யார் மேய்ப்பர்? யார் விசுவாசி?
Sun Apr 26, 2015 6:40 am
யார் மேய்ப்பர்? யார் விசுவாசி? என்ற கேள்வியை நண்பன் ஒருவன் கேட்டான்.
எங்கள் குழுவின் நகைச்சுவை மன்னன் குமார் சொன்னான்: " 6 நாள் வேலை செய்து 1 நாள் ஓய்வெடுத்தால் பிலீவர், 1 நாள் மட்டும் வேலை செய்து 6 நாள் ஓய்வெடுத்தால் பாஸ்டர்.. "
இதை கேட்டதும் எல்லோருமே சிரித்து விட்டோம். அதன் பின் எப்போதும் போல கலகலப்புடன் போய்க் கொண்டிருந்தது அந்த டீ கடை சந்திப்பு.
வீடு திரும்பும் வழியெல்லாம் குமார் சொன்ன அந்த ஒரு வரி மட்டும் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.
ஆராதனை நடத்துவதும், மரித்தவர்களை அடக்கம் பண்ணுவதும், திருமணம் நடத்தித் தருவதும், ஞானஸ்நானம் கொடுப்பதும், வீடு பிரதிஷ்டை செய்வதும், ஜெபக் கூட்டம் நடத்துவதும், நிதி திரட்டுவதுமான பல பணிகள் போதகருக்கு உண்டு. இது அனைத்தும் முக்கியமானதாக இருந்தாலும் இதுவே ஒரு மேய்ப்பரின் அத்தியாவசிய அடிப்படை வேலை ஆகாது.
இந்த அனைத்தையும் வேறு யாரேனும் கூட எளிதாகவும் திறமையாகவும் செய்ய இயலும்.
பின் மேய்ப்பரின் பணி என்ன?
ஆண்டவராகிய இயேசு சொன்னார் ' என் பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன்"
பிதா குமாரனை எதற்காக அனுப்பினார்?
இழந்து போனதை இரட்சிப்பதற்கே.
இருட்டில் வாழும் ஆத்துமாக்களை இரட்சிப்பின் பாதையில் நடத்தும் வாஞ்சையே ஒரு மேய்ப்பனுக்கான அடிப்படை தகுதி.
மற்றபடி, பட்டறிவினால் வரும் பட்டமும் பதிவியும் அழுக்கான கந்தையாம், குப்பையாம். இதை நான் சொல்லவில்லை பவுலடிகளார் பிலிப்பியருக்கு எழுதும் போது சொல்கிறார்
இந்த அடிப்படை அழைப்பை உணராது, வெறும் பட்டத்தினாலே பாஸ்டர் ஆகி விட்டவர்கள் நம் மத்தியில் மலிந்து கிடக்கும் போது, "குமார் சொன்னதில் தவறில்லையே, சரியாகத் தானே சொன்னான்?"
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum