உருளைக்கிழங்கு போண்டா
Thu Jun 16, 2016 9:45 am
உருளைக்கிழங்கு போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 500g
கடலைமாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 50g
மிளகாய்த்தூள் - 1தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு அவிக்கவும்.
தோலை நீக்கி பிசைந்து வைக்கவும்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டவும்.
சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் , பச்சை மிளகாயை வதக்கவும்.
வதக்கியதும் பிசைந்த உருளைக்கிழங்கை யும் உப்பு , மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுப்பில் இருந்து சட்டியை இறக்கி அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
கடலைமாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும்
உருண்டைகளை மாக்கலவையில் தோய்த்து பொரிக்கவும்.
சூடான போண்டா ரெடி.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum