu Jul 14, 2016 10:07 pm
யூடியூப் என்பது ஓர் பெரிய ஊடகமாக வளர்ந்துவிட்டது. தனியாக டிவி ஆரம்பிப்பதற்கு பதிலாக உங்கள் நண்பர்கள் நாள்வரை சேர்த்துக் கொண்டு செலவே இல்லாமல் ஓர் சேனல் யூடியூப்பில் ஆரம்பித்துவிடலாம்.
சரியான பதிவுகள் பதிவேற்றம் செய்து, பயனாளிகளை அதிகம் சேர்த்துவிட்டால் அதன் மூலம் நீங்கள் லாபமும் பார்க்கலாம். கூகுளுக்கு அடுத்த விளம்பரம் மூலம் பெரியளவில் வர்த்தகம் ஈட்டும் ஓர் ஊடகமாக யூடியூப் திகழ்கிறது.
கூகுளின் ஓர் அங்கம் தான் யூடியூப் என்பது பெரும்பாலும் நெட்டிசன்கள் அனைவரும் அறிந்தது தான். இனி, யூடியூப் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள் பற்றி காணலாம்
உண்மை #1
ஒவ்வொரு நிமிடமும் யூடியூபில் நூறு மணி நேரத்திற்கான காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
உண்மை #2
யூடியூப் ஏறத்தாழ ஒரு பில்லியனுக்கும் மேலான பயனாளிகளை வைத்துள்ளது. இது இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.
உண்மை #3
முதல் யூடியூப் பதிவு கடந்த ஏப்ரல் 23, 2005 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த காணொளியில் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் தோன்றியிருந்தார்.
உண்மை #4
பேபால் நிறுவனத்தின் மூன்று முன்னாள் பணியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்தது தான் யூடியூப்.
உண்மை #5
யூடியூப்துவங்கிய 18 மாதத்தில், கூகுல் அதை 1.65 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.
உண்மை #6
கங்கம் ஸ்டைல் பாடல் பதிவு தான் யூடியூப் காணொளி பார்வை எண்ணிக்கை மேம்படுத்த முக்கியமான காரணியாக இருந்தது. அந்தளவிற்கு அந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து சாதனை படைத்தது.
உண்மை #7
கூகுளுக்கு அடுத்து உலகின் பெரிய சர்ச் இன்ஜினாக திகழ்ந்து வருகிறது யூடியூப். இது, பிங், யாஹூ போன்றவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
உண்மை #8
யூடியூப்-ல் "Do the Harlem shake" என சர்ச் செய்து பாருங்கள். யூடியூப் உங்களை ஒருசில நொடி ஆச்சரியப்படுத்தும்.
உண்மை #9
யூடியூப்-ல் மிகவும் அன்லைக் செய்யப்பட்ட காணொளி ஜஸ்டின் பைபரின் பேபி பாடல் தான். இதற்கு 64 லட்சம் பேர் அன்லைக் செய்துள்ளனர்.
உண்மை #10
யூடியூப்-ன் மிக பிரபலமான 1000 காணொளிகளில் 60% காணொளிகள் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டவை ஆகும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum