குளிர்சாதன பெட்டி (Refrigerator) உருவான வரலாறு..!!
Wed May 11, 2016 9:40 pm
குளிர்சாதன பெட்டி (Refrigerator) உருவான வரலாறு..!!தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக கருதப்படுவதுதான் குளிர்சாதன பெட்டி (Refrigerator)! இது பேச்சு வழக்கில் ஃபிரிட்ஜ் (Fridge) என்று அழைக்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் என்றதுமே அது… தண்ணீர், குளிர்பானங்கள் போன்ற வகையறாக்களை குளிர்விக்கவும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சிகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி அவற்றை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பெட்டி என்பதுதான் தான் ஞாபகத்திற்கு வரும் இல்லையா நண்பர்களே.? உண்மையில் இந்த காரணங்களுக்காக ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்கப்படவில்லை.!
விளைச்சல் நேரங்களில் அதிகமாக கிடைக்கும் உணவுப்பொருட்கள் வெயில் காலங்களில் அழுகி கெட்டுப்போகாமல் வைத்து பாதுகாத்து விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் குளிர்சாதன பெட்டி. நாளடைவில் உயிர்காக்கும் மருந்துகளை., பதப்படுத்தி வைத்து பயன்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. தற்போது மூன்று நாளைக்கு தேவையான சாப்பாட்டை ஒரே நாளில் சமைத்து.., அவற்றை கெட்டுபோகாமல் வைத்து பயன்படுத்த இன்றைய நவீன இல்லத்தரசிகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது! ஃப்ரிஜ்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்பு முதலில் உணவுப்பொருட்கள் எப்படி கெட்டுப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.!
உணவுப்பொருட்களில் இயல்பாகவே இருக்கும் பாக்டீரியாக்கள் வெளிப்புறத்தில் உள்ள இயல்பான வெப்பநிலையில் அந்த உணவுப் பொருளில் உள்ள நீர்ச்சத்தின் உதவியுடன் பல்கி பெருகி அந்த உணவுப் பொருளை அழுக வைத்து விடுகின்றன இதைத்தான் நாம் உணவுப்பொருள் கெட்டுப்போய்விட்டது என்கிறோம்.! அவை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கப்படும் போது கெட்டுப்போகாமல் இருப்பதற்கு காரணம் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள இயந்திரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரெப்ரி ஜெரன்ட் (refrigerant) என்ற வாயுதான். இந்த வாயு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் அதிக அளவு ஆவியாகி ஃபிரிட்ஜ்ஜிக்குள் உறைபனி போன்ற குளிரை உற்பத்தி செய்கிறது. இந்த குளிர்ச்சி உணவுப்பொருளில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் நிகழ்வை தடுத்துவிடுவதால் உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருள் கெட்டுப்போவதில்லை.!
இன்று வீடுகளில் உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் பொதுவாக இரண்டு அடுக்கு கொண்டது. ஒன்று ரெப்ரிஜிரேட்டர் (Refrigerator) மற்றொன்று ப்ரீசர் (Freezer). இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டது. இதில் ரெப்ரிஜிரேட்டர் நீரின் உறைநிலைக்கு மேலேயுள்ள (3 to 5°C) வெப்பநிலையை கொண்டது.! நீரின் உறைநிலைக்கு கீழேயுள்ள (0 to -18 °C) வெப்பநிலையை கொண்டது தான் ப்ரீசர்.
ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்களில் நீற்றற்ற அமோனியா (anhydrous Ammonia) வாயு தான் குளிரை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. இது விஷத்தன்மை கொண்டதாக இருந்ததால் பின்பு சல்பர் டை ஆக்சைடு (Sulfur dioxide) பயன்படுத்தப்பட்டது. இதுவும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டதால் பின்பு CFC-12 எனப்படும் டை குளோரோ டை புளூரோ மீத்தேன் (Di-chloro-di-fluoro-methane) என்ற வாயு பயன்படுத்தப்பட்டது.!
டை குளோரோ டை புளூரோ மீத்தேன் மனிதர்களுக்கு தீங்கிழைக்கவில்லை என்றாலும் ஓசோன் படலத்தை (Ozone Layer) வெகுவாக பாதிக்ககே கூடியதாக இருந்தது. அதை தொடர்ந்து உலகமெங்கும் 1994 ஆம் ஆண்டு CFC-ஐ உற்பத்தி செய்யும் ஃபிரிட்ஜ்கள் தயாரிக்க தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து CFC இல்லாத ரெப்ரி ஜெரன்ட்டுகள் கொண்ட ஃபிரிட்ஜ்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இப்போது வரை இந்த வகை ஃபிரிட்ஜ்கள் தான் பயன்பாட்டில் உள்ளன.
todayindia

Permissions in this forum:
You cannot reply to topics in this forum