தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
 இங்க் – மை -Ink உருவான வரலாறு..!! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 இங்க் – மை -Ink உருவான வரலாறு..!! Empty இங்க் – மை -Ink உருவான வரலாறு..!!

Wed May 11, 2016 9:36 pm
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மனித இனத்தின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி (Computer) என்றால் மிகையில்லை. இந்த கணிப்பொறி கண்டறியப்பட்ட பின்புதான் மனித சமுதாயத்தின் லட்சிய இலக்குகள் இப்புவியையும் தாண்டி வானத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணிப்பொறிக்கு நிகரான கண்டுபிடிப்பு என்று வேறு ஏதாவது இருக்குமென்றால் அது சுமார் 4600 ஆண்டுகளுக்கு (2600 BC) முன்பு சீனர்களால் கண்டறியப்பட்டு இன்றுவரை நாம் எழுதுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் மையைத் (Ink) தவிர வேறொன்றும் இருக்க வாய்ப்பில்லை என்பேன் நான்..!

மனிதனது நினைவாற்றலின் வலிமை குறிப்பிட்ட எல்லை கொண்டது. அந்த எல்லையையும் தாண்டி சில விசயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதேவை ஏற்பட்ட போது தோன்றியதுதான் எழுத்துக்கள். ஆரம்பத்தில் மனிதன் எழுதியது அல்லது செதுக்கியது (Carving) கற்களில் மீது தான். பின்பு மரங்களிலும் அதைத்தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் ஒரு கூர்மையான கம்பி (Pointed Rod) கொண்டு எழுத்துக்கள் துளையிட்டு செதுக்கப்பட்டது. நாளடைவில் மனிதன் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் இளைய தலைமுறைகளிடம் பரிமாறிக்கொள்ள களிமண்ணிலும் (Clay) தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான்.

இப்படி எழுத்துக்களை உருவாக்க கற்களிலும் மரத்திலும் துளையிட்டு துளையிட்டு சோர்ந்து போயிருந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்கிய கண்டுபிடிப்புதான் இங்க் (Ink) என்று அழைக்கப்படும் மை. சீன (China) தத்துவவாதியான (Philosopher) டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black), புகைக்கரி (பைன் மர துண்டுகளை (Pine Wood) எரித்து கிடைக்கப்பெற்றது), ஊண் பசை (Gelatin Bone Clue-விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்டது), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும் (Lamp Oil) சேர்த்து ஆட்டு உரலில் (Mortar and Pestle) இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும்.

உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா நண்பர்களே இந்தியா இங்க் (India Ink). ஒரு சீனமனிதரால் சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா அதருக்கு ஒரு காரணம் உண்டு அப்போது மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.

அப்போது வரை கற்களை குடைந்து குடைந்து எழுத்துக்களை செதுக்கிக் கொண்டிருந்த மனிதன், மை (Ink) கண்டறிந்த பின்பு பறவைகளின் இறகுகளை (Bird’s Feather) கொண்டு அதே கற்களின் மீது துளையிடாமலே எழுத ஆரம்பித்தான். கி.மு. ஆயிரத்தி இருநூறாம் நூற்றாண்டு வரை (1200 BC) எந்த வித மாற்றத்தையும் சந்திக்காமல் டியன் தயாரித்த அதே தொழில் நுட்பத்தை கொண்டுதான் மை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன் பிறகு தாவரங்களில் இருந்து பெறப்பட்ட தாவர நிரமிகளை கொண்டும் ஆங்காங்கே நிலத்தில் கிடைக்கும் தாதுக்களை கொண்டும் வெவ்வேறு வண்ணங்களில் இங்க் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது.

இந்தியர்களை பொருத்தவரை சுமார் ரெண்டாயிரத்து நானூறு ஆண்டுகளாக (400 BC) மை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் கார்பன் கரி, விலங்குகளின் எலும்புகளை எரித்துக் கிடைக்கும் கரி மற்றும் நிலக்கரியிலிருந்து எடுக்கப்பட்ட தார் (Tar) ஆகியவற்றுடன் மேலும் சில மூலப்பெருட்களை சேர்த்து மாசி (Masi) என்று அழைக்கப்பட்ட ஒருவித மையை தயாரித்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்று வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

எப்போது பேப்பர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை சீனர்கள் கண்டுபிடித்தார்களோ (கி.பி.105) அப்போது முதலே எழுதுவதற்கு பயன்படுத்தும் மை-யின் தரத்தையும் மேம்படுத்தும் முயற்ச்சியில் தீவிரமாக இறங்கினார்கள். இதன் விளைவாக கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பசை, Gallnuts, எண்ணெய், இரும்பு உப்புகள் (Iron Salts) போன்றவற்றை கொண்டு மேம்பட்ட மை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சீனர்கள் கண்டறிந்தனர். இந்த தொழில்நுட்பம் தான் நவீன மை தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டுகளில் கெட்டியான அதாவது திடமான (Solid) இங்க் தயாரிப்பதில் சீனர்கள் வெற்றிபெற்றிருந்தனர். இந்த இங்க் குச்சிகளில் அடைக்கப்பட்டு எழுத நினைக்கும் போது தண்ணீரில் முக்கி நனைத்து பின் எழுதப்பட்டது. அதைதொடர்ந்து எட்டாம் நூற்றாண்டுகளில் ஹாவ்தொர்ன் (Hawthorn) என்ற மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மர பட்டைகளை தண்ணீரில் எட்டு நாள் ஊற வைத்து பின்பு அந்த தண்ணீருடன் ஒய்ன் (Wine) சேர்த்து நன்றாக வற்றும் வரை கொதிக்க வைக்கப்பட்டது. பின்பு அதற்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பைகளில் அடைக்கப்பட்டு சூரிய ஒளியில் உலர்த்தபட்டது. பின்பு மீண்டும் அதனுடன் ஒய்ன் மற்றும் இரும்பு உப்புக்கள் சேர்க்கப்பட்டு நீர்ம நிலைக்கு எட்டச்செய்து எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட மை முதலில் கரு நீல நிறத்திலும் காலப்போக்கில் அடர்த்தி குறைந்த நீல நிறத்திலும் இருந்தது.

மேலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை மை தயாரிக்க தேவைப்படும் கார்பன் என்கிற முக்கிய நிறமிப்பொருள் சீனாவிற்கு இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யபட்டுவந்தது. இந்நிலையில் சாங் வம்சத்தினர் (Song Dynasty) ஆட்சிக்காலத்தில் சீனாவில் புகழ் பெற்று விளங்கிய பல்துறை (polymath) வல்லுனரான சென் கெள (Shen Kuo; 1031 – 1095 AD) பெட்ரோலை எரிப்பதன் மூலம் கிடைக்கும் புகைக்கரியை கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதன் பிறகு சீனாவிற்கு தேவைப்பட்ட கார்பன் என்ற நிறமிப்பொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.

இரும்பு உப்புகள் (பெர்ரஸ் சல்பேட்), பசை, தண்ணீர், வால்நட் ஆயில் (Walnut Oil), மற்றும் புகைக்கரி ஆகியவற்றை கொண்டு அச்சகங்களுக்கு தேவைப்படும் மையை ஜெர்மனியை சேர்ந்த வல்லுநர் ஜோகன்னஸ் குட்டன்பர்க் (Johannes Gutenberg) என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தயாரித்து உலகின் முதல் அச்சகத்தையும் நிறுவினார். அதைத் தொடர்ந்து கரைப்பான்கள், பிசின்கள், உராய்வு நீக்கிகள், நிறமிகள் மற்றும் சாயங்கள் கொண்டு இன்றைய நவீன இங்க் தயாரிக்கப்பட்டது. உலகில் மை கொண்டு எழுதும் எழுத்து முறைகள் சீனாவில் துவங்கி ஜப்பானில் பிரபலமாகி ஐரோப்பிய நாடுகளை எட்டி பின்பு உலகம் முழுவதும் பரவியது.

டியன் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் கண்டறிந்திருக்கவில்லை தான் ஆனால் மை கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் கல்வியறிவு போதிக்கும் முறைகள் புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது என்றால் மிகையில்லை. கொஞ்சம் நினைத்து பாருங்கள் மை மட்டும் கண்டுபிடிக்கபடாமல் இருந்திருந்தால் இன்று நாம் பாடசாலைகளுக்கு புத்தகங்களுக்கு பதிலாக கற்களை தான் சுமந்து செல்ல வேண்டியதிருந்திருக்கும். ஆகையால் தான் பதிவின் துவக்கத்தில் மையை கணிப்பொறிக்கு ஈடான கண்டுபிடிப்பாக கூறினேன்.

- todayindia
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum