வாய் விட்டு சிரிங்க
Thu Jul 25, 2013 6:52 pm
ஒரு பெண் வீட்டுக்கு தாமதமாக வந்தார்.
அவரது அப்பா தமிழில் திட்டினார்.
அவரது அம்மா தெலுங்கில் திட்டினார்.
அவளுடைய மாமா கன்னடத்தில் திட்டினார்.
அவளுடைய அத்தை மலையாளத்தில்
திட்டினார்.
இதிலிருந்து நீங்கள் அறியும்
உண்மை என்ன?
*
*
*
*
*
*
ஒரு பொண்ணு லேட்டா வந்தா 4 பேர் 4
விதமா பேசுவாங்க..
அவரது அப்பா தமிழில் திட்டினார்.
அவரது அம்மா தெலுங்கில் திட்டினார்.
அவளுடைய மாமா கன்னடத்தில் திட்டினார்.
அவளுடைய அத்தை மலையாளத்தில்
திட்டினார்.
இதிலிருந்து நீங்கள் அறியும்
உண்மை என்ன?
*
*
*
*
*
*
ஒரு பொண்ணு லேட்டா வந்தா 4 பேர் 4
விதமா பேசுவாங்க..
Re: வாய் விட்டு சிரிங்க
Thu Jul 25, 2013 6:56 pm
பத்திரிகை ஆஃபீஸுக்கு வந்த ஒரு பெண்....
“என் கணவர் காலமாய்ட்டார். மிகப்பெரிய அளவில் விளம்பரம் பண்ணனும் ... விளம்பரம் போட எவ்வளவு ஆகும்?”
“வார்த்தைக்கு நூறு ரூபாய்”
“ப்ச்.. என்கிட்ட இருநூறு ரூபாய்தான் இருக்கு. சரி.. நாசா காலமானார்’ அப்படின்னு ரெண்டே வார்த்தை போட்டுடுங்க”
பத்திரிகைகாரருக்குப் பாவமாய்த் தோன்றவே..
“சரி..உங்களுக்கு சலுகை தர்றோம். நாலு வார்த்தை எழுதிக் கொடுங்க. இருநூறு ரூபாய் போதும்”
அந்தப் பெண்மணி எழுதிக் கொடுத்தார்...
“நாசா காலமானார். கார் விற்பனைக்கு..”

Thu Jul 25, 2013 6:59 pm
பேராசிரியர்: இதை படிப்பா..
மாணவன்: என்ன சார் இது?
ஒண்ணுமே புரியலை.
பேராசிரியர்: எனக்கும் புரியலை,
அதான் உன்கிட்ட கொடுத்தேன்.
மாணவன்: என்ன சார் சொல்லறீங்க?
பேராசிரியர்: உன்னோட டெஸ்ட் பேப்பர்தான் அது?
மாணவன்: என்ன சார் இது?
ஒண்ணுமே புரியலை.
பேராசிரியர்: எனக்கும் புரியலை,
அதான் உன்கிட்ட கொடுத்தேன்.
மாணவன்: என்ன சார் சொல்லறீங்க?
பேராசிரியர்: உன்னோட டெஸ்ட் பேப்பர்தான் அது?
Re: வாய் விட்டு சிரிங்க
Thu Jul 25, 2013 7:01 pm
இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.
அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான்.
இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன??
இயமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.
இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??
இயமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன??
இயமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்கு பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன.

ஒரு குடிகாரன் பாரில் உக்காந்து அழுது கிட்டிருந்தான். .
அவன் முன்னால் ஒரு கிளாசில் நிறைய சரக்கு இருந்தது.
அப்போ அங்க வந்த இன்னொருவன் அதை எடுத்துது மட மடன்னு குடிச்ச்சிட்டான்.
இந்தப் பையன் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தான்,.
வந்தவனும் ஓகே .....ஓகே .....எனக்கு அழுவது பிடிக்காது. உனக்கு வேண்டும் என்கிற அளவுக்கு வாங்கித் தருகிறேன் அழாதே என்றான்.
இவனோ, அது பிரச்சினை இல்லை. இன்று எனக்கு ஆபீசில் சரி பாட்டு. வீட்ட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. நானும் வீட்டுக்கு வர காரை எடுக்கப் போனேன். கார் திருட்டுப் போயிருந்தது. போலிசும் கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வாடகை கார் பிடித்து வீட்டுக்குப் போனேன். வீடு போனதும் தான் தெரிந்தது என் பர்சை அந்த வாடகைக் காரில் விட்டுட்டேன்ன்னு,....
அதனால் எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை, அவளும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. சரின்னு தான் இந்த பாருக்கு வந்தேன். என் வாழ்கையை இத்தோட ..... முடிச்சுக்க்கலாம்ன்னு தான் சரக்கு முழுசும் விஷம் கலந்து வைத்து விட்டு..... காத்திருந்தேன்.
அப்போ தான் அதை நீ எடுத்து சொட்டு விடாம குடிச்ச,
இப்போ உன்னை நினைத்துத் தான் அழுது கிட்டு இருக்கேன்.

Fri Jul 26, 2013 8:23 am
Last Bench Mass Students Answers :
சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?
** ரொம்ப தூரம்........,
* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.
* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..
* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்
* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..
* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )
* இந்தியாவுக்கும்-., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..
* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு-இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German
பாஷை சுத்தமா தெரியாதே..!
நன்றி: முகநூல்

Fri Jul 26, 2013 8:42 am
20 ம் தேதி:
---------------
"ஒரு ஆயிரம் ரூபாய் அவசரமா வேணும். சம்பளத்துக்கு வேற இன்னும் பத்து நாள் இருக்குது......"
"உங்களுக்கே தெரியும். வீட்ல ஏதுங்க பணம்?"
"எப்படியாவது பார்த்து கொடேன்"
"இந்தாங்க. இந்த ஆயிரம் ரூபாதான் கடைசி. இனிமே சம்பளம் வந்தாத்தான்...."
23 ம் தேதி
--------------
"ஒரு ஆயிரம் ரூபா...."
"உங்களுக்கு இதே வேலையா போச்சு. எங்கிட்ட இல்ல"
"எப்படியாவது...."
"இந்தாங்க. 800 ரூபா இருக்குது. சீட்டு பணம்"
"சரி கொடு. அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்"
# இந்த பொம்பளைங்கள மட்டும் நிதி மந்திரியா போட்டா இந்தியா மஞ்ச கடுதாசி கொடுக்கற நிலைமைக்கு வந்தாலும் சுருக்கு பையில ஒரு ஐநூறு கோடியாவது வச்சிருந்த் இந்தியாவ காப்பாத்திடுவாங்க......

Fri Jul 26, 2013 8:44 am
1.ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !
2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..
3.பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?
4.பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு..
5.ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.
நன்றி: உங்களுக்கு வந்த...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum