கிறிஸ்துவை_அறியாதவன் ஒருவனும் இல்லை
Mon May 16, 2016 10:53 am
ஜான் கென்னடி என்ற மனிதனும் தனது மனைவியும் மிஷ்னரியாக பல தீவுகள் உள்ள ஒரு பகுதிக்கு செல்ல கப்பல் ஏறி புறப்பட்டார்கள். 6 மாத பயணம். பயணத்தின் போது கப்பலில் ஆராதனை நடத்தினார். அனைவருக்கும் அவரை பிடித்தது.
தீவு வந்தது கென்னடி அவரது மனைவி இருவரும் தீவுகளின் வரைபடத்தை கையில் வைத்து ஜெபம் பண்ணி தங்கள் கைகளால் ஒரு தீவை தொட்டார்கள். என்ன ஆச்சரியம் இருவரும் ஒரே தீவை தொட்டார்கள்.
அந்த தீவுக்கு செல்ல தயாரான நேரத்தில் கப்பல் கேப்டன் அவர்களிடம் ஐயா நீங்கள் வேறு தீவுக்கு செல்லுங்கள். ஆனால் இந்த தீவுக்கு செல்லவேண்டாம். இங்கு சென்றவர்கள் இதுவரை திரும்பி வந்ததில்லை. மனிதர்களை இந்த தீவு மக்கள் உயிருடன் சாப்பிடுவார்கள் என்று கூறினார். ஆனால் மிஷ்னரி கென்னடியோ இது ஆண்டவரின் அழைப்பு என்றும் தாங்கள் செல்வது உறுதி என்றும் கூறினார்.
கேப்டன் அவர்களிடம் சரி நீங்கள் செல்லுங்கள் ஆனால் ஒன்று செய்யுங்கள். இந்த சிறிய படகை கரையில் கட்டிவையுங்கள் கூடாரத்தையும் கடற்கரையிலே போடுங்கள். அவர்கள் உங்களை துரத்தினால் படகை எடுத்துவிட்டு கடலில் வந்துவிடுங்கள் என்று சொல்லி ஒரு சிறிய படகை கொடுத்தார்.
கென்னடியும் கரையிலே படகை கட்டினார்.
ஒரு வரிடத்தில் மொழியை கற்றார்.
இரண்டு ஆண்டுகள் சென்றது ஒருவனும் கிறிஸ்தவர்கள் ஆகவில்லை. கடற்கரையிலே முழங்கால் படி போட்டு இருவருமே அழுது ஜெபித்தார்கள்.
சில மணிநேரத்தில் கடவுள் அவரிடம் பேசினார்
கடவுள்
கென்னடி நீ என்னை நம்புகிறாயா
கென்னடி
ஆம் ஆண்டவரே உம்மை நம்புகிறேன்
கடவுள்
கென்னடி நீ என்னை நம்புகிறாயா
கென்னடி
ஆம் ஆண்டவரே உம்மை நம்புகிறேன்
கடவுள்
அந்த படகை ஏன் கரையில் கட்டிவைத்துள்ளாய்
கென்னடி
மக்கள் எங்களை கொலை செய்ய வந்தால் ஓடுவதற்காக
கடவுள்
கென்னடி நீ என்னை நம்புகிறாயா?
கென்னடி
ஆம் ஆண்டவரே நம்புகிறேன்
கடவுள்
அன்று நானும் மரணத்தை கண்டு ஓடியிருந்தால் மனுக்குலம் மீட்பு அடைந்திருக்கும்மா? படகை அழித்துவிடு
கரையில் படகை கென்னடி கொண்டு வந்தார். மனைவி மண்ணெண்ணையும் தீப்பெட்டியையும் கொண்டு வந்தாள். படகை எரித்தார்கள்.
தீயை கண்ட தீவு மக்கள் ஓடி வந்தனர். துரையாரே என்ன நடந்தது என்று கேட்டார்கள் அந்த இடத்திலே சுவிஷேசத்தை சொன்னார். 200 பேர் அந்த இடத்திலேயே #கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். சுவிஷேம் பரவியது.
முதல் முதலில் இந்த தீவில் ஜான் கென்னடி வரும்போது#ஒரு_கிறிஸ்தவனும் இல்லை.
இன்று ஜான் கென்னடி மரித்தப்போது இந்த தீவில்#கிறிஸ்துவை_அறியாதவன் ஒருவனும் இல்லை என்று இவரின் கல்லறையில் எழுதப்பட்டுள்ளது,
Pastor Vasuki____________

Permissions in this forum:
You cannot reply to topics in this forum