திருச்சபையை விட்டு விலகும்போது செய்யத்தகாதவை
Wed Mar 16, 2016 1:34 am
1. உணர்ச்சி வசப்பட்டு அந்த மன உளைச்சலோடு விலகிச்செல்லாதிர்கள். உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்கும் அநேகர் பின்பு தங்கள் செய்கைகளுக்காக மனவருத்தம் அடைகின்றனர். ஆனால் நிதானமாகச் சிந்தியாமல் திடுதிப்பென முடிவேடுத்ததினால் அவர்களால் திரும்பி வரவும் முடியாது.
2. வித்தியாசமான கருத்துக்களோடு மனம் ஒத்து போகாததினால் விலகிச் செல்லாதீர்கள். சூழ்நிலையை நேருக்கு நேர் சந்தியுங்கள். தவறு செய்தவர்களை மன்னியுங்கள். உங்களுக்குத் தீமை செய்தவர்களை நேரில் சந்தித்து பேசுங்கள். உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுத்து உறவுகளை வளர்த்துக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.
3. உங்கள் சொந்த விருப்பத்தின்படி நடக்கமுடியாததினால் விலகிச் செல்லாதீர்கள். நீங்கள் இப்படிச் செய்தால் காலம் செல்லச் செல்ல அது உங்களுகுக் கடினமாக மாறிவிடும். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலை அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் குறிக்கிட காண்பீர்கள். இயேசுவின் சிலுவைப் பாதை நமது சுய நல வாழ்வில் குறுக்கிடும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழவும் முழு குழுவுக்கும் எது நன்மையாக இருக்குமோ அதைச் செய்யவும் கற்றுகொள்ளுங்கள்.
4. அற்ப காரியங்களுக்காக விலகி செல்லாதீர்கள்.அவைகள் உங்களை முதிர்ச்சிக்கு நேராக வழி நடத்த இடம் அளித்து, அவைகளின் மூலமாக வளர்ச்சி பெறுங்கள்.அவைகளை காட்டிலும் உங்களுடைய பரிபூரண ஒப்பு கொடுத்தல் மிகவும் முக்கியமாகும்.
5. பொறுப்புகளில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்று எண்ணி விலகி செல்லாதீர்கள். கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அங்கமாக இருக்கின்ற நீங்கள்,உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது உங்கள் மேல் விழுந்த கடமையாகும்.மற்றவர்களோடு கூட இணைந்து செயல்படுவதன் மூலமாக மட்டுமே நமது ஆண்டவரை பின்பற்றுவதில் நமது பங்கை நாம் நிறைவேற்ற முடியும்.
6. நீங்கள விலகி செல்லும் போது, திருச்சபையின் அமைதியான ஓட்டத்தை தடை செய்யாதீர்கள்.புறங்கூறுதலையும் கோள் சொல்லுதலையும் தவிர்த்து விடுங்கள்.திருச்சபையை விட்டு விலகின பின்பும் தொடர்ந்து அதற்கு இடையூறு விளைவிக்கிறவர்கள் மன்னியாதவர்களும் தங்கள் பழி வாங்கும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறவர்களுமாக இருக்கின்றனர்.
7. சபை பரிபூரணமாக இல்லை என்று எண்ணி விலகி செல்லாதீர்கள்.அது அப்படித்தான் இருக்கும்.
Suresh Kumar
Permissions in this forum:
You cannot reply to topics in this forum