இந்து பெண், கிறிஸ்தவ ஆண் இடையேயான திருமணம் செல்லாது
Thu Nov 19, 2015 9:21 pm
மதுரை, நவ. 19-
இந்து மதத்தை சேர்ந்த பெண்ணும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஆணும் திருமணம் செய்யும் பட்சத்தில், யாரேனும் ஒருவர் மதம் மாறாவிட்டால் அந்த திருமணம் செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதிகள் சிவக்குமார், ரவி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்து பெண்ணும், கிறிஸ்தவ ஆணும் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், தன்னுடைய மகளை ஒப்படைக்க வேண்டி தயார் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த ஆணும், பெண்ணும் பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஆட்கொணர்வு மனுவின் படி அந்த பெண்ணை நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஒப்படைத்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கிறிஸ்தவ ஆண் மதம் மாறாத பட்சத்தில் இந்து கோவிலில் நடைபெற்ற திருமணம் எப்படி முறைப்படி செல்லும் என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும் அந்த பெண் திருமணம் செய்து கொண்ட ஆணுடனே செல்வதாக பிடிவாதமாக கூறினார்.
சட்டப்படி இந்த திருமணம் செல்லாது என்ற போதிலும், பெண் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அரசு அங்கீகாரம் பெற்ற திருமணப்பதிவாளர்களிடம் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதில் சிக்கல் இல்லை. ஆனால், கோவில்களிலோ அல்லது தேவாலயத்திலோ அந்தந்த சமய முறைப்படி திருமணம் செய்யும் பட்சத்தில் யாரேனும் ஒருவர் மதம் மாறியே ஆக வேண்டும்.
நன்றி: மாலைமலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum