உருளைக்கிழங்கு தட்டை
Thu Jun 16, 2016 9:41 am
உருளைக்கிழங்கு தட்டை
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250g
அரிசிமா -100g
கடலைமா - 100g
கறிவேப்பிலை - 50g
வெங்காயம் - 50g
செத்தல்மிளகாய் - 5
உப்பு , இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை அவித்து சத்தம் செய்து பிசைந்து வைக்கவும்.
இஞ்சி , செத்தல்மிளகாயை அரைத்து வைக்கவும்.
கறிவேப்பிலை, வெங்காயம் என்பவற்றை நறுக்கி வைக்கவும்.
பிசைந்த உருளைக்கிழங்கு , அரைத்த இஞ்சி, செத்தல்மிளகாய் விழுது , அரிசிமா , கடலைமா , நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு என்பவற்றை நன்றாக கலந்து பிசைந்து வைக்கவும்.
உருண்டைகளாக உருட்டி சிறு சிறு வட்டங்களாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum