நல்ல நகைச்சுவை உணர்வானது...
Mon Mar 18, 2013 12:57 pm
*
நல்ல நகைச்சுவை உணர்வானது, தகவல்தொடர்பில் உள்ள தடைகளைத் தகர்த்து,
நீங்கள் ஒரு அணுகக்கூடிய நபர்தான் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறது....
* தப்பெண்ணங்களைத் தடுத்து, நட்புரீதியான சூழலை உருவாக்குகிறது.
* அகந்தையைக் கலைந்து நம்பிக்கையை அதிகரிக்கிறது.
* மற்றவர்களின் உணர்வுகள் புண்படாமல், சிலவகை செய்திகளைத் தெரிவிக்க, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உதவுகிறது.
* பகைமை மற்றும் தப்பெண்ணம் போன்றவைகளின் கடும் எதிரியாக நகைச்சுவை உணர்வு விளங்குகிறது.
* பிறரின் மீது நேர்மறை எண்ணத்தையும் வழங்குகிறது.
நகைச்சுவை உணர்வு வாழ்வில் இந்தளவிற்கு நன்மைகளை வழங்குகையில், அதை நாம்
ஏன் முயற்சிக்கக்கூடாது? உண்மையில் அது எளிதான விஷயமில்லைதான். சரியான
நேரத்தில் சரியான இடத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது உண்மையிலேயே
ஒரு மாபெரும் கலை. இது சிலருக்கு இயல்பிலேயே இருக்கும். பலர் இந்தக் கலையை
முயற்சி செய்துதான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களின்
நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை.
எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து விடுபடவும்,
கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும் உங்களுக்கே உங்களின் நகைச்சுவை
உணர்வு துணைபுரியும். நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க
வேண்டியதில்லை. உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும்
சந்தோஷப்படுத்தினாலே போதும். வாழ்க்கை என்றும் இனிக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum