தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதத்தில் உள்ள 66 புத்தகங்களை எளிதாக மனனம் செய்ய Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதத்தில் உள்ள 66 புத்தகங்களை எளிதாக மனனம் செய்ய Empty வேதத்தில் உள்ள 66 புத்தகங்களை எளிதாக மனனம் செய்ய

Fri Jun 10, 2016 8:52 pm
நான் ஆதியாகமம் உணவகத்திற்கு, யாத்திராகமம் சாலை வழியாகச் சென்றேன். போகும் வழியில் நான் , லேவி என்பவர் , எண்களைப் பதிவு செய்தபடி உபாகமத்தின் மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த நேரத்தில் யோசுவா , நியாயாதிபதிகளின் அழகிய கதவில் நின்றபடி ரூத் என்பவள்"சாமுவேல் , சாமுவேல் " என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த போது அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். 

ஒரு கட்டத்தில் , முதலாம் ராஜாக்களும் , இரண்டாம் ராஜாக்களுமாய் இருந்த , நாளாகமங்களின் ராஜாக்கள், எஸ்றாவையும் , நெகேமியாவையும் , எஸ்தரையும், அவர்களது சகோதரன் யோபு அடைந்திருந்த துரதிருஷ்டமான நிலைமையின் நிமித்தமாக சந்திக்க வந்து கொண்டிருந்தனர். 

அவர்கள் சங்கீதம் பாடத்தொடங்கியபடிக் குழந்தைகளுக்கு நீதிமொழிகளைப் பிரசங்கித்து சாலமோனின் உன்னதப்பாட்டைக் கற்பித்தனர்.


இதே கால கட்டத்தில் சக நிகழ்வாக, 
ஏசாயா, எரேமியாவின் புலம்பலை, 
எசேக்கியேல், தானியேல், ஓசியா , யோவேல் என்ற நண்பர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஆமோஸும் , ஒபதியாவும் அருகில் இல்லை. 


மூன்று நாட்களுக்குப் பிறகு யோனா , மீகாவும், நாகூமும் எருசலேமுக்குப் பயணம் செய்த கப்பலிலேயே பயணித்தார். ஆபகூக் , அதன் பிறகு செப்பனியாவை சந்திக்க, அவர் ஆகாய் எனப்பட்ட சகரியாவின் நண்பரும் , மல்கியாவின் ஒன்று விட்ட சகோதரரும் ஆனவரை அறிமுகப் படுத்தினார். 


உடனடியாக சம்பிரதாயப்படி, மத்தேயு , மாற்கு , லூக்கா, யோவான் என்பவர்கள், அப்போஸ்தலருடைய நடபடிகளின்படி , ரோமர், Iகொரிந்தியர் போல நடந்து கொள்ளுவதில் கவனம் செலுத்தினர். ஏனென்றால் II கொரிந்தியர் கூட்டத்தினர் எப்பொழுதும் கலாத்தியரிடம் சண்டையிடுபவர்களாக இருந்தனர். 


அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து கொண்டதாவது, எபேசியரும் , பிலிப்பியரும் கொலோசேயருக்கு நெருக்கமானவர்கள் என்பதும் , முதலாம் தெசொலேனிக்கேயர் சந்திப்புக்குப் பிறகு இரண்டாம் தெசொலேனிக்கேயர் சந்திப்பு வருவதற்குள் அவர்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு சகோதரர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தப் பட்டார்கள். அவர்களோ தீத்துவின் வீட்டிற்கு , அவர்களின் தம்பி பிலமோனுக்கு எபிரேயர் மொழியை எழுதவும் , படிக்கவும் கற்பிக்கப் போயிருந்தனர். 


இதனைக் கேள்விப்பட்ட யாக்கோபு , இரண்டுமுறை பேதுருவிடம் விளக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் , மூன்று யோவான்களும் யூதாவிடம் தங்கள் பயணத்தில் வெளிப்படுத்தின விசேஷத்தைப் பகிர்ந்து கொண்டார் என்பதுவே.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum