மரியாள் யார்? மரியாளை வணங்கலாமா?
Sat Jul 02, 2016 11:03 pm
மரியாள் யார்? மரியாளை வணங்கலாமா?
"கிருபை பெற்றவளே வாழ்க,
கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்"
- லூக்கா 1:28
மரியாள் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர். இயேசு கிறிஸ்துவை கருத்தாங்கி பாலூட்டி வளர்த்த மேன்மைக்குரியபெண். இறைவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் அவரை வணங்குதல் சரியா? மரியாளின் நாமத்தில் ஜெபங்களை செய்வது சரியா?
வேதம் என்ன கூறுகிறது?
1. மரியாள் தெய்வமா?
மரியாள் என்ன கூறினார்?
"அதற்கு மரியாள்:இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின் படி எனக்கு ஆகக் கடவது என்றாள்" - லூக்கா 1:38
மரியாள் தன்னை ஆண்டவரின் பணிப்பெண் என்று கூறி பெருமை கொண்டார். திருமணத்திற்கு முன்பே கருத்தரித்தல் தனக்கு இழிவை உண்டாக்கும் என்பதை அறிந்தும் இறைவன் சொல்லுக்கு கீழ்ப்படிந்து ஏசுநாதரை பெற்றெடுத்தார். நிச்சயமாக, கிறிஸ்தவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல உதாரணமாக விளங்கினார். மரியாள் விரும்பிய நிலை தெய்வீகம் அல்ல, இறைவனுக்கு பணிப் பெண்ணாய் விளங்குதலே.
2. மரியாள் தன்னை நோக்கி வேண்டுதல் செய்யலாம் என்றாரா?
"அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி:அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்என்றாள்" - (யோவான் 2:5)
மரியாள் இயேசுவை நோக்கி நமது எண்ணத்தை திருப்பினார்.அவர் உங்களுக்கு என்ன கூறுகிறாரோ அதன் படி செய்யுங்கள் என்றார்.
3. மரியாள் எதனால் பாக்கியவதி? அவரது தாய்மையா கீழ்ப்படிதலா?
"அவர் தம்முடைய அடிமையின்தாழ்மையைநோக்கிப் பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்" - லூக்கா 1:48
மரியாள் இறைவன் சொல்லுக்கு கீழ்படிந்து தன் மேல் வரும் நிந்தனைகளை பொருட்படுத்தாமல் திருமணத்திற்கு முன்பே கருத்தாங்க சம்மதித்தார்.மரியாள் ஏசுநாதரை பெற்ற தன் நிமித்தம் அடைந்த பாக்கியத்தை விட இறைவன் சொல்லுக்கு கீழ்படிந்து நடந்ததே அவருக்கு அதிக பாக்கியத்தை தருகிறது. அவரது தாய்மையை விட கீழ்ப்படிதலே அதிக பாக்கியமிக்கது.
"அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர்பாலுண்ட முலைகளும் பாக்கியம் உள்ளவைகள்என்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக் கொள்ளுகிறவர்களேஅதிக பாக்கியவான்கள்என்றார்" -
(லூக்கா 11:27,28)
4. மரியாள் எவ்வாறு ஏசுவிற்கு தாயாகிறார்?
"எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது, அவளுடைய வயிற்றில் இருந்தபிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே
நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்,
உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது, இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று."விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும்"என்றாள்" - (லூக்கா 1:41-45)
#இயேசு தன்னை பெற்றதினால் மரியாளை தாயாக கருதாமல், இறைவன் சித்தத்திற்கு கீழ்படிந்ததன் காரணமாகவே தன் தாயாக கருதினார். மரியாள் தன் விசுவாசத்தினாலே ஆண்டவரின் தாய் என்ற பாக்கியத்தை அடைகிறார்.
"அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும்இவர்களே! தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்" - (மாற்கு 3:31-35)
5. மரியாளின் பெயரில் ஜெபிப்பது சரியா? பரிந்து பேசுபவர் யார்?
"தேவன் ஒருவரே,தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே" - (1 திமோத்தேயு 2:5)
ஜெபங்களை ஏறெடுக்க வேண்டியது கிறிஸ்துவின் நாமத்தில். நமக்காக பரிந்து பேசுபவர் அவரே.
6. மரியாள் பிறப்பிலேயே பாவத்தை வென்றவரா? மரியாள் என்ன கூறினார்?
"உனக்கும் ஸ்திரீக்கும்,உன்
வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்"
(- ஆதியாகமம் 3:15)
ஆதியாகமம் 3:15-இல் குறிப்பிடப்படுபவர்கள் மரியாளும் ஏசுநாதரும் தான். ஆனால் ஆதியாகமம் 3:15 மரியாளின் அமலோற்பவத்தை கூறவில்லை. ஸ்திரீக்கும் சாத்தானிற்கும் உள்ள பகைக்கு மரியாள் பிறப்பிலேயே பாவத்தை வென்றவர் என்ற கணிப்பு சரியல்ல. கிறிஸ்துவை ஏற்ற அனைவரும் சாத்தானின் பகைவர்களே.
"தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருங்கள்,விழித்து இருங்கள்; ஏனெனில்,உங்கள் எதிராளியாகிய பிசாசானவன்கெர்ச்சிக்கிறசிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்" -
(1 பேதுரு 5:
கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் பாவத்தில் ஜீவித்தவர்கள் தான். எப்பொழுது கிறிஸ்துவை ஏற்று மனந்திரும்புகிறார்களோ அப்பொழுதே அவர்கள் சாத்தானின் பகைக்கு ஆளாகுகின்றனர்.
"நாம் பாவஞ்செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யர் ஆக்குகிறவர்களாய் இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது" - 1 யோவான் 1:8
பிறப்பிலே பாவத்தை வென்றவர் ஏசுநாதர் மட்டுமே. மரியாளின் அமலோற்பவம் வேதத்தில் இல்லவே இல்லை,அனைவரது பாவத்தையும் போக்கி இரட்சிக்கவே இயேசு வந்தார். மரியாள் விதிவிலக்கு அல்ல.மரியாள் இரட்சிப்பு தனக்கும் உரியது என்றே கூறினார்.
"என் ஆவிஎன் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது" - (லூக்கா 1:47)
7 மரியாளிற்கு இயேசு எவ்வாறு விடைகொடுத்தார்?
"இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி:ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்" - (யோவான் 19:25,26)
மரண தருவாயிலும் தனக்கு கருவறை அளித்த மரியாளை ஏசுநாதர் மறக்கவில்லை. தான் மரியாவின் உரிமைக்குரிய மைந்தனல்ல என்பதை உணர்த்தி தன் அன்புச் சீடரின் அரவணைப்பில்,மரியாளை விட்டு சென்றார். ஏசுநாதருக்கும் மரியாளிற்கும் இருந்த உலக உறவு முறிந்தது. இயேசு மரியாளிற்கு இரட்சகராகவும் தேவனாகவும் மாறினார்.
8. மரியாள் தேவாயலத்தின் தாயா? பரலோக ராணியா?
அங்கே இவர்கள் எல்லாரும், ஸ்திரீகளோடும்,இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடும் கூடஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்து இருந்தார்கள் - (அப்போஸ்தலர் 1:14)
மரியாள் எப்பொழுதும் தன்னை தேவாலயத்தின் தாயாக கருதவில்லை. பரிசுத்த வேதமும் மரியாளை தேவாலயத்தின் தாய் என்று கூறவில்லை. மரியாள் ஒரு சாதாரண சீஷையாகவே பிற மக்களோடு தேவனை தொழுதார்.
9. மரியாள் வெளிப்படுத்தின விசேசத்தில் கூறப்படும் பெண் யார்?
வெளிப்படுத்தின விசேசம் 12 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் பெண் மரியாள் அல்ல. அப்பெண் இஸ்ரேல் நாட்டை குறிக்கிறார்.மரியாள் ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்க பெற்றவர். எந்த பெண்ணுக்கும் கிடைக்காத பாக்கியம் மரியாளிற்குகிடைத்தது. இறைவனை காருத்தாங்கி வளர்த்த பெருமைக்குரியர் மரியாள். மரியாளை வணங்குதல் தவறு. துதிகளுக்கு பாத்திரர் தேவனே.
வேதாகம வல்லுனர்கள்
///////////////////////////////////
★ அஸ்தரோத் என்கிற அசுத்த ஆவியைதான் மரியாளாக சாத்தான் கான்ஸ்டைடன் மன்னன் மனதில் புகுத்தி அங்கங்கே மரியாள் பெயரில் அற்புதம் நடைபெறுகிறது. கண்ணீர் வடிகிறது – இரத்தம் வடிகிறது – கண் சிமிட்டுகிறது. இனி கடைசி காலங்களில் வானத்திலே மரியாளின் உருவத்தை சாத்தான் காண்பிக்க வைப்பான் உலகம் ஏமாறும். எச்சரிக்கையாய் இருங்கள்
Re: மரியாள் யார்? மரியாளை வணங்கலாமா?
Sat Jul 02, 2016 11:12 pm
போப்பாண்டவர் சொன்னாராம் மரியாள் மரிக்க வில்லை என்று..!!
உடனே வேத வசனங்களை மறந்து மரியாளை கடவுளாக்கினார்களாம்....!!!
- எவ்வளவு பெரிய அறியாமை??!!
மரித்தவர்கள் யாரும் கடவுளை துதிக்க முடியாது என்று வேத வசனம் இவ்வளவு தெளிவாக இருக்கும் போது மரியாளே, சூசையே, செபத்தியானே எங்களுக்காக வேண்டி கொள்ளும் என்று கூப்பாடு போடும் கூட்டத்தை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது... மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
சங்கீதம் 115 :17
மரித்தவர்கள் யாரும் கடவுளை துதிக்க முடியாது என்று வேத வசனம் இவ்வளவு தெளிவாக இருக்கும் போது மரியாளே, சூசையே, செபத்தியானே எங்களுக்காக வேண்டி கொள்ளும் என்று கூப்பாடு போடும் கூட்டத்தை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது... மிகவும் சரியான பதில் விக்கிரக ஆராதனைதேவனுக்கு அருவருப்பானவை ....... இ்ப்படி இருந்தும் இந்த கத்தோலிக்க சகோதரர்களுக்கு விழங்கவில்லை எனபது தான் வருத்தம்.....
Permissions in this forum:
You cannot reply to topics in this forum