தேவைகளுக்காக அல்ல... தேவனுக்காக வாழ்வோம்...
Mon Apr 21, 2014 8:32 am
மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் 1 யோவான் 3:14
கிறிஸ்தவ பெண் தூணில் கட்டிவைத்து அடித்து வெட்டி கொல்லப்பட்டார்.. இது நடந்தது 2012ம் ஆனது டிசம்பர் மாதம். 2013ம் ஆண்டு இவைகள் உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. ஏன் இந்த கொடூரம்? இந்த கிறிஸ்தவ பெண் என்ன தவறு செய்தார்கள்?
இந்த நிகழ்வு நம் கண்களுக்கு தெரிகிறது. இதைவிட கொடிய முறையில் சிறிய தேசத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டு கொண்டிருப்பது சாதாரண நிகழ்வாகி விட்டது.
சிறிய தேசத்தின் விடுதலைக்காக போராடுகிறவர்கள் என்று சொல்லும் கூட்டம் பல பகுதிகளை தனதாக்கி வைத்துள்ளது. அதில் ஒரு பகுதி தான் (Aleppo, Syria, by an al-Qaeda-linked gang) அலிப்பொ மாநிலம். இங்கு நுழைந்த இக்கூட்டம் அரசுக்கு ஆதராவாய் உள்ள மக்களை சிறை பிடித்தது. இதில் இந்த பெண்ணும் மாட்டி கொண்டார்.
மற்றவர்களை சிறையில் அடைத்த இவர்கள் இப்பெண் கிறிஸ்தவர் என்று தெரிந்ததும் அருகில் உள்ள ஓர் தூணில் (Sheikh Maksoud neighborhood of Aleppo) கட்டிவைத்து தலைமுடியை வழித்து அடித்து காயப்படுத்தி கொலை செய்திருக்கின்றனர்.
அதோடு விட்டுவிடாமல் அருகில் ஓர் வாசகமும் எழுதிவைத்தனர்.
"இவள் மீது துப்பதவர்கள் மரியாதையற்றவர்கள் / வெட்கப்படவேண்டியவர்கள்" என்று எழுதி வைத்து இவர் மீது காரி உமிழ்ந்துள்ளனர்.. கடைசி நொடிவரை இவர் உள்ளம் துடிதுடித்து நின்றிருக்குமே.. யாரும் வரவில்லை காப்பாற்ற.. தானும் இஸ்லாமியர்தான் என்று பொய் சொல்லி இருந்தால் சிறையிலாவது அடைத்திருப்பார்கள். ஆனால் கடைசி வரை தேவனுக்குள் உறுதியாய் நின்று ஜீவனை விட்டார்.
1 யோவான் 3:13. என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
2 தீமோத்தேயு 3:12. அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
துன்பம் என்று வந்தவுடனே சோர்ந்து போய் விடுகிறோம். பலர் சோகமாக இருப்பார். கோபத்தை மற்றவர்களிடம் காட்டுவர். சிலர் ஆலயத்திற்கு செல்ல மாட்டார்கள். வேதத்தை படிப்பதில்லை. சிலை கடவுள் எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகளை கொடுக்கிறார் என்று அங்கலாய்ப்பார்கள். ஆராய்ந்து பார்த்தால் எல்லா துன்பங்களுக்கும் நாம் தான் காரணமாய் இருப்போம்.
பலர் துன்பம் வரும் போது மனிதனை தேடுகின்றனர். மனிதன் கைவிட்ட பின்பு கடவுளிடம் ஓடி வருகின்றனர். நினைத்தது நடை பெறவில்லை என்றதும் கடவுளை சபிக்கின்றனர். இது உலக இயற்க்கை.
ஆனால் கிறிஸ்தவனின் ஜெபம் எப்படி இருக்க வேண்டும். "ஆண்டவரே இந்த அதிசயத்தை உம்மிடம் எதிர்பார்க்கிறேன். விசுவாசிக்கிறேன். ஆனாலும் என் சித்தத்தின் படி அல்ல.. உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று ஜெபிக்கிற பழக்கம் உண்டா?
இன்று பல அற்புத விழாக்களில் "தேவன் உங்களுக்கு நிச்சயம் அற்புதம் செய்வார்" என்று தூண்டி விடுகின்றனர். உண்மையாய் கர்த்தரை நம்புகிறவர்கள் கூட சில வேலைகளில் தேவைக்காக கடவுளை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
தானியேலை சிங்க கெபியிலே போட்டபோது அவன் மரிப்பதற்கும் ஆயத்தமாய் இருந்தான். ஆபிரஹாம் குழந்தையை கடவுள் கேட்டபோது கொடுக்க ஆயத்தமாய் இருந்தான். தனக்கு ஏற்படும் நஷ்டம் இன்னவென்று தெரிந்தும் தேவனுக்கென்று கொடுக்க ஆயத்தமாய் இருந்தான். பவுல் தான் நீரோ மன்னனால் உயிரை விடப்போவது தெரிந்தும் தீமோத்தேயுவிற்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணமாக கடிதம் எழுதினார்.
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்கிற மூன்று வாலிபர்கள் கொள்ளப்பட இருந்த போது "நாங்கள் ஆராதிக்கிறத தெய்வம்...... விடுவியாமற் போனாலும்....... விட்டுவிடமாட்டோம்" தானியேல் 3:17,18 என்கிற வைராக்கியமான அன்பு நம்மிடம் தேவன் எதிர்பார்க்கிறார்.
தேவைகளுக்காக அல்ல... தேவனுக்காக வாழ்வோம்...
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
http://gerarddirect.com/2013/01/03/6874/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum