நிதி ஆலோசனை தவறுகள்...தவிர்த்தால் தடையின்றி முன்னேறலாம்!
Wed Nov 25, 2015 9:26 pm
பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், fortuneplanners.com
நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்த வைத்தியத்தைத்தான் முதலில் கடைப்பிடிக்கிறோம். அதன்மூலம் உடல்நிலை சரியாகவில்லை என்று தெரிந்தபிறகுதான் மருத்துவரிடம் செல்கிறோம். அதேமாதிரி, ஒருவர் தன்னால் தனது நிதியை சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்றால்தான் நிதி ஆலோசகரைத் தேடிச் செல்கிறார். உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவரை முழுமனதோடு நம்பிச் செல்கிறவர்கள், நிதி ஆலோசகரைத் தேடிச் செல்லும்போது அந்த நம்பிக்கையை வைப்பதே இல்லை. மருத்துவர் என்பவர் ஒருவருடைய உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறார். நிதி ஆலோசகர் ஒருவருடைய நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறார். அந்த வகையில் இருவருமே செய்யும் வேலை மிக மிக முக்கியமானது.
நிதி விவரங்களை மறைக்காதீர்கள்!
குடும்ப நிதி ஆலோசனை பெற விரும்புகிறவர்களில் நிறையபேர் தங்களுடைய மொத்த சொத்து மற்றும் பலதரப்பட்ட வருமானத்தை நிதி ஆலோசகரிடம் பகிர்ந்துகொள்வதில்லை. டாக்டரிடமும் வழக்கறிஞரிடமும் மட்டுமல்ல, நிதி ஆலோசகரிடமும் நிதி தொடர்பான உண்மைகளை மறைக்கக் கூடாது. அப்படி மறைத்தால் உங்களுக்கான சரியான ஆலோசனையை அவரிடமிருந்து பெற முடியாது. நீங்கள் சொல்லும் தகவல்கள் உங்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்கத்தான் என்பதை உணருங்கள்.
திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள்!
பெரும்பாலானவர்கள் ஒரு நிதி ஆலோசகரைச் சந்தித்து, எதிர்காலத்துக்கான ஃபைனான்ஷியல் பிளானை வாங்குவதில் காட்டுகிற ஆர்வத்தை, அந்த பிளானை நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதே இல்லை. எந்தவொரு குடும்ப நிதித் திட்டமிடலையும் நிதி ஆலோசகர்கள் குருட்டாம்போக்கில் செய்து தருவதில்லை. ஒவ்வொரு முதலீடும் என்ன காரணத்துக்காக, எதில், எத்தனை ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும் என்பதைக் காரண, காரியங் களுடன் விளக்குவார்கள். இதில் ஒருவருக்கு சந்தேகம் இருந்தால், அதை நிதி ஆலோசகரிடம் கேட்டு தெளிவு பெறலாமே ஒழிய, அவர் பரிந்துரை செய்யும் திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது சரியல்ல. இதனால் குடும்ப நிதி ஆலோசகரை அணுகியதற்கான நோக்கமே வீணாகிவிடும்.
தட்டிக்கழிக்காதீர்கள்; தள்ளிப்போடாதீர்கள்!
சிலர் குடும்ப நிதி ஆலோசகரைத் தேடிவந்து, குடும்ப நிதித் திட்டமிடல் செய்துவிட்டு, எனக்கு சில கமிட்மென்ட்ஸ் உள்ளது. இன்னும் ஆறு மாதம் கழித்து நீங்கள் சொல்வதுபோல செயல் படுத்தலாம் என்பார்கள். ஆறு மாதம் கழிந்தபின், அடுத்த ஆறு மாதத்துக்குப்பின் தொடங்கலாம் என்று தள்ளிப்போடுவார்கள். உடல்நிலை சரியில்லை என்று டாக்டரைப் போய் பார்த்தபின், அவர் தரும் மருந்துகளை அடுத்த வாரம் முதல் சாப்பிடுவோம் என்று நினைப்போமா? அதுபோல, குடும்ப நிதித் திட்டமிடலை உடனடியாக நடைமுறைப்படுத்துவது என நீங்கள் மனதளவில் தயாரானால் மட்டுமே நிதி ஆலோசகரை சந்தியுங்கள். முதலீடுகளைத் தவிர்க்கும் எண்ணமோ, தள்ளிப்போடும் சிந்தனையோ இருந்தால், நீங்கள் நிதி ஆலோசரைச் சந்திக்காமலே இருந்துவிடலாம்.
முதலீடு செய்ததும் வருமானத்தை எதிர்பார்க்காதீர்கள்!
ஒருவர் தனக்கு குடும்ப நிதித் திட்டமிடல் கிடைத்தவுடன் அதை நடைமுறைப்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் வருடத்தில் அவர் சில முதலீடுகளை ஆரம்பித்திருக்கலாம். அதற்குள் அடுத்த வருடத்துக்கான மறு ஆய்வு வந்துவிடும். அதில் பெரிதாக மாற்றம் இருக்காது. உடனே குடும்ப நிதி ஆலோசகரைக் கலந்தாலோசித்ததினால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எதற்கு நாம் வருடா வருடம் நிதி ஆலோசகருக்குப் பணம் தரவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.
இது தவறான சிந்தனைப்போக்கு. ஓராண்டு காலத்தில் உங்கள் முதலீடு பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடாது. ஆனால், 5 - 10 ஆண்டுகள் நிதி ஆலோசகர் காட்டும் வழியில் பயணப்படும் போது, மிகப் பெரிய மாற்றங்களை உணர்வீர்கள். மேலும், நிதி ஆலோசகரின் வழிகாட்டுதல்படி நடக்கும்போது, எந்த தவறான முதலீட்டையும் செய்யாமல் இருப்பீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்திருப்பீர்கள். இந்த மாற்றம் நீண்ட காலத்தில் உங்கள் நிதி ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும்.
வருமானம் தரும் முதலீடுகளைத் தேர்வு செய்யுங்கள்!
குடும்ப நிதி ஆலோசனைத் திட்டத்தில் சொல்லப்படும் முதலீடுகள் ஒருவருடைய இலக்கு களை உள்வாங்கித் தேர்ந்தெடுக்கப்பட்டவை. அது ஒருவருக்கொருவர் வேறுபடும். ஆனால், பலரும் ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் ரிஸ்க் குறைவான முதலீடுகளையே நிதி ஆலோசகர் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த மூன்றும் ஒருவருடைய நீண்ட கால இலக்கு களுக்கு உதவாது. நிதி ஆலோசகர் தரும் உணவு உங்களுக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அது ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.இன்றைக்குப் பலதரப்பட்ட ஜங்க் உணவுகள் (Junk Food) இருப்பதுபோல, பல முதலீடுகள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், அவை உங்களுடைய நிதி சொத்துக்களைப் பாதிக்கக்கூடிய தாகவே இருக்கும்.
மேலே சொன்ன தவறுகளைத் தவிர்த்து, நிதி ஆரோக்கியத்தில் தடையின்றி முன்னேற்றப் பாதையில் எல்லோரும் பயணிக்கலாமே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum