வட்டியில் சிக்காமல் வாழ்வோம்!
Wed May 25, 2016 10:47 pm
ஒருவர் தன்னிடமிருக்கும் பொருளை அனுபவிக்கும் உரிமையை தள்ளிப்போட்டு, தேவையான மற்றொருவருக்கு அதைக் கடனாக வழங்கும்போது ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்வதுதான் (Opportunity cost) வட்டி என்று அழைக்கப்படுகிறது. பொருளின் அளவு மற்றும் அதை மற்றவர் அனுபவிக்கும் காலம் ஆகியவற்றைப் பொருத்துதான் வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது.
பொருளை கடனாக பெறுபவரின் தர மதிப்பீடு (Credit rating), பொருளுக்கான தேவையின் அவசரம், தேவை மற்றும் பொருள் புழக்கத்தின் அளவு நிலைமை (Demand and Supply conditions) ஆகிய காரணிகளை பொருத்துதான் வட்டி விகிதம் அமைகிறது.ஏழாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஒருவர் மற்றொருவரின் பொருளை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான வட்டித் தொகை வசூலிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரத்த சம்பந்தம் உடையவர்களுக்கும், ஏழைகளுக்கும் செய்யப்படும் கடன் உதவிகளுக்கு வட்டி வசூலிக்கப்படக்கூடாது என்று பைபிள் அறிவுறுத்துகிறது.வட்டி வசூலிப்பதும், செலுத்துவதும், இஸ்லாமிய மத கோட்பாடுகளின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
ஒவ்வொருவரும் வருவாய்க்கு ஏற்றபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை இதன் அடிப்படை தத்துவமாக கருதலாம். மேலும், கடின உழைப்பினால் ஈட்டப்படாத லாபமாக வட்டி கருதப்படாதது அதற்கு ஒரு காரணமாகும்.சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில், வட்டியை தவிர்த்த இஸ்லாமிய வங்கி செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அடிப்படையில், ஈரான், சூடான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில், வங்கிகளின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
இந்த விதி விலக்கைத் தவிர, பொதுவாக வங்கிகளின் முக்கிய செலவு, அவை திரட்டும் டெபாஸிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டியாகும். வழங்கும் கடனுக்கு பெறப்படும் வட்டி, அவற்றின் பிரதான வருமானமாகும். இவற்றுக்கிடையேயான வித்தியாசம், நிகர வட்டி வருமானம் (Net interest margin) என்று அழைக்கப்படுகிறது.ஒரு வங்கியின் லாபம், பெரும்பாலும் நிகர வட்டி வருமானத்தையே சார்ந்திருக்கிறது.
வாராக்கடன்களுக்கு வட்டி கணக்கிடப்படுவதில்லை என்பதால், அதிக வாராக்கடன்களை சுமந்திருக்கும் வங்கிகளின் லாபத்தின் அளவு குறைகிறது.குறைந்த லாபத்திலிருந்து, வாராக்கடன் இழப்பீடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் (Provisions for bad debts) செய்யப்படும்போது, அதுவே வங்கியின் முதலையும் அரித்து, அதை நோயாளியாக்கி விடுகிறது.
1847-ஆம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டின் மத்திய வங்கி, வட்டி விகிதம் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி, பணப் புழக்கத்தை பெருக்கவும், சுருக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டது. அதன் பிறகு, அந்த பொருளாதார ஆயுதத்தின் பயன்பாடு மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இந்தியாவில் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் (Inflation control) ஆயுதங்களில் ஒன்றாக, ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதங்கள் (Repo and Reverse Repo Rates) ரிசர்வ் வங்கியால் பயன்படுத்தப்படுகின்றன.வங்கிகளிடமிருந்து கடன் பத்திரங்களை செக்யூரிட்டியாக பெற்று, அவற்றுக்கு குறுகிய கால கடன் வழங்கும்போது, ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் வட்டி விகிதம்தான் ரெபோவாகும்.
கடன் பத்திரங்களின் மூலம், ரிசர்வ் வங்கி கடன் வாங்கும்போது ரிவர்ஸ் ரெபோ பயன்படுத்தப்படுகிறது. ரெபோவுக்கும், ரிவர்ஸ் ரெபோவுக்கும் இடையே, ஒரு சதவீத இடைவெளி இருக்கும்.தற்போதைய ரெபோ மற்றும் ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதங்கள் முறையே 8 மற்றும் 7 சதவீதமாகும். இவை குறுகிய கால வட்டி விகிதத்தின் போக்கிற்கான அடையாள சின்னங்களாகும். பொதுவாக, இதன் அளவு அதிகமானால், டெபாஸிட் மற்றும் கடன்களுக்கான வட்டி மேல் நோக்கியும், குறைந்தால் கீழ்நோக்கியும் செல்ல வாய்ப்பிருக்கிறது.
இதை தவிர, ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கிகள் பெறும் நீண்ட கால கடனுக்கான வட்டி விகிதம் (Bank rate) 9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வங்கிகளைப் பொருத்தவரை, பெரும்பாலும், இந்த வட்டி விகிதத்திற்கு கீழ் (Prime lending rate) அவர்களால் கடன் வழங்க முடியாது.ஒரு நாட்டு நாணயத்தின் வலிமையை நிர்ணயிக்கும் கருவியாக வட்டி செயல்படுகிறது.குறைந்த வட்டி நிலவும் நாடுகளிலிருந்து, அதிக வட்டியுள்ள நாடுகளுக்கு முதலீடுகள் பயணம் செய்வதால், முதலீடுகளை பெறும் நாட்டு நாணயத்தின் மதிப்பு கூடுகிறது.
அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்ற குறைந்த வட்டி நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் தாற்காலிக அன்னிய முதலீடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, நுகர்வோர் பணவீக்கம் (CPI) 5.5. சதவீத அளவில் சரிந்திருக்கிறது.2012 ஜனவரிக்குப் பிறகு, இதுதான் மிக ஆழமான சரிவாகும்.இதேபோல், மொத்த விலை குறியீட்டு எண்ணும் (WPI) 1.77 சதவீதமாக குறைந்திருப்பது மகிழ்ச்சி தரும் புள்ளி விவரமாகும். கச்சா எண்ணெயின் சர்வதேச விலை வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணம்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.4 சதவீதமாக இருந்த முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம், செப்டம்பரில் 2.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தற்போதைய வட்டி அளவு, தேங்கி நிற்கும் தொழில் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தி, உள்நாட்டு மொத்த தொழில் உற்பத்தியைப் பெருக்க தடையாக இருப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது.ஜனவரியில் நிர்ணயிக்கப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. குறைந்த வட்டி என்பது, தொழில் துறையை வளரச்செய்து, வேலைவாய்ப்புகளையும் பெருக்கும் சக்தி படைத்ததாகக் கருத்தப்படுகிறது.
2015 ஜனவரிக்குள் பண வீக்கத்தை 8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டிய இலக்கை ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்தது. அந்த இலக்கு முன்கூட்டியே எட்டப்பட்டிருப்பதால், வட்டி குறைப்பு நடவடிக்கைகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.பென்ஷன் தொகை பெறும் பல முதியோர், அந்தத் தொகையையும், தங்கள் வாழ்நாள் சேமிப்பிலிருந்து பெறப்படும் வட்டியையும் மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். வட்டி குறைப்பு, தொழில் துறைக்கு சாதகமாக இருந்தாலும், வட்டித் தொகையை நம்பி வாழும் பலருக்கு அது பாதகமாகும்.வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், சேமிப்பை சேவிங்க்ஸ் கணக்குகளில் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், நீண்ட கால வைப்பு நிதிக்கு தங்கள் முதலீட்டை மாற்றினால், வட்டி தொகை இழப்பிலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.
வட்டி விகிதம் குறைந்தால், வீடு மற்றும் வாகனக் கடன்கள் பெருகி, அந்தத் துறை சார்ந்த தொழில்கள் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவும்.வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களை, நிலையான வட்டி (Fixed rate) மற்றும் மிதக்கும் வட்டி (Floating rate) ஆகிய திட்டங்களில் வழங்குகின்றன. தங்களுக்கு ஏற்ற வட்டி திட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை கடன்தாரர்களுக்கு உண்டு.நீண்ட கால வட்டி அளவுகள் குறைவதற்கான வாய்ப்பிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், வீடு, கல்வி மற்றும் வாகனக்கடன்களை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர், மிதக்கும் வட்டி விகிதத்தை தேர்ந்தெடுப்பது பயனளிக்கும்.இந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் குறைந்தால், கடனுக்கான வட்டியும் குறையும்.
வட்டி விகிதங்கள் குறையும் அறிவிப்புகள் வெளியாகும்போது, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முதலும், வட்டியும் சேர்ந்த மாதாந்திரத் தவணை (உ.ங.ஐ.) குறைக்கப்படுகிறதா என்பதை கடன்தாரர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலையில், பலர் தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்ள மாற்று முதலீடுகளை நோக்கி செல்கின்றனர். பல போலி நிதி நிறுவனங்கள், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, கற்பனைக்கு அப்பாற்பட்ட வட்டி விகிதங்களை, கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அறிவித்து, பொது மக்களின் சேமிப்பை அள்ளிப்போகும் சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்த கால நிகழ்வுகளின் மூலம் பாடம் படித்த நடுத்தர வர்க்கத்தினர், பேராசைகளை புறம் தள்ளி, எரியும் விளக்கில் தாங்களாகவே போய் விழும் விட்டில் பூச்சுகள் போல் செயல்படுவதை தவிர்க்கவேண்டும்.வருமானத்துக்கு ஏற்ற செலவு, சேமிப்பு பழக்கம் ஆகியவை அதிக வட்டி என்ற ஆயுதத்தின் கோரப்பற்களுக்கு இரையாகமால் இருக்க பெரிதும் உதவும் சாதனங்களாகும்.
வருமானத்தில், செலவு செய்தது போக மிஞ்சியதுதான் சேமிப்பு என்ற எண்ணத்தை விட, கட்டாய சேமிப்புக்கு பிறகுதான் செலவு என்ற அணுகுமுறையை கடைபிடிப்பதன் மூலம், கடன், வட்டி போன்றவற்றிலிருந்து நடுத்தர வர்க்கத்தினர் ஓரளவு தப்பிக்கலாம்.வட்டி என்னும் ஆயுதத்தின் பிடியில் சிக்காமல் வரவு, செலவுகளை பராமரிப்பது என்பது ஒரு சர்க்கஸ் வித்தைதான். அந்த வித்தையை கற்றவர்கள் வாழ்க்கையில் என்றும் தோற்கமாட்டார்கள்!
Thanks: Kalvisolai.com

Permissions in this forum:
You cannot reply to topics in this forum