தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வேதியியல் உருவான வரலாறு Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேதியியல் உருவான வரலாறு Empty வேதியியல் உருவான வரலாறு

Tue Jul 30, 2013 8:22 pm
"உலகில் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. மாற்றத்தினை தவிர மற்ற அனைத்தும் மாறக் கூடிய வையே&ஹல்ர்ள்;. இது கம்யூனிச சித்தாந்தமாக தோன்றலாம். ஆனால் இந்த சொற்றொடர்கள் பல்வேறு அர்த்தங்களை கொண்டவை அல்லது பல்வேறு அர்த்தங்களாக விளங்கிக் கொள்ள தேவையான சுருக்க வாக்கியங் களாக அமைந்தவை. உலகின் அனைத்து பொருட்களும், உயிரினமும் பல்வேறு மாற்றங்களை கடந்து தற்போதைய நிலையினை எட்டியவை. இவற்றின் இயற்பியல் பண்புகளும் வேதியியல் பண்புகளும் பல்வேறு கட்டங்களில் பல வகையிலான மாற்றங்களை பெற்றவை. இதில் இயற்பியல் பண்புகளை விட்டுவிட்டு வேதியியல் பண்புகளை விளக்கும் பிரிவினை பற்றியும் அதன் வளர்ச்சியினைப் பற்றியும் கூற வேண்டு மெனில் வேதியியல் வரலாற்றினை கற்காலத்திலிருந்து தொடங்க வேண்டியது அவசியமாகிறது. 

கற்காலத்தில் வேதியியல்

கற்கால மனிதன் தன்னுடைய வாழ்வா தாரம், இயற்கையைப் பற்றி அறிய ஆர்வம் ஆகிய காரணங் களுக்காகத்தான் முதலில் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுபுறத்தை தெரிந்து கொள்ள முற்பட்டான். முதலில் பொருட்களின் இயற்பியற் பண்புகளான நிறம், வடிவம், கடினத்தன்மை, சுவை, எடை, அடர்த்தி (இரு பொருள்களின் எடையை ஒப்பிட்டு பார்த்து) மற்றும் மணம் ஆகியவற்றை தெரிந்துக் கொண்டு பொருட்களை வகைப்படுத்தலானான். கற்கால மனிதன் இயற்கையை பற்றி ஒரு ஒழுங்காக (அல்லது) முறையாக தெரிந்து வைத்திருக்கவில்லை. அவனுடைய அனைத்து புரிதலின் மூலம் இயற்கையில் நிகழும் மாற்றத்தினைப் பற்றி சரியான விளக்கம் தர இயல வில்லை. ஆனாலும் இயற்கையினைப் பற்றிய அவனுடைய அறிவு எல்லா வகையிலும் ஒரு அறிவியலருக்கு குறைந்தது அல்ல. இயற்கையைப் பற்றி அவனுக்கு தெரிந்த அறிவு தலைமுறைத் தலைமுறையாக செவிவழிச் செய்தியாக நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டது. இவை தன்னை மீறிய சக்தி ஒன்றுள்ளதென்ற நம்பிக்கைக்கு மனிதனை கொண்டுச் சென்றது.

முதன் முதலில் மனிதன் நெருப்பினைப் பற்றி மின்னல் அல்லது எரிமலை அல்லது மரங்களின் உராய்வு ஆகிய ஏதேனும் ஒன்றின் மூலம் தெரிந்திருக்க வேண்டும். பிறகு நெருப்பினை சுயமாக உருவாக்க கற்றுக் கொண்டபின் தன்னுடைய பச்சையான உணவில் நெருப்பு ஏற்படுத்தும் மாற்றத் தினை (சுவையில்) அறிந்துக் கொண்டு சமைக்கலா னான். இத்தகைய நிகழ்வின் மூலமாக தன்னை அறியாமல் பொருட்களின் வேதி மாற்றத்திற்கு மனிதன் காரணமானான்

காலங்கள் செல்லச் செல்ல களிமண்ணிலிருந்து மட்பாண்டங்கள், கண்ணாடி பீங்கான் பொருட்கள் போன்றவற்றை செய்யலானான். முதலில் மனிதன் தாமிரம், காரீயம், வெண்கலம், இரும்பு போன்ற உலோகங்களை வைத்து பொருட்களை உண்டாக்க தெரிந்து கொண்டான். தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மூலம் ஆபரணங்கள் செய்ய கற்றுக் கொண்டான். இவ்வாறு முதலில் வேதியியல் கலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் மூல மாகவே வளரத் துவங்கியது. பல வேதியல் முறைகளும் திடீரென எவ்வித முன்னறிவுமின்றி கண்டுபிடிக்கப்பட்டவையே.

பண்டைய உலகில் பருப்பொருட்களைப் பற்றிய சிந்தனைகள், கருத்தாக்கங்கள் அதிகம் விரவிக் காணப்படுவது கிரேக்கர்களின் தத்துவார்த்த எழுத்துகளிலேயே உள்ளது. இன்று உலகிலேயே அதிக அளவு எழுத்துச் சான்றுகளைக் கொண்டது கிரேக்கர் களின் தத்துவங்களே. இவர்கள் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்று நம்பி யிருந்தனர். இது இவர்களின் எழுத்துக்களின் மூலம் நமக்கு விளங்கும். வெப்பத்தின் மூலம் பொருட்கள் மாற்றமடைவதை உயிர் வேதியல் முறைகளோடு ஒப்பிட்டனர். எடுத்துக்காட்டாக விலங்குகளின் வயிற்றில் செல்லும் உணவு சமைக்கப்பட்டு செரிவடைவ தாக நம்பியிருந்தனர். கிரேக்கர்கள் மிகப்பெரிய சிந்தனைவாதிகள் மற்றும் தத்துவஞானிகள். ஆனால் சிறந்த சோதனையாளர்கள் இல்லை. எந்த ஒரு வேதியியல் முறையினையும் இவர்கள் சோதித்தறியவில்லை.

கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தாலஸ், "நீர்தான் உலகின் முதல் பொருள். இதிலிருந்துதான் மற்ற அனைத்து பொருட்களும் உருவாயின&ஹல்ர்ள்; என்ற கருத்தினை முன்வைத்தவர். அதே காலகட்டத்தில் தோன்றிய அனாக்ஸிமின்ஸ் தனக்கு முன்னர் கூறப்பட்ட கருத்துக்களை மாற்றம் செய்ய முற்பட்டார். இவர் "காற்று முதன்மைப்பொருள் எனவும் இதனை மெல்லியதாக்குவதன் (நெருப்பைக்கொண்டு) மூலமும், வலியதாக்குவதன் (காற்று வீசுதல், மேகம், மழை) மூலமும் மற்ற பொருளாக மாற்ற முடியும்&ஹல்ர்ள்; என்று கூறினார். அதன் பிறகு வந்த ஹெராக்ளிடஸ் நெருப்புதான் முதன்மை பொருள் என்று வாதிட்டார். பிதாகரஸ் முதன் முதலில் பொருட்களை கணிதவியல் மற்றும் வடிவியல் அடிப்படையில் சுருக்கமாக கூற முனைந்தார். புவியினை கனமாகவும் (Cube), நெருப்பினை நான்முகி (Tetrahedron) காற்றினை என்முகியாகவும் (Octahedron), நீரினை இருபது முகியாகவும் (Icosahedron), வெளியினை பன்னிருமுகியாகவும் (Dodecahedron) கணிதவியலுடன் தொடர்புபடுத்தினார். இன்று வேதியியலில் சேர்மங்களின் அணுக்கள் இணைந்துள்ளதை பிதாகரஸ் பயன்படுத்திய வடிவ கணிதத்தின் வாயிலாக விளக்கப் படுகிறது. ஆக வேதியியலின் முறையான வளர்ச்சியை பிதாகரஸ் தொடங்கிவைத்தார் என்பது பொருத்தமாக இருக்கும்.

பிதாகரஸிற்கு பின்னர் வந்த எம்பெடேகிளஸ், "புவி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய நான்கு பொருட்களே அடிப்படையானது. இவை ஒன்றிற்கொன்று இணைவதன் மூலமே மற்ற பொருட்கள் உருவாகின்றது. மனிதரில் காணப்படும் விருப்பு, வெறுப்பு போலவே இந்த நான்கு பொருட்களுக்குமிடையேயான தனிப்பட்ட கவர்ச்சியும், விலக்குமே பொருட்கள் இணைவதை தீர்மானிக்கின்றது என்ற கருத்தாக்கத்தினை முன்வைத்தார். இவர் முன்வைத்த இந்த நான்கு பொருள் கோட்பாடே சுமார் 2000 ஆண்டுகள் அறிவியல் (வேதியல்) உலகில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் முதல் அணுக் கோட்பாடு கிரேக்கர்களின் மூலமே உலகம் அறியத் துவங்கியது. கி.பி. 5- ஆம் நூற்றாண்டில் தோன்றிய லூஸிபஸ் மற்றும் டிமோக்ரிடஸ் ஆகியோர் "எல்லா பருப்பொருட்களும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது என்ற கருத்தினை முன்வைத்தவர்கள் இவ்விரு கிரேக்கர்களே. மேலும் "இந்த துகள்கள் வெற்றிடத்தில் நகருகின்றன&ஹல்ர்ள்; என்று கூறியதன் மூலம் முதல் இயக்கவியல் கோட்பாட்டை முன்வைத்தவர்கள் இவர்களே யாவர். புரூட்டோவின் சீடன் அரிஸ்டாட்டில் கி.மு. (384-322) பருப்பொருட்களின் நான்கு பண்புகளை (வெப்பம், குளிர்வு, ஈரம், உலர்) தெளிவுபடுத்தினார். இந்த நான்கு பண்புகளின் வெவ்வேறு அளவிலான இணைவு நான்கு அடிப்படை பொருட்களை (காற்று, நீர், நெருப்பு, புவி) உருவாக்குகிறது என்று நம்பினார். இவ்வாறு வேதியியல் அறிவியலின் சான்றுகள் கிரேக்கர்களின் எழுத்துச் சான்றுகளினூடே அறியப்படுகிறது.

பொதுவாக பண்டைய கால வேதியியல் வளர்ச்சிபெற முனைந்தது மக்களுக்கு தங்கத்தின் மீது அளவு கடந்த மோகம் ஏற்பட்டபோதுதான். தங்க வேட்கையினால் மனிதர்கள் தங்களுக்கு தெரியாத உலோகங்களை வேதிவினைகளுக்குட்படுத்தி தங்கமாக்க முனைந்தனர். கல்லையும் மண்ணையும் தங்கமாக்க முடியும் என்று நம்பினர். பண்டைய அரசர்கள் கூட வேதியியல் வினைஞர்களை இரும்பினை தங்கமாக்கும் சூத்திரத்தை கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்ட நிகழ்வுகள் வேதியியல் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

பண்டைய வேதியியலர்கள் கைவினைஞர்களாக இருந்தனர். குறிப்பாக உலோக வேலைப்பாடுகளில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்களின் தங்கத் தேடல்கள் பல்வேறு வேதிவினைகளை அறிய உதவின. கிரேக்கர்களில் சிறந்த அரசனான அலெக்சாண்டர் அலெக்சாண்டிரா நகரத்திற்கு வரும் பார்வையாளர்கள் தங்களுடைய நூல்களின் பதிப்பு களை நகரத்திலுள்ள பெரிய நூலகத்திற்கு தர வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தார். இதன் மூலம் பல்வேறு நாட்டினரின் வேதியியல் அறிவினை மட்டுமன்றி பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை கிரேக்கர்களின் நூலகத்தில் சேமிக்க முடிந்தது.

சீன வேதியியல்

சீனர்களின் ரசாயனம் எகிப்து மற்றும் அலெக்சாந்திரியா வேதியியலர்களின் முறையை பின்பற்றியே அமைந்திருந்தது. சீனர்களின் வேதியியல் வெறும் ஆவணங்களாகவே இருந்தனது. அவர்கள் அதனை ஆய்வக பரிசோதனைகளுக்கு உட்படுத்தவோ மேற்கொண்டு பரிசோதனைகளை தொடரவோ செய்ய வில்லை. சீனர்கள் இரும்பினை தங்கமாக மாற்ற ஒரு பொதுவான மருந்தினை கண்டுபிடிக்க முனைந்தனர்.

இஸ்லாமிய வேதியியல்

கி.பி 8 முதல் 11- ஆம் நூற்றாண்டுகளில் அரேபிய ஆட்சி தோன்றியபின் அலெக்சாண்டிராவில் கிரேக்க வேதியியல் மீண்டும் புத்துணர்வுப் பெற்றது. வேதியியலுடன் எண்ணியலும், சோதிடமும் இணைந்து கொண்டன. எகிப்திய கடவுள் தோத் அறிவியலுக்கும் கணிதத்திற்குமான கடவுளாக கருதப்பட்டார். சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் குறியீடுகள் தங்கத்தினையும் வெள்ளியினையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் சூரிய, சந்திர குறியீடுகள் கந்தகத்தினையும் பாதரசத்தினையும் குறிக்கப் பயன்பட்டன. வேதியியலின் குறியீடுகளை பயன்படுத்தி வேதிப்பொருட்களை குறிப்பிடும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. அன்றைய காலகட்டத்தில் கந்தகமும், பாதரசமும் தனிமங்கள் என்ற நோக்கில் குறிக்கப்படவில்லை. அவற்றை கற்பனை வேதிப் பொருட்களாகவே நினைத்திருந்தனர். பண்டைய அரேபியர்களின் காலகட்டத்தில்தான் சோடியம் ஹைட்ராக்ஸைடு (NaoH), பொட்டாசியம் ஹைட் ராக்ஸைடு (KOH) போன்ற காரங்களும், அம்மோனிய உப்புகளும் கண்டறியப்பட்டன. இஸ்லாமிய வேதியியலர்களில் சிறந்தவர் ஜபிர் இபின் ஹயான். இவர் சுமார் 500 வேதியியல் நூல்களை இயற்றி னார். இவருடைய கண்டுபிடிப்புகள் நடைமுறை பயன் பாட்டிற்கு உகந்தவையாக இருந்தன. எஃகினை தயாரிக்கும் முறை, ஆடைகளுக்கு வர்ணங்களை தரவல்ல சாயம், வார்னிஷ், நீர் ஒட்டாத துணி, முடி சாயம் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியவை ஜபிரின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.

அபுபக்கர் முகமது இபின் சக்காரியா அல்ராஸி மற்றுமோர் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய வேதியியலர் (கி.பி. 866-925). முதன் முதலில் எவ்வித மூட நம்பிக்கைகளுக்கும், குழப்பத்திற்கும் இடம்தராமல் தெளிவான, வேதியியல் பொருட்களின் வினைகளின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் வேதிப்பொருட்களை கனிமங்கள், காய்கறிகள், விலங்குகள் மற்றும் பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கள் என பிரித்து பட்டியலிட்டவர் இவரே. இவரே வேதி யியலில் மென்டலீப்பின் முன்னோடி. வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை கூட பட்டியலிட்டவர் ராஸி.

இஸ்லாமிய வேதியியலில் அடி அல் சினா அரேபியர்களின் அரிஸ்டாட்டில் என அறியப்படுபவர். ஐரோப்பியர்களால் அவி சென்னா என்றழைக்கப்படும் இவர் கனிமங்கள், பாறை உருவாதல் மற்றும் மண்ணி யலைப் பற்றி பல நூல்களை இயற்றினார். கனி மங்களை கற்களாகவும், உருகும் பொருளாகவும், கந்தகங்கள், உப்புக்களாகவும் அதன் அளவினைப் பொருத்து பிரித்துள்ளார். முதன் முதலில் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற இயலாது என்று துணிந்து கூறியவர் இவரே. ஐரோப்பியர்களின் தங்க மோகம் நீர்த்துப்போக காரணமானவர் அவிசென்னா.

ஐரோப்பாவின் வேதியியல் வளர்ச்சி

12-ஆம் நூற்றாண்டு வரையில் இஸ்லாமிய நாடுகளும் கிருத்துவ ஐரோப்பிய நாடுகளும் மிக அதிகமாக சந்தித்துக் கொண்டது பல்வேறு போர்க் களங்களில்தான். அதன்பிறகு, 12- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் இஸ்லாமிய வேதியியலர்களின் அறிவினையும், சிறப்பினையும் உணர்ந்து கொண்ட ஐரோப்பியர்கள் இஸ்லாமிய நாடுகளில் சென்று பல்வேறு நூல்களை தேடலாயினர். அவர்களின் தேடல் இறுதியில் மொழிப்பெயர்ப்பிற்கு கொண்டு சென்றது. இஸ்லாமிய நூல்களை ஐரோப்பியர்கள் தங்களுக்கு தெரிந்த லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தனர். ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் ஆப் செஸ்டர் குரானை லத்தீனில் மொழி பெயர்த்தார். அதன் பின்னர் 1141-இல் "வேதியியலின் பகுதிபொருட்கள்&ஹல்ர்ள்; என்ற தலைப்பில் அரேபிய வேதியியல் நூலை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். ஐரோப்பாவின் முதல் வேதியியல் நூல் இஸ்லாமிய வேதியியலர்கள் அளித்த நன்கொடை. லத்தீன் மொழியில், பல்வேறு வேதியியல் சொற்களுக்கு சமமான சொற்கள் இல்லை. எனவே மொழி பெயர்ப்பில் பல அரேபிய சொற்கள் அப்படியே இடம் பெற்றிருக்கிறது.

அல் - கலி(Al-gali) (அரபு), அல்கலை (Alcalai) லத்தீன், ஆல் - குல் (அரபு)- ஆல்கஹால் (லத்தீன்) இதுபோன்ற எண்ணற்ற சொற்கள் அரபு மொழியிலிருந்து லத்தீனுக்கு சென்ற சேர்ந்த வார்த்தைகளே.

வேதியியல் நூலின் மொழிபெயர்ப்பிற்கு பின் பார்தோலமிவ், வின்சென்ட் பீவிஸ், அல்பெர்டஸ் மேக்னஸ் போன்ற பிரான்ஸிஸ்கன் பாதிரியார்கள் அரேபிய, கிரேக்க வேதியியலர்களின் நூல்களை மொழி பெயர்த்து தங்களின் சீடர்களுக்கு கற்றுத் தந்தனர். இதனால் ஐரோப்பிய வேதியியல் வளர்ச்சி வேகமாக வளரத்தொடங்கியது.

பதினான்காம் நூற்றாண்டில் 22-வது போப் ஜான்பாதிரி ஐரோப்பியர்களின் தங்க பைத்தியத்தினை தடைசெய்வதாக நினைத்து வேதியியல் சோதனைகளுக்கு தடைவிதித்தபின், ஐரோப்பாவின் வேதியியல் வளர்ச்சி இது போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் வழி யாகத்தான் ஐரோப்பாவின் வேதியியல் வளர்ச்சியடைந்தது.

ஆங்கிலேயர்களின் வேதியியல்

14-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆங்கில வேதியியல் வளர்ச்சியை ஜாப்ரி சாசர் என்ற வேதியியலரின் நூல்களைக் கொண்டு அளவிடலாம். "த கானன் யிமோன் கதை&ஹல்ர்ள்; என்னும் நூலில் வேதியியல் கலையை மிக அறிவுப்பூர்வமாக கையாண்டுள்ளார். அதன்பின்னர் வந்த ஜார்ஜ் ரிப்ளி "தமக்கு உலோகத்தை தங்கமாக மாற்றும் சக்தியுள்ள தாகவும், அதை செய்ய தன்னிடம் மாந்திரீக கல் உள்ளதாக&ஹல்ர்ள்; மக்களை நம்ப வைத்திருந்தார். ரிப்ளி புகழ் பெறுவதற்கு இவ்வகை கட்டுக் கதையை கூறி வந்தபோதிலும் தன்னுடைய "வேதியியற் கூட்டு&ஹல்ர்ள்; என்னும் வேதியியல் நூலை எழுதியதால்தான் புகழ்பெற்றார்.

இத்தாலியில் வேதியியல் மறுமலர்ச்சி

1453-இல் கான்ஸ்டாண்டி நோபள் மற்றும் 1530- இல் ரோம பேரரசும் வீழ்ச்சியடைந்தப் பின்னர் இத்தாலியின் ஆர்வம், அறிவியல், கலை, இலக்கியம் ஆகியவற்றின் பக்கம் திரும்பியது. 1455-இல் கூட்டன்பர்கின் அச்சு இயந்திரம் செயல்படத் தொடங்கியபின் நூல்கள் அதிக எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன.

இத்தாலியின் வேதியியல் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் தியோப்ரஸ்டஸ் பம்பஸ்டஸ் வான் ஹோகன்ஹெய்ம் (1493 - 1541). அதுவரை தங்கம் உருவாக்குதலையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்த வேதியியலர்களை முதன்முறையாக மருத்துவ வேதியியல் என்னும் புதிய பிரிவிற்கு திரும்ப செய்தவர் இவரே. நோய்களை குணப்படுத்த உலோக மருந்துகளை கண்டுபிடித்து மருத்துவ சேவை செய்தார். அந்நாளில் வேதியியல் பொருட்களை வைத்து மருத்துவம் செய்திருக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்களின் நோய்களை குணப்படுத்துவதற்கு அக்கால கட்டங்களில் ஆன்மாக்களை சுத்தம் செய்துவந்தனர். (தமிழகத்தில் மந்திரம், தாயத்து, பாடம் போடுதல்போல). 

அவ்வாறு செய்வது சரியல்ல, மனிதர்களின் உடலில் பல்வேறு தாதுச்சத்துகள் சமநிலையில் உள்ளது. அவற்றில் ஏற்படும் குறைபாடே நோய்களுக்கு காரணம் என்று கூறியவர் ஹோகன்ஹெய்ம். இவர் கண்டுபிடிப்பில் சில எதிர்மறை நிகழ்வுகளும் நடந்தேறின. அதாவது குடலிலுள்ள புழுக்களை கொல்வதற்கு பாதரசம், நீரிழிவு நோய் குணமடைய இரும்பு சல்பைடு போன்ற வேதிப் பொருட்களை தவறுதலாக கொடுத்ததினால் பலர் இறந்தனர்.

இதுபோன்ற தவறுதலான மருத்துவமுறைகளை எதிர்த்தவர் ஆன்ரியாஸ் லிபாவியஸ் (1540 - 1616). ஆன்ரியாஸின் "அல்கைமியா&ஹல்ர்ள்; நூல் பல்வேறு அரிய வேதியியல் தகவல்களைக் கொண்டவை. கந்தக அமிலத்தை கந்தகத்தை (Sulphur) கொண்டு உருவாக்கலாம் என்று கண்டறிந்தவர் இவரே. அம்மோனியம் சல்பேட், துத்தநாகம் (Zinc), காரீய நைட்ரேட், அன்ஹைட்ரஸ் ஸ்டேனின் குளோரைடு போன்றவை இவரின் கண்டுபிடிப்புகளில் அடங்கும். முதன் முதலில் முறையான வேதியியல் ஆய்வகத்தினையும், வேதியியல் உபகரணங்களையும் வடிவமைத்தவர் இந்த ஆன்ரியாஸ் வேதியியலர்தான் என்பது இத்தாலிக்கு பெருமையான விஷயம்.

16-ஆம் நூற்றாண்டு வேதியியல்

மருத்துவ வேதியியல் என்ற பிரிவு கண்டறியப் பட்டவுடன் உலோகங்களுக்கு முக்கியத்துவம் பிறந்தது. எனவே உலோகத் தாதுக்களை வெட்டியெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு சுரங்கங்கள் தோன்றின. மண்ணிலிருந்து தாதுக்களை வெட்டியெடுத்து உலோகங்களை உலைகளில் உருக்கும் வேலை அதி தீவிரமாக வளர்ந்தது. வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களை வெட்டியெடுத்தவர்கள் செல்வந்தர்கள் ஆனார்கள். ஜார்ஜியஸ் அக்ரிகோலா (1494- 1555) எழுதிய "டிரி மெடலிகா&ஹல்ர்ள்;(De Re metallica) என்னும் நூல் பல்வேறு தொழிற்சாலைகள் தங்களின் புனித நூலாகவே கருதின. வெட்டியெடுத்த தங்கம் உருக்கி குளிர்விக்கப்பட்டு, 24 வெவ்வேறு தரத்திலுள்ள தங்க ஊசிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து எந்த தரத்திலுள்ள ஊசியுடன் சேருகின்றதோ அதுவே தங்கத்தின் தரமாக கொள்ளப்பட்டது. (இதுவே 24 காரட் தங்கத்தின் கதை). வேதியியல் துறை ஒரு தொழில் துறையாக உருமாறியது 16-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான். கடல் நீரை ஆவியாக்கி உப்பு தயாரிக்கும் தொழில் தொழிற்சாலைகளில் நடைபெறத் துவங்கியது இங்கிருந்துதான்.

17-ஆம் நூற்றாண்டு வேதியியல்

திட, திரவ வேதிப்பொருட்களை பற்றி அதிகமாகவே அறிந்திருந்த வேதியியல் உலகம் ஜோகன் பாப்டிஸ்டா வான்ஹெல்மான்ட் (1577 - 1644) மூலமாகத்தான் வாயுக்களைப் பற்றி சிந்திக்க துவங்கியது. மரக்கரியை எரிக்கும்போது அல்லது வைன் (Wine)நொதிக்கும் போது கரியமில வாயு (Carbon- di- Oxide) உருவாகிறது என்பதை கண்டறிந்தார். கரியமில வாயுவினை (CO2) அசிடிக் அமிலத்துடன் கார்ப னேட் சேர்மத்துடன் வினைபுரியச் செய்து உருவாக்கி னார். கரியமில வாயுவின் முக்கிய பண்பான தீயினை அணைத்தல் பண்பினைக் கொண்டு அவ்வாயு உருவாக்கத்தை நிரூபித்துக் காட்டியவர் ஹெல்மாண்ட் என்ற வேதியியலரே.

ராபர்ட் பாய்லே (1627- 1691) 17-ஆம் நூற்றாண்டின் மிக சிறந்த வேதியியலர். பருப்பொருள் வெவ்வேறு அளவிலான, வடிவிலான அணுக்களால் ஆனவை என்ற கருத்தை முன்வைத்தவர். இவருடைய பாய்லே விதி இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. எரிதல் பற்றிய இவருடைய ஆய்வின் மூலம் எரிதலுக்கு காற்று துணைபுரிகிறது என்று கண்டுபிடித்தார். இவருக்கு பின் வந்த ஜான் மாயோ, காற்றில் ஒரு பொருள் எரியும்போதும், பொட்டாசியம் நைட்ரேட்டில் எரியும்போதும் ஏதோ பொதுவான ஒன்று துணை புரிவதாக கருதினார். இதனை மாயோ நைட்ரோ- ஏரியல் (Nitro - aerial) ஸ்பிரிட் என்றார். வாயுவை சேகரித்து வைக்க நீர்த்தொட்டியில் கண்ணாடிக் குடுவையைப் பயன்படுத்தும் நுட்பத்தினை அறிமுகம் செய்தவர் மாயோ. மாயோவிற்கு பின் வந்த ஜீன் பெர்னௌலி துப்பாக்கி தோட்டா மருந்து எரிவதன் மூலம் வாயு உருவாகிறது. இவ்வாயுவே அதிசக்தியாக தோட்டாவினை முன்னோக்கி செலுத்துகிறது என்ற உண்மையினை உணர்த்தினார். சர் ஐசக் நியூட்டன் புவிஈர்ப்பு விசையை மட்டுமல்ல, "வேதிவினையில் ஈடுபடும் இரு வேதிப் பொருட்களின் வேதிக் கவர்ச்சியே அவ்வினையினை தீர்மானிக்கிறது&ஹல்ர்ள்; என்ற முக்கியமான கருத்தினை உலகுக்கு எடுத்துக் கூறிவிட்டுச் சென்றார்.

18-ஆம் நூற்றாண்டு வேதியியல்

18-ஆம் நூற்றாண்டு வேதியியலர்கள் தெளிந்த சிந்தனையுடையவர்களாக இருந்தனர் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு வேதியியலரின் கருத்துகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும், அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தங்களது ஆய்வினை தொடர்ந்து முடிவினை எட்டுபவர்களாகவும் இருந்தனர். கரியமில வாயுவினை தூய்மையான வடிவில் பிரித்தெடுத்த ஜோசப் பிளாக், தனிமங்களை வகைப்படுத்தி தனிம வரிசை அட்டவணையை உருவாக்குவதற்கு முன் வேதிப்பொருள்களுக்கிடையேயான கவர்ச்சி மற்றும் வினைகளை அட்டவணைப்படுத்திய டாபெர்ன் பெர்க் மான் ஆகியோர் தூய வேதியியலின் வளர்ச்சிக்கு உழைத்தனர். வேதிப்பொருட்களின் குறியீடுகள் அக்காலக்கட்டத்தில் முழுமை பெற்றிருந்ததை பெர்க்மானின் அட்டவணை மூலம் அறியலாம். ஹென்றி காவண்டிஷின் கண்டுபிடிப்பான எரிதலுக்கு துணைபுரியும் காற்றினை ஜோசப் பிரீஸ்ட்லி மறு ஆய்வுக்கு உட்படுத்தி, இறுதியில் காற்றில் ஆக்ஸிஜன் கலந்துள்ளது என்ற நிரூபணத்தை லவாய்சியர் உலகுக்கு உணர்த்தும் வரையிலான தொடர் ஆய்வு 18-ஆம் நூற்றாண்டில் நடந்தேறியது. வேதியியல் ஆய்வில் 18-ஆம் நூற்றாண்டுமுதல் ஒரு அதிவேக வளர்ச்சியை உலகம் சந்தித்து வருகிறது.

19-ஆம் நூற்றாண்டு முதல் வேதியியல் துறை ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 19-ஆம் நூற்றாண்டு வேதியியல் கரிம வேதியியல், கனிம வேதியியல், உயிரி வேதியியல், மருத்துவ வேதியியல் போன்ற பல பிரிவுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது.



நன்றி: வேர்ல்டு...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum