கங்கை புனித நதியா இல்லை மரண நதியா
Sat Jun 18, 2016 5:34 pm
காசி என்று அழைக்கப்படும் வாரனாசியில் தான் மிகப்பெரிய மனிதக்கொலைகள்,அவலங்கள் நடைபெறும். ஒருமுறையாவது காசிக்கு போய்,அல்லது அது சார்ந்த விடயங்களை படித்தால் (ஏராளமான இணையத்தில் வீடியோகள் உள்ளது ) மனிதனுக்குள் இருக்கும் சாதி, மத, போன்ற பேதங்களும், நீ பெரியவன், நான் தாழ்ந்தவன் என்ற பேதங்களும் மறைந்து மனிதநேயத்துடன் புதிய பண்பான,நாகரீகமான சகல உயிரினங்களையும் நேசிக்கும் புதிய மனிதனாக பிறக்க முடியும்.
குறைந்த பட்சம் நான் கடவுள் படமாவது பார்த்தால் புரியும். தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறும் நபர்கள் ஒருமுறையேனும் உத்தரபிரதேசம்,டெல்லி, பிகார், சத்தீஷ்கர், போன்ற மாநிலங்களுக்கு சென்று அல்லது சார்ந்து படித்து பாருங்கள்.
ஒரு நாள் காலையில் நான் தொடர்வண்டியில் போகும்போது கிட்டத்தட்ட லட்சம் மக்களுக்கு மேல் ஒரே தடவையில் தொடர்வண்டி பாதைகளில் மலம் கழித்துக்கொண்டிருக்கிறார்கள். இது எங்கும் இல்லை தலைநகர் டெல்லியில் தான்.
இப்படி மிகவும் ஆதிகால சமுதாயமாக தான் இருக்கிறார்கள். இதனால் தான் அங்கு மாவோஸ் இயக்கங்கள் உருவாக்கி இருக்கிறது. தங்கள் பிரதேசம் வளச்சி இல்லை அல்லது அரசாங்கம் தங்களை கவனிக்கவில்லை என்பதற்காகவே இந்த இயக்கங்கள் உருவாகின.
அதற்கு பிறகும் அரசு கவனிக்காமல் இருந்தமையினாலேயே அவர்கள் வன்முறையில் இறங்கினர்.நான் கடவுள் படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் காசியில் நடக்கிறது அந்த படத்தை கீழே இணைந்து போடுகிறேன் பாருங்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum