சமாரியர் - யார்?
Wed Apr 24, 2013 10:51 am
சமாரியர்கள்
வாழ்ந்த பகுதி இஸ்ரவேல் நாட்டின் தலைநகராக இருந்த போதும் அவர்களோடு
இஸ்ரவேலர்கள் ஏன் சம்பந்தம் கலாவதிருந்தனர் என்ற கேள்வி பலருக்கும்
எழுவதுண்டு.(யோவான் 4:9)
அது ஏன் என்று அறிந்து கொள்வோமா?
அசீரிய அரசர்களில் மூவர் இஸ்ரவேல் ராஜ்யத்தின் தலைநகராகிய சமாரியாவை தாக்கினார்கள்.
அவர்களில் திகிலாத்பிலேசர், சனகரிப் ஆகிய இருவர் இஸ்ரவேல் நாட்டாரை வென்று
அவர்களில் பலரை சிறைபடுத்திக் கொண்டனர். கடைசியாக, சார்கோன் என்பவர்
சுமார் கிமு 721 ல் சமாரியாவை அழித்துப்போட்டு, அதன் குடிகளில் 27,000 பேரை
பாபிலோனுக்கு கொண்டு போனார். (2 ராஜா 15:29; 17:5,6 ; ஏசாயா 20:1)
இவ்வரசர்கள் இஸ்ரவேலருக்கு பதிலாக அசீரியர் முதலிய குலத்தாரில் அநேகரை
சமாரியாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் குடியேற்றினார்கள் (2 ராஜா
17:24).
இந்த அந்நியர் அங்கே தங்கி இஸ்ரவேலரோடு கொள்வனை கொடுப்பனை
விஷயத்தில் கலந்து கொண்டதினால் பிற்காலத்தில் "சமாரியர்" என
அழைக்கப்பட்டனர்.
சமாரியர் என்னும் பெயரின் உற்பத்தி இதுவே!
"அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறது" - அப்போ 10:28
ஆனால், இயேசு கிறிஸ்து சர்வலோகத்தின் இரட்சகராய் இருந்ததால் சமாரிய
ஸ்த்ரியிடம் தான் முதன் முதலில் பரலோகத்தின் கொடையாம் "ஜீவ-தண்ணீரை"
அறிமுகப்படுத்தினார்.
நீங்கள் வாழும் சமுதாயத்தில் சகமனிதனை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் வரையறுக்காமல், தேவனின் சிருஷ்டிப்பாய் பாருங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum