இந்து வாலிபருக்கு கிறிஸ்தவ பேராயர் ஒருவர் சிறுநீரக தானம்
Thu Jun 02, 2016 1:05 pm
கேரளாவில், ஒரு ஏழை இந்து வாலிபருக்கு கிறிஸ்தவ பேராயர் ஒருவர் சிறுநீரக தானம் செய்தார்.
கேரளாவில், செல்வாக்கு மிகுந்த சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையில், பலா மறைமாவட்ட பேராயராக பணியாற்றி வருபவர் ஜேக்கப் முரிக்கன்.
52 வயதான இந்த பேராயர், ஒரு ஏழை இந்து வாலிபருக்கு தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக கொடுத்து, வாலிபரின் உயிரை காப்பாற்றி உள்ளார். மத வேறுபாடுகளை கடந்த மனிதநேய செயலாக இது பார்க்கப்படுகிறது.
அவரிடம் சிறுநீரக தானம் பெற்றவர் பெயர் இ.சூரஜ் (வயது 31). ஆர்ய வைத்திய சாலையில் பணியாற்றி வருகிறார். ஏழ்மையான அவரது குடும்பத்தில், மனைவியும், தாயாரும் உள்ளனர். அவர் மட்டுமே வேலைக்கு சென்று சம்பாதித்து வருகிறார்.
சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட சூரஜ்க்கு உதவ பேராயர் ஜேக்கப் முரிக்கன் முன்வந்தார். ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் உறுப்பு தானம் செய்வதற்கு கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள ஒரு கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த கமிட்டியும் ஜேக்கப் முரிக்கன் சிறுநீரக தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தது.
கடந்த வாரம் இதுதொடர்பான அனைத்து நடைமுறைகளும் இறுதி செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று கொச்சியில் உள்ள வி.பி.எஸ்.லேக்ஷோர் ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் ஜார்ஜ் பி.ஆபிரகாம் தலைமையிலான டாக்டர்கள் குழு, பேராயரின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து சூரஜ்க்கு வெற்றிகரமாக பொருத்தியது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும், பேராயரும், வாலிபரும் நலமுடன் இருப்பதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சிறுநீரக தானம் செய்த பேராயருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பணியில் உள்ள பேராயர் ஒருவர், தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளித்து, ஒரு உயிரை காப்பாற்றியது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று அருட்தந்தை டேவிஸ் சிராமல் தெரிவித்தார்.
Credits:Malaimalar

Permissions in this forum:
You cannot reply to topics in this forum