அனலாக வாழ்வோம்
Wed Jun 26, 2013 6:56 am
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16).
ஒரு பெரிய மைதானத்தில் குறுக்கே ஒரு தடுப்பு போடப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கம் இயேசுகிறிஸ்து நின்று ஜனங்களை அழைத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் சாத்தான் நின்று அநேகரை தன் பக்கமாக அழைத்துக் கொண்டிருந்தான். இரண்டு பக்கமும் மக்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். இது கொஞ்ச நேரமாக போய்க் கொண்டிருந்தது.
திடீரென்று ஒருவன், இந்த பக்கமும் சேராமல், அந்த பக்கமும் சேராமல், வைக்கப்பட்டிருந்த வேலியின் மேல் போய் ஏறிக் கொண்டான். சிறிது நேரத்தில் இயேசுகிறிஸ்துவும், அவரோடு இருந்த மக்களும் மறைந்து போனார்கள். அப்படியே சாத்தானும் அவனோடு இருந்தவர்களும் மறைந்து போனார்கள்.
வேலியின் மேல் இருந்தவன் மாத்திரம் அப்படியே இருந்தான். சிறிது நேரத்தில் சாத்தான் அங்கு எதையோ தேடிக் கொண்டு வந்தான். வேலியின் மேல் இருந்தவன் 'என்ன தேடுகிறாய்' என்று கேட்டான். சாத்தான், 'ஓ, நீ இங்குதான் இருக்கிறாயா? உன்னைத் தேடித்தான் நான் வந்தேன்' என்றான்.
அப்போது வேலியின் மேல் இருந்த மனிதன், 'ஏன் என்னைத் தேடுகிறாய்? நான் வேலியின் மேல் இருக்கிறேன், உனக்கும் சொந்தமில்லை, இயேசுவுக்கும் சொந்தமில்லை' என்றுக் கூறினான். அதற்கு சாத்தான், 'அது சரிதான், ஆனால் வேலி எனக்கு சொந்தம்' என்று கூறினான்.
பிரியமானவர்களே, நாம் அநேக வேளைகளில் இப்படித்தான் இரண்டும் கெட்டான் நிலைமையில் காணப்படுகிறோம். கிறிஸ்தவர்களுக்குள் கிறிஸ்துவைப் பற்றிய தரிசனமும், உலகத்தை வெறுத்து, கர்த்தரை மாத்திரம் பற்றிக் கொண்டிருந்தால், இந்நேரத்தில் இந்தியா இயேசுவை சந்தித்திருக்கும். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நம்மால் உலகத்தையும் விட முடியவில்லை, இயேசுவையும் விட முடியவில்லை. இரண்டுமே வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
.
கிறிஸ்து நமக்காக இரத்தத்தை சிந்தியது ஏதோ ஒரு வாழ்க்கை வாழ வேண்டியல்ல, நாம் அவருக்குள் வாழ வேண்டும் என்பதற்காகவே. அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் சிந்தப்பட்டது, நாம் ஏனோதானோ என்று வாழ்வதற்காக அல்ல, நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வதற்காகவே. தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய இரத்தம் சிந்தப்பட்டது, நாம் உலகத்திற்கும் வாழ்ந்து கொண்டு, கிறிஸ்துவுக்கும் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக அல்ல, நான் வாழ்ந்தால் அவருக்காக வாழ்வேன் என்று வைராக்கியமாக வாழ்வதற்காகவே.
.
'நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்' என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரல்லவா? அது எத்தனை பரிதாபமான நிலைமை! 'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது' (மத்தேயு 6:24) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே!
.
பிரியமானவர்களே, நாம் ஒரு காலை சேற்றிலும், ஒரு காலை மேட்டிலும் வைத்துக் கொண்டிராதபடி, கர்த்தரையே முழு மனதோடு பின்பற்றுவோம். உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒரு நாள் ஒழிந்துப் போய் விடும். அதை பின்பற்றி போனவர்களும் அப்படியே போய் விடுவார்கள். ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களோ, என்றென்றும் அழியாமல் நித்திய நித்தியமாய் கர்த்தரோடு வாழுவோம். ஆமென் அல்லேலூயா!
நன்றி: டேவிட் - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum