வீட்டில் உள்ள புத்தகங்களை, பூச்சிகளிடம் இருந்து, இயற்கை முறையில் பாதுகாப்பது எப்படி?
Fri Jun 03, 2016 9:11 pm
ஒரு கிலோ வசம்பு,
500 கிராம் கருஞ்சீரகம்,
500 கிராம் ஓமம்,
125 கிராம் லவங்கப்பட்டை,
250 கிராம் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக அரைக்க வேண்டும்.
சிவப்பு நிற துணியில், அரைத்த கலவையை, 50 கிராம் அளவில், சிறுசிறு மூட்டைகளாக கட்ட வேண்டும்.
அந்த மூட்டைகளை, புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ள இடத்தில், புத்தகங்களுக்கு இடையில் வைக்க வேண்டும்.
மூட்டைகளை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால், புத்தகங்களை அரிக்கும் பூச்சிகள் அண்டாது.
இதை உபயோகிப்பதால், புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் எந்த உடல்நலக் கோளாறும் ஏற்படாது.
ரோஜா முத்தையா நுாலகம்தரமணி, சென்னை.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum