குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!
Tue Apr 12, 2016 6:27 pm
புகுந்த வீட்டுக்கு 'ஸ்லிம்' தமன்னாவா போகிற எல்லோரும் கொஞ்சநாளில் 'புஷ்டி' குஷ்புவா மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா? அட, கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா....இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டு, தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். தமனாவாகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை!
குடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ...செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா....
1. சமைக்கும் போது, டேஸ்ட் பாக்குறேன், லைட்டா பசிக்குது இப்படி பலவித காரணங்களை சொல்லி இன்ஸ்டண்ட் பிரேக் ஃபாஸ்ட்ல ஆரம்பிச்சு மினி மீல்ஸ், ஈவ்னிங் குட்டியா ஸ்நாக்ஸ்னு கிச்சன்ல சாப்டுட்டே சமைக்கறீங்களா...?
ஃபேமிலியில எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம் மிச்சமாகுற உணவை குப்பையில கொட்ட மனசில்லாம, நீங்களே சாப்பிடறீங்களா ? உடனே நிறுத்துங்க, இந்த பழக்கங்களை இப்படியே தொடரும் பட்சத்தில், உங்கள் நாற்பது பிளஸ் வயதில் மெடிக்கல் பில்லுக்கு தனி பட்ஜெட் போடவேண்டிவரும் குடும்பத்தலைவிகளே!
2. வீட்டில் அம்மி, உரல்னு எல்லாம் இருந்தாலும் அதை பயன்படுத்தாம எல்லா விஷயங்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர்தான் உபயோகப்படுத்துகிறீர்களா ? இனிமே செய்யாதீங்க - இல்லைன்னா சில வருடங்கள்ல வெயிட்டை குறைக்க 'ஜிம்'மே கதின்னு கிடக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!
3. காலையில் ஆரம்பிச்சு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் மதியமே முடிச்சிட்டு, லஞ்ச்,டின்னர்னு எல்லாமே டி.வி முன்னாடி உக்கார்ந்த இடத்துலயே பண்றது, மதிய சாப்பாட்டுக்கு பின்னாடி தூக்கத்தை வழக்கமாக வைச்சிருக்குற ஆளா நீங்க ? உடனே நிறுத்துங்க இந்த பழக்கத்தை!
அதற்கு பதிலாக ஹோம் க்ளீனிங், கார்டனிங்னு சின்ன சின்ன வேலை பாத்தீங்கன்னா உங்கள் ஃபிட்னஸ் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.
4. தினமும் காலை, மாலை மட்டும் இல்லாம, நினைச்ச நேரத்துக்கெல்லாம்னு குறைந்தபட்சம் மூன்று முறைக்குமேல் டீ, காபி குடிக்கறீங்களா ? அதனை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் சமையலுக்கு காய்கறி வேக வைக்கும்போது, எக்ஸ்ட்ராவா ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்கறி சூப் ரெடி செய்து குடித்தால் ஆரோக்கியம் பிளஸ் அழகும் நிரந்தரம்.
5. அலுப்பு காரணமாக மொட்டை மாடியில் துணி காயப்போடுவதை தவிர்த்து, கீழேயே கொடி கட்டி துணி காயவைக்கறது, அலுவலகம், ஷாப்பிங், வீடு என எங்குமே படிக்கட்டுகளை உபயோகிக்காமல், லிஃப்டை உபயோகப் படுத்தறதுன்னு, நம்ம வாழ்க்கையில் இயல்பா இருக்குற உடற்பயிற்சிகளை வெறுக்குறீங்களா ? உடனடியாக கைவிடுங்க - இல்லையென்றால் நாளடைவில் நிறைய உடல் சம்பந்தமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
6. வேலைக்கு போகாம வீட்லயே இருந்தாலும், வீடு பெருக்க, துடைக்க, துணி துவைக்கன்னு எல்லாத்தையும் செய்ய எங்க வீட்ல ஆள் இருக்காங்கன்னு பெருமை பேசிட்டிருக்கீங்களா ? இனி அப்படி பண்ணாதீங்க - உடல் உழைப்பே இல்லாம இருந்தா, நாளடைவில் எடை அதிகரிப்பதுடன், சோம்பேறியாகிடுவீங்க. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க சின்ன வேலைகளை எடுத்து செய்யுங்கள்.
7. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிப்ஸ், சாக்லெட் போன்ற தின்பண்டங்களை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக மிச்ச சொச்சத்தை வாங்கி நீங்கள் சாப்பிடறீங்களா? திரும்பவும் செய்யாதீங்க... வயசுக்கு ஏத்த உடை மட்டுமல்ல, உணவு விஷயத்திலும் கவனம் தேவை. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குழந்தைகளை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்.
8. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது துவங்கி அருகிலிருக்கும் கடைக்குகூட டூ வீலரில் அழைத்துச் செல்லும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா ? உடனே மாத்திக்கோங்க - ஒரு நாளைக்கு இது போன்ற சிறு விஷயங்களுக்காக குறைந்த பட்சம் ஒரு நாளில் 2-3 கி.மீ தூரம் நடக்க பழகிக் கொள்ளுங்கள். அது உங்களை செம ஃபிட்டாக வைத்திருக்கும்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளிஸ்
[size]
உங்கள் வீடே ஜிம்! எளிமையான 5 ஃபிட்னெஸ் டிப்ஸ்கள்!
நம் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு போறோம், தேடித் தேடி ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுகிறோம், விதவிதமான டயட்டை ஃபாளோ செய்கிறோம். எல்லாம் சரி. ஆனால் உங்க வீட்டில் சில விஷயங்களை மாற்றினாலே நீங்கள் ஃபிட்டா இருப்பீங்க பாஸ். உங்க வீட்டு சுவற்றின் வண்ணமோ, வெளிச்சமாக வீட்டை அலங்கரிப்பது துவங்கி வீட்டில் இருக்கும் சின்ன சின்ன விஷயத்தை மாற்றுவது வரை உங்க ஃபிட்னெஸ் அடங்கியுள்ளது. நீங்கள் பார்க்கும் சிறு சிறு வீட்டு வேலைகள் எல்லாமே ஒரு ஃபிட்னெஸ் தான்....உங்கள் வீட்டை ஜிம்மாக்கும் 5 விஷயங்கள் இதோ... 5 Easy Fitness Tips5 Easy Fitness Tips | உங்கள் வீடே ஜிம்! எளிமையான 5 ஃபிட்னெஸ் டிப்ஸ்கள்! - VIKATAN
[/size]
-இந்துலேகா.சி
Re: குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!
Tue Apr 12, 2016 6:28 pm
உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மிற்கு செல்கிறோம். தேடித் தேடி ஆர்கானிக் உணவுகளை உண்ணுகிறோம், விதவிதமான டயட்டை பின்பற்றுகிறோம். இன்னமும் இதைத்தான் செய்கிறீர்களா....இதெல்லாம் பழைய கதை பாஸ்...உங்க வீட்டில் சில விஷயங்களை மாற்றினாலே நீங்கள் ஃபிட்டா இருப்பீங்க.
உங்க வீட்டுச் சுவற்றின் வண்ணத்திலோ, வெளிச்சமாக வீட்டை அலங்கரிப்பது துவங்கி வீட்டில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை மாற்றுவது வரை எதையாவது செய்துகொண்டே இருங்கள். அப்புறம் பாருங்கள்...உங்க ஃபிட்னஸ் ரகசியம் எதில் அடங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்வீர்கள். நீங்கள் பார்க்கும் சிறு சிறு வீட்டு வேலைகள் எல்லாமே ஒரு ஃபிட்னெஸ் தான்....
உங்கள் வீட்டை 'ஜிம்'மாக்கும் 5 விஷயங்கள் இதோ...
1. நமக்கு பிடித்த உணவு வகை மூன்று தடவைக்கு மேல் கண்ணில்பட்டால் அதனை எடுக்க வேண்டும் என்ற ஆவல் எழுமாம். அதனால் திண்பண்டங்களை உங்கள் கண்ணில் படாதவாறு பாத்துக் கொள்ளுங்கள். பழங்களை உங்கள் கண்ணில் படுமாறு வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வீணாய்ப் போகிறதே என்று அவற்றை சாப்பிடத் தொடங்குவீர்கள்.
சமையலறையில் செல்ஃப் இருந்தால் நடு செல்ஃபில் பழங்கள், நட்ஸுகளை வைத்துவிட்டு, கண்ணில் படாமல் இருக்கும் மேல் செல்ஃபிலோ, கீழ் செல்ஃபிலோ மற்ற உணவுகள் வைக்கப் பழகுங்கள். நாளடைவில் உடலுக்குக் கேடான நொறுக்குத்தீனிகளை குறைக்க ஆரம்பிப்பீர்கள். நல்ல விஷயத்தை தொடங்குவதற்குதான் பாஸ் தயங்குவோம். சாப்பிடப் பழகிவிட்டால் அது பழகிவிடும்.
2. உங்களுக்கு பிடித்த பாடலையோ, படத்தையோ பார்க்கும்போது அதிகமாக சாப்பிடுவீர்கள். பசிக்கு சாப்பிடுவது போய் தேவையில்லாமல் உணவு உள்ளே இறங்கும். அதனால் சாப்பிடும்போது டி.வி பார்ப்பது, பாட்டு கேட்பது என்று இல்லாமல் சீக்கிரம் உணவு சாப்பிடப் பழகுங்கள். அது சரியான உணவையும் உங்கள் தேவைக்கு சரியான அளவு உணவையும் எடுத்து கொள்வீர்கள்!
3. வீட்டில் அதிகமான சோஃபாக்களை தவிருங்கள். வீட்டில் எங்கு பார்த்தாலும் சொகுசு இருக்கைகள் இருந்தால், சோம்பேறித்தனத்துடன் அமரதான் மனம் எண்ணும். வேலை செய்ய தோன்றாது. அதில் அமர்ந்து டி.வி பார்த்தால் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். உங்கள் வீட்டில் ட்ரெட் மில் அல்லது உடற்பயிற்சி உபகரணங்கள் இருந்தால் அதனை மூலையில் வைக்காமல் ஹாலில் இடம் மாற்றுங்கள். அதில் நடந்து கொண்டே டி.வி பாருங்கள். செடிகளைப் பராமரிப்பது, நாய்க்குட்டி வளர்ப்பது என சின்னச்சின்ன விஷயங்களை மாற்றினால் ஆக்டிவாக இருக்கத் தொடங்குவீர்கள்.
பருமனான ஒருவர் சராசரியாக ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ஒன்றரை மணிநேரம் சோஃபாவிலேயே அமர்ந்திருப்பதாக மயோ கிளினிக் ஆய்வு ஒன்று சொல்கிறது.
4. தினமும் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால் நீங்கள் அதைவிட குறைந்த நேரம் தூங்குகிறீர்கள் என்றால் நீங்கள் ஆரோக்கியமான இருப்பதற்கு சான்ஸ் மிகவும் குறைவு. தூக்கமின்மைக்கு ஸ்ட்ரெஸ், செரிமானக் கோளாறு என பல காரணங்கள் உள்ளன.
பிடித்த நிறத்தில் தலையணை, கர்ட்டன்ஸ், சுவற்றின் நிறத்தை மற்றுவது, இரவுகளில் விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடுவது, தூங்கச் செல்லும்போது போனை நோண்டாமல் கைக்கு எட்டாத இடத்தில் வைத்து தூங்குவது என சில விஷயங்களை மாற்றிக் கொண்டால் தூக்கம் நன்றாக வரத்தொடங்கும். எட்டு மணிநேரம் தூங்குகிறீர்கள் என்றால் அதிகாலை சீக்கிரம் எழுவது, உடற்பயிற்சி செய்வது.. என நல்ல தூக்கத்தால் உங்களது லைஃப் ஸ்டைல் உங்களை அறியாமலேயே மாறத்துவங்கும்.
5. பெரும்பாலான உயர்தர உணவகங்களில் லைட்டிங் மிகவும் டல்லாக இருப்பதை கவனித்திருப்பீர்கள். அதற்கு காரணம் நீங்கள் அதிக நேரம் அமர்ந்திருப்பீர்கள், சமைக்கப்பட்ட உணவினை அதிக நேரம் வைத்து அதன் தன்மையே மாறும் அளவுக்கு மாற்றிவிடுவீர்கள்.
அதிக நேரம், சாப்பிடுவது உங்கள் உடலுக்கு கேடு என்பதால் சீக்கிரம் சாப்பிடுங்கள். அதுமட்டுமின்றி வீட்டிலும் இருட்டில் அமர்ந்தோ, டல்லடிக்கும் லைட்டிங்கிலோ சாப்பிடாதீர்கள். எப்போதும் பளிச் லைட்டில் உண்பதால் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும், தேவையானதை மட்டும் சாப்பிடுவீர்கள்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளிஸ்
[size]
குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!
புகுந்த வீட்டுக்கு ஸ்லிம் தமன்னாவா போற எல்லாரும் போக போக புஷ்டி குஷ்புவா மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா ? அட கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தான்னு சமாதானம் சொல்றத விட்டுட்டு, தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். குடும்ப தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ...செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 8 Things a House Wife must avoid in day to day life8 Things a House Wife must avoid in day to day life | குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்! - VIKATAN
[/size]
என்ன பாஸ் வீட்டிலேயே ஜிம் அமைக்க தயாராகிட்டீங்களா...
- இ. ராஜவிபீஷிகா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum