Page 1 of 2 • 1, 2
கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Sat Jan 17, 2015 8:58 pm
1. செருப்புக் கடிச்சதுன்னு டாக்டர் கிட்ட போனியே என்ன ஆச்சு?
இப்ப என் பர்ஸ் கடிச்சிருச்சு!
2. அந்த டாக்டர் எதையும் டெஸ்ட் பண்ணாம மருந்து கொடுக்க மாட்டார்!
அதுக்காக என் பர்ஸ்ல பணம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கிறதெல்லாம் ஓவர்!
3. கல்யாணத்துல ஜோடி மாறிப்போச்சுன்னு சொன்னியே அப்புறம் என்ன ஆச்சு?
நல்ல வேளை யாரும் கவனிக்கிறதுக்கு முன்னாடி நல்ல ஜோடிச்செருப்பா போட்டுக்கிட்டு வந்துட்டேன்!
4. மாப்பிள்ளை அதிக வரதட்சணை கேக்கறாராமே ஏன்?
அவங்க ஊர்ல பவர்கட்டே கிடையாதாம்!
5. தலைவர் தேர்தல்ல தோத்தும் அசரலை!
எப்படி சொல்றே?
தோற்கவைத்து என்னை தொகுதியில் தக்கவைத்துக்கொண்ட வாக்காள பெருமக்களுக்கு நன்றின்னு பேனர் வெச்சிருக்கிறாரே!
6. புது மானேஜர் ரொம்ப ஸ்ட்ரிக்டாமே?
ஆமாம் ஒரு நாளைக்கு பேஸ்புக்ல அஞ்சு ஸ்டேட்டஸுக்கு மேல போடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டாரு!
7. தலைவர் இப்படி உளறுவார்னு எதிர்பார்க்கலை!
ஏன் என்ன ஆச்சு?
நாங்க ஜெயித்தால் கிருஷ்ணா நதிநீர் திட்டம் போல ராமர் நதி திட்டம் கொண்டுவருவோம்னு அறிக்கை விட்டிருக்கார்.
8. சிக்கனமா படம் எடுத்தா சென்சார்ல தடை பண்ணிட்டாங்களா? ஏன்?
காஸ்ட்யூமே இல்லாம எடுத்தோம்!
9. அந்த அரசியல்வாதி தன்னோட பொண்ணுக்கு அந்த வரனை ஏன் வேணாம்னு சொல்லிட்டார்?
மாப்பிள்ளை பையன் ஐ.டி யிலே இருக்கார்னு சொன்னதும் பயந்திட்டாராம்.
10. மன்னர் ஏன் காலை நீரில் நனைத்து ஆறவிட்டு பின் நடந்து செல்கிறார்?
காலாற நடக்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னாராம்!
11. வில்லன் ஹீரோயினை கடத்தி ஒரு ரூம்ல தள்ளி ரேப் பண்றப்ப தீடீர்னு கரண்ட் போயிருது இருட்டா ஆயிருச்சு…
அப்புறம் ஹீரோயின் தப்பிச்சாளா இல்லையா?
யாருக்குத் தெரியும் அதான் கரண்ட் போயிருச்சே!
12. தலைவர் ஏன் ஓட்டுச்சாவடியிலே போன் பண்ணி பிரச்சனையிலே சிக்கிக்கிட்டார்?
யாரோ லைன்ல வாங்க தலைவரேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கார்!
13. கட்சிப்பணத்தை ஏன் எடுத்தீங்கன்னு தலைவரை கேட்டா என்ன சொன்னார்?
வீட்டையும் கட்சியையும் அவர் பிரிச்சுப்பார்க்க விரும்பலையாம்!
14. அவரு போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
காலிலே ஆணின்னு போனதுக்கு கொறடா எடுத்து பிடுங்க வராரே!
15. என் மனைவிக்கு என்னை சமைக்கவிடவே பிடிக்காது!
பலே!
அட போங்க சார்! தினமும் ஹோட்டல்ல விதம் விதமா வாங்கி வரச்சொல்லுவா!
16. ராணியாருக்கு மன்னர் மேல் என்ன கோபம்?
அரண்மனை சேடிப்பெண்களோடு அடிக்கடி கண்ணா மூச்சி ஆடுவதை யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்களாம்!
17. தலைவர் எதுக்கு திடீர்னு டீக்கடை ஆரம்பிக்கணும்னு சொல்றாரு!
டீ வித்தா பிரதமர் ஆயிரலாம்னு யாரோ சொன்னாங்களாம்!
18. தலைவர் பழசை இன்னும் மறக்கலை!
எப்படி சொல்றே?
ஓட்டுப்போட போன இடத்திலே மைப்புட்டியை ஆட்டைய போட்டுட்டு வந்திட்டாரே!
19. மன்னா! எதிரி நாட்டு மன்னன் நீங்கள்தூதனுப்பிய புறாக்களை சமைத்து சாப்பிட்டு விட்டானாம்!
அட அல்ப பயல்! எனக்கு ஒரு பார்சல் கூடவா அனுப்பாமல் விட்டுவிட்டான்!
20. ஓட்டுசதவீதம் அதிகரிச்சுதுன்றதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்!
அப்புறம்?
நாங்க ஆட்சிக்கு வந்தால் ஓட்டு சதவீதத்தை கட்டுப்படுத்துவோம் அறிக்கை விட்டிருக்காரு!
21. உங்க பையனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கா?
எப்படி சொல்றீங்க?
கிச்சன்ல மும்முரமா வேலைசெஞ்சிக்கிட்டுருக்கானே!
22. எதுக்கு பத்து நாள் மெடிக்கல் லீவ் கேட்கறீங்க?
பகல்ல தூங்க கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரே!
23. சில்லறை தட்டுப்பாட்டை போக்கறதுக்கு முயற்சி செஞ்சதுக்கு ஜெயில்ல போட்டுட்டாங்க!
என்ன பண்ணே?
கோயில் உண்டியலை உடைச்சேன்!

Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Wed Feb 18, 2015 6:00 am
"என் மனைவி ரொம்ப
அப்பாவிங்க.."
" ஏன் அப்படி சொல்றீங்க.."
" நான் அடிச்சா அழணும்னுகூட
அவளுக்கு தெரியல. திருப்பி
அடிக்கறா..!?
அப்பாவிங்க.."
" ஏன் அப்படி சொல்றீங்க.."
" நான் அடிச்சா அழணும்னுகூட
அவளுக்கு தெரியல. திருப்பி
அடிக்கறா..!?
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Wed Feb 18, 2015 6:00 am
மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:
பாலு : டேய் ! இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.
வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை; வெளியே சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.
பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை; ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்..
*
*
*
சோமு: போச்சு! போச்சு !! நாம தப்பிக்கவே முடியாது
பாலு & வேலு: ஏன்!!!!!!
சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்...வெளிய சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும் முடியாது.... சுவர ஓட்ட போட்டும் தப்பிக்க முடியாது....
பாலு: சரி விடுடா .....முதல்ல அவங்க சுவர கட்டட்டும்... நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??...

Wed Feb 18, 2015 7:12 pm
காதலிக்கிற பொண்ணுகள பாத்து கேக்குறேன்,
#ஷாஜகான் மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டுனான்.
#அலெக்ஸான்டர் தன் காதலியை மணப்பதற்காக டெலிபோனை கண்டுபிடிச்சான்.
யாரோ ஒருத்தன் வேற யாருக்காகவோ என்னமோ கண்டுபிடிச்சான்.
நீங்க என்னடி இதுவரைக்கும் கண்புடிச்சீங்க??
நான் சொன்னது சரினா Share பண்ணுங்க மக்களே.
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Thu Feb 19, 2015 3:13 am
பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!
ஆதாரம்:
1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
முறையை அறிமுக படுத்தியுள்ளார்.
2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!
3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.
4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.
5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"
6. சுய தம்பட்டம் அடிக்க "profile"
7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"
8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
"Block this person"
9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"
10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"
இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க
சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள்
சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..
படித்தவுடன் மறவாமல் மொய் எழுதிச் செல்லவும்.
அதாங்க "like" பட்டன் !!

Thu Feb 19, 2015 6:17 pm
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ்சேலைரூ10 நைலான்சேலைரூ8 காட்டன்சேலைரூ5
ரோசி;என்னங்க எனக்குரூ 500 குடுங்க50 சேலை வாங்கிடுறேன்
மணி:அடியே அல்பம் இது லாண்டாி கடைடி அயன் பண்ற சார்ஜ் அது......
ரோசி:???????????????????
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Thu Feb 19, 2015 6:20 pm
அரிசி கிலோ எவ்வளவு?
பதினைஞ்சு ரூபாய்!
கொஞ்சம் குறைச்சுப் போடக் கூடாதா?
இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க . இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?
பதினைஞ்சு ரூபாய்!
கொஞ்சம் குறைச்சுப் போடக் கூடாதா?
இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க . இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Sat Feb 21, 2015 8:29 pm
ஆண்கள் சிறந்தவர்கள்... ஏன்?
1.சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்..
2.ஆயாவா , ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்..
3.பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்..
4.மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல.. gasp emoticon
5.கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம்.
6.எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறார்.. smile emoticon
7.லிப்ட் கேக்கற பொன்னுகள திட்டினது கெடையாது..
8.எந்த அப்பனும் மகனைத் தனியாக அழைத்துக் கேட்பதில்லை ''மருமகள் உன்னை நல்லபடியா பாத்துக்கிறாளாப்பா..?''
9.படித்து முடித்தவுடன் வெளிநாட்டு வாழ் பெண்களை தேடுவதில்லை !
10.சாப்ட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்.
11.பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்..
12.மாமனார் கொடுமையால செத்த மருமகனே கிடையாது.
13.தன் மொபைலுக்கு தானே ரீச்சார்ஜ் செய்துகொள்வதால்
14.எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டறது ..
15.அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடிவளர மூலிகை எடுத்து வந்து தருவதால்..
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Sat Feb 21, 2015 8:29 pm
காலிலே பாம்பு கடிச்சு அஞ்சு
நிமிசம் கூட ஆகலையே....
எப்படி செத்தாரு?
விஷம் தலைக்கு ஏறாம
இருக்க,
கழுத்தில் இருக்கமா
கட்டிட்டோம்ல..
via RK
நிமிசம் கூட ஆகலையே....
எப்படி செத்தாரு?
விஷம் தலைக்கு ஏறாம
இருக்க,
கழுத்தில் இருக்கமா
கட்டிட்டோம்ல..
via RK
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Tue Feb 24, 2015 8:03 am
கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Tue Feb 24, 2015 8:03 am
கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Fri Feb 27, 2015 8:38 am
உங்க மனைவிகிட்டே பொய்யே பேச மாட்டீங்களாமே?
ஆமா, வாயே திறக்க மாட்டேன், எதுக்கு வம்பு? எதையாவது உளறிட்டா?
####
வேட்பாளர்: அந்த தொகுதிக்கு கால்நடை யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!
தொண்டர்: மனுஷனாவே போயி கேளுங்க தலைவரே!
####
மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
####
சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?
அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!
#####
கணவன் – இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?
மனைவி – சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.
####
மாப்ளே? குறள் ஓன்று சொல்லு
கற்க ! கசடற . கல்கண்டு ! குமுதம் ! கற்றபின் ! பாதி விலைக்கு! விற்க.!
ஆஹா ! ஆஹா
#####
வேட்பாளர்: என் பேரை தர்மம் னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?
உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட தர்மம் தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!
####
மனைவி – வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க...
கணவன் – நிஜமாவா சொல்லற?
மனைவி – ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது..
####
கணவன் : வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது...
மனைவி : அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?
கணவன் : வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்...
மனைவி : கர்ர்ர்ர்ர்ர்.....

Fri Feb 27, 2015 8:45 am
பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது..
..தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப்
பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல்
ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால்
பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]
4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட
தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது.....
குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும்
போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான
பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும்
போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில்
நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன
பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது,
நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]
9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்....
மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]
10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு,
நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Fri Feb 27, 2015 1:52 pm
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோ மீட்டராவது ஓடுங்கள்.
பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்
பகலில் இரண்டு மணி நேரம் தூங்குங்கள்.
தினசரி பேப்பரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.
தினமும் நண்பர்களுடன் காலையில் மூன்று மணி நேரமும மாலையில் மூன்று மணி நேரமும் மனம் விட்டு பேசுங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போங்கள்!
- இத்தனையையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால் நீங்கள் வேலை வெட்டியில்லாதவர்
உபயோகமான வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum