நான்கு மாடுகள்
Wed Mar 13, 2013 6:07 pm
காடு
ஒன்றில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தினமும் மற்ற மிருகங்களைக் கொன்று
பசியாறி வந்தது.நாளாக ஆக அதற்கும் வயதாகி, வலுவிழந்தது.அதனால் தனக்குத்
தேவையான உணவை வேட்டையாட அதனால் அலைய முடியவில்லை.
ஒருநாள் அது நரி
ஒன்றைக் கூப்பிட்டு, தனக்கு அன்றாடம் தேவைக்கான உணவிற்கான மிருகத்தை,
நயமாகப் பேசி அழைத்து வருமாறும், அப்படி அது அழைத்து வரும் மிருகத்தை
அடித்து தான் தின்றது போக , மீதத்தை நரி உண்ணலாம் என்றும் கூறியது.
நரியும், அதற்கு ஒப்புக் கொண்டது.
காட்டை ஒட்டி இருந்த நகரில் நான்கு பசுக்கள் தினமும் ஒற்றுமையாய் புல்
மேய்ந்து வந்தன.அவற்றைப் பார்த்த நரிக்கு நாவில் எச்சில்
ஊறியது.இப்பசுக்களை சிங்கத்திடம் அழைத்துச் சென்றால் தினமும் தனக்கு உணவு
கிடைக்கும் என எண்ணி அவற்றிடம் சென்று பேசியது.ஆனால் ஒற்றுமையாய் இருந்த
பசுக்கள் நரியை விரட்டி அடித்தன.
நரி ஒரு தந்திரம் செய்தது..பசுக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடிவெடுத்தது.
முதலில் ஒரு பசுவிடம் சென்று..'எனக்குத் தெரிந்து..மற்ற பசுக்களை விட நீ
இளைத்து இருக்கிறாய்.உனக்குத் தேவையான புல் கிடைக்கவில்லை என
எண்ணுகிறேன்.அருகிலேயே..ஒரு புல்வெளி உள்ளது.பசுமையான புற்கள்.நீ தனியே
வந்தால் அவற்றை உண்டு ருசிக்கலாம்.ஆனால் உன் நண்பர்கள் உன்னுடன் வந்தால்,
உன் பங்கு சிறிதாகிவிடும்' என்றது.
பச்சைப் பசேல் என்றிருக்கும்
புல்லைத் தின்ன ஆசைப்பட்ட அந்த பசு..மற்ற மூன்று பசுக்களிடமும் சொல்லாது,
நரியுடன் சென்றது.நரி அப்பசுவை, சிங்கம் இருக்குமிடம் அழைத்துச்
சென்றது.சிங்கமும், தனியே வந்த அப்பசுவைக் கொன்று உண்டது.
அப்படியே, மற்ற பசுக்களையும் பிரித்து நரி அழைத்துச் சென்று சிங்கத்திற்கு உணவாக்கியது.
பசுக்கள் ஒற்றுமையாய் இருந்தவரை அவற்றை அணுக முடியாத நரி, அந்த ஒற்றுமையைக் குலைத்து, அவற்றைப் பிரித்து அழித்துவிட்டது.
கிறிஸ்துவின் கண்மணிகளே! கர்ச்சிக்கிற சிங்கமாகிய பிசாசு இதுபோலவே
இவ்வுலகில் ஏராளமான நரிகளை அனுப்பி நமது ஒற்றுமையை சபையிலும்,
குடும்பங்களில் குலைத்துவிட துடித்துக் கொண்டிருக்கிறான். ஆகவே தான் இயேசு
இவ்வாறு பிதாவிடம் வேண்டினார்,
யோவான் (17:23) ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும்,
என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும்
அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர்
என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
"நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே!"
Permissions in this forum:
You cannot reply to topics in this forum