இனிமேல் திராட்சையின் விதைகளை ஒதுக்காம சாப்பிடுங்க !!
Fri Mar 27, 2015 2:05 pm
பண்டைய காலம் முதல் இன்றுவரை நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பழரசங்களுள் திராட்சை பழரசம் மிக முக்கியமானது.
பொதுவாக திராட்சை பழ ரசங்களை தயாரிக்கும் போது, திராட்சையின் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் கொட்டையை தூக்கி எறிந்து விடுவோம்.
ஆனால், இனிமேல் திராட்சை கொட்டைகளை தூக்கி எறியாதீர்கள். ஏனெனில், திராட்சை சதைகளில் கிடைக்கும் மிகப் பெரிய சத்து புரோ ஆன்தோ சயனிடின் என்பதாகும். இதையே புரோ சயனிடின், பைக்னோ ஜெனால் என்பதுண்டு.
இந்த புரோ ஆன்தோ சயனிடின் திராட்சை சதைகளில் 20 சதவீதம் உள்ளது. ஆனால் அதன் விதைகளில் 80 சதவீதம் உள்ளது. இந்த வியக்கத்தக்க செய்தியை தெரிந்த பின்பு விதைகளை விட்டு சதைகளை தின்பதால் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை தெரிந்துகொள்ள முடிகிறதா.
கடந்த நாற்பது ஆண்டுகளாக, திராட்சை விதைகளின் மகத்துவத்தை அறிந்த பிரான்ஸ் நாட்டுக்காரர்கள், அதனை ஒதுக்காமல் சாப்பிட்டு வருகின்றனர். இதனால், அந்த நாட்டில் மாரடைப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெறுமளவில் குறைந்துள்ளது.
திராட்சை விதை சாற்றினை இயற்கை உணவு என ஜப்பான் அங்கீகரித்துள்ளது.
அமெரிக்க நாட்டில் பயன்படுத்தும் மூலிகை மருந்துகளில் திராட்சை விதைகள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடப் பட வேண்டிய ஒன்று.
கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 சதவீதமாக உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது ஆனால் அவற்றினால் கிடைக்கும் அளவோ மிகமிக குறைவு.
திராட்சை விதை வைட்டமின் இ சத்தை விட ஐம்பது விழுக்காடும், வைட்டமின்-சியை விட இருபது விழுக்காடும் அதிக சக்தியுள்ளது.
திராட்சை விதை ரத்தக் கொதிப்பு நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.
ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது. மேலும் அடைப்பை ஏற்படுத்த கூடிய தேவையற்ற கொலஸ்டிராலை கரைக்கிறது.
திராட்சை விதை ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.
சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.
பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது.
எனவே, இவ்வளவு மகத்துவம் நிறைந்த திராட்சை விதைகளை, இவ்வளவு நாளாக தூக்கி எறிந்து விட்டோமே என வருந்தாமல், இனிமேலாவது திராட்சை விதைகளை சாப்பிடுங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum