மருத்துவ கல்லூரி தகவல்கள் - 2016
Wed May 25, 2016 9:24 pm
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பதைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 655 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. ஒரு ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 65 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.
ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன. கடந்தாண்டு அனுமதி கிடைத்த 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 இடங்கள் இருந்தன. அதேபோல், 10 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த சுமார் ஆயிரம் இடங்கள் கடந்தாண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. தனியார் கல்லூரிகளின் இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதிக்கு ஏற்ப மாறுபடும்.

Re: மருத்துவ கல்லூரி தகவல்கள் - 2016
Wed May 25, 2016 9:29 pm
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு குறித்த மத்திய அரசின் அறிவிப்பு என்ன சொல்கிறது?
2016
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு தேசிய பொது நுழைவுத் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்களிக்க வழி செய்யும் அவசரச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் இந்தாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கும் பல் மருத்துவ படிப்புக்கும் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வழி ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு என்ற முறையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்களிக்க வழி செய்யும் அவசர சட்டத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார். இந்த முடிவை, மருத்துவம் படிக்க எண்ணி காத்திருக்கும் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்ற போதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றும் அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் அரசு வசமுள்ள ஒதுக்கீட்டு இடங்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் மத்திய அரசு இடங்களுக்கு நுழைவுத்தேர்வு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்ட மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் தேசிய பொது நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் j.p.nadda தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலமே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
- மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: 2016 - 2017
- கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் இணையதளங்கள்
- இலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
- ஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி: 2016 - 2017
- சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்குதல் 2016-17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum