- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
பேராயர் சர்ஜென்ட் (1815 - 1889) வாழ்க்கை வரலாறு
Thu Aug 15, 2013 10:41 pm
பெயர்: பேராயர் சர்ஜென்ட்
பிறந்த ஊர்: பாரீஸ்
தாய்நாடு : இங்கிலாந்து
தரிசனநாடு: இந்தியா
11.10.1889 அன்று திருநெல்வேலி மற்றும் தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்து மிஷனெரிகள் பாளையங்கோட்டையில் வந்து குவிந்தார்கள்.அவர்கள் முகத்தில் சோகம் நிறைந்திருந்தது.ஆம்.மக்கள் பேராயர் மிஸனெரிகளின் நண்பர் எட்வர்ட் சர்ஜென்ட் ஐயர் தன் மலர்ந்த முகத்தை மண்ணில் விட்டு விட்டு விண்ணிற்குச் சென்று விட்டார்.
சபைகள் அனைத்தையும் சுயகாலில் நிற்கச்செய்தவர்.அவைகளை கிறிஸ்துவில் வேரூன்றவும் இறுகக் கட்டியவர். எத்தனை கவலைகள் வந்தாலும் அவைகளை முகமலர்ச்சியோடு இலகுவாக்குபவர்.நன்மாதிரியான முன்மாதிரியான பேராயர் இவர்.
அவர் சிறுவயதிலிருந்தே தமிழ் மக்களிடம் பழகியதால் தமிழில் நன்கு உரையாடும் புலமை பெற்றார்.சி.எம.எஸ் திருச்சபையின் மிஷனெரியாக தன் பணியை தொடங்கிய இவர் 18 வயதிலேயே போதகர்களைப் பயிற்றுவிக்கும் செமினரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.இவரின் ஊழிய எல்லை விரிவானது. இவரின் பிரசங்கமுறை புதுமையானது. பிரசங்கவேளையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, கேள்விகளைக் கேட்டுக்கொண்டே பிரசங்கிப்பார். வேத பாட வகுப்புகளை நடத்தி அநேக ஊழியர்களை உருவாக்கினார்.பெண்களுக்கென்று ஆசிரியர் பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார்.
மதுப்பழக்கத்தை ஒழிக்க தீவிர திட்டங்கள் கொண்டுவந்தார்.கைம்பெண் ஆதரவுச் சங்கத்திற்கு புத்துயிர் கொடுத்தார். சாதிப்பேயை எதிர்த்துப் போராடினார்.அநேக திருச்சபைகளைக் கட்டி ஆண்டவரின் நாம மகிமைக்காக அவைகளைப் பிரதிஷ்டை செய்தார். இந்தியாவில் உழைத்து இந்திய மண்ணிலேயே தங்களை கோதுமை மணிகளாக ஓப்புக்கொடுப்பவர்கள் எத்தனை பேர்? நற்செய்தி தொண்டராய் நெல்லையில் விடிவெள்ளியாய் இன்றும் அநேக உள்ளங்களில் பிரகாசிக்கிறார்...........................
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தில் உறுதியாயிருங்கள்.ஒருவரையொருவர் நேசியுங்கள்"
- சர்ஜென்ட்
நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum