Page 2 of 2 • 1, 2
கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Sat Jan 17, 2015 8:58 pm
First topic message reminder :
1. செருப்புக் கடிச்சதுன்னு டாக்டர் கிட்ட போனியே என்ன ஆச்சு?
இப்ப என் பர்ஸ் கடிச்சிருச்சு!
2. அந்த டாக்டர் எதையும் டெஸ்ட் பண்ணாம மருந்து கொடுக்க மாட்டார்!
அதுக்காக என் பர்ஸ்ல பணம் இருக்கான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கிறதெல்லாம் ஓவர்!
3. கல்யாணத்துல ஜோடி மாறிப்போச்சுன்னு சொன்னியே அப்புறம் என்ன ஆச்சு?
நல்ல வேளை யாரும் கவனிக்கிறதுக்கு முன்னாடி நல்ல ஜோடிச்செருப்பா போட்டுக்கிட்டு வந்துட்டேன்!
4. மாப்பிள்ளை அதிக வரதட்சணை கேக்கறாராமே ஏன்?
அவங்க ஊர்ல பவர்கட்டே கிடையாதாம்!
5. தலைவர் தேர்தல்ல தோத்தும் அசரலை!
எப்படி சொல்றே?
தோற்கவைத்து என்னை தொகுதியில் தக்கவைத்துக்கொண்ட வாக்காள பெருமக்களுக்கு நன்றின்னு பேனர் வெச்சிருக்கிறாரே!
6. புது மானேஜர் ரொம்ப ஸ்ட்ரிக்டாமே?
ஆமாம் ஒரு நாளைக்கு பேஸ்புக்ல அஞ்சு ஸ்டேட்டஸுக்கு மேல போடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுட்டாரு!
7. தலைவர் இப்படி உளறுவார்னு எதிர்பார்க்கலை!
ஏன் என்ன ஆச்சு?
நாங்க ஜெயித்தால் கிருஷ்ணா நதிநீர் திட்டம் போல ராமர் நதி திட்டம் கொண்டுவருவோம்னு அறிக்கை விட்டிருக்கார்.
8. சிக்கனமா படம் எடுத்தா சென்சார்ல தடை பண்ணிட்டாங்களா? ஏன்?
காஸ்ட்யூமே இல்லாம எடுத்தோம்!
9. அந்த அரசியல்வாதி தன்னோட பொண்ணுக்கு அந்த வரனை ஏன் வேணாம்னு சொல்லிட்டார்?
மாப்பிள்ளை பையன் ஐ.டி யிலே இருக்கார்னு சொன்னதும் பயந்திட்டாராம்.
10. மன்னர் ஏன் காலை நீரில் நனைத்து ஆறவிட்டு பின் நடந்து செல்கிறார்?
காலாற நடக்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னாராம்!
11. வில்லன் ஹீரோயினை கடத்தி ஒரு ரூம்ல தள்ளி ரேப் பண்றப்ப தீடீர்னு கரண்ட் போயிருது இருட்டா ஆயிருச்சு…
அப்புறம் ஹீரோயின் தப்பிச்சாளா இல்லையா?
யாருக்குத் தெரியும் அதான் கரண்ட் போயிருச்சே!
12. தலைவர் ஏன் ஓட்டுச்சாவடியிலே போன் பண்ணி பிரச்சனையிலே சிக்கிக்கிட்டார்?
யாரோ லைன்ல வாங்க தலைவரேன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கார்!
13. கட்சிப்பணத்தை ஏன் எடுத்தீங்கன்னு தலைவரை கேட்டா என்ன சொன்னார்?
வீட்டையும் கட்சியையும் அவர் பிரிச்சுப்பார்க்க விரும்பலையாம்!
14. அவரு போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
காலிலே ஆணின்னு போனதுக்கு கொறடா எடுத்து பிடுங்க வராரே!
15. என் மனைவிக்கு என்னை சமைக்கவிடவே பிடிக்காது!
பலே!
அட போங்க சார்! தினமும் ஹோட்டல்ல விதம் விதமா வாங்கி வரச்சொல்லுவா!
16. ராணியாருக்கு மன்னர் மேல் என்ன கோபம்?
அரண்மனை சேடிப்பெண்களோடு அடிக்கடி கண்ணா மூச்சி ஆடுவதை யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்களாம்!
17. தலைவர் எதுக்கு திடீர்னு டீக்கடை ஆரம்பிக்கணும்னு சொல்றாரு!
டீ வித்தா பிரதமர் ஆயிரலாம்னு யாரோ சொன்னாங்களாம்!
18. தலைவர் பழசை இன்னும் மறக்கலை!
எப்படி சொல்றே?
ஓட்டுப்போட போன இடத்திலே மைப்புட்டியை ஆட்டைய போட்டுட்டு வந்திட்டாரே!
19. மன்னா! எதிரி நாட்டு மன்னன் நீங்கள்தூதனுப்பிய புறாக்களை சமைத்து சாப்பிட்டு விட்டானாம்!
அட அல்ப பயல்! எனக்கு ஒரு பார்சல் கூடவா அனுப்பாமல் விட்டுவிட்டான்!
20. ஓட்டுசதவீதம் அதிகரிச்சுதுன்றதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டார்!
அப்புறம்?
நாங்க ஆட்சிக்கு வந்தால் ஓட்டு சதவீதத்தை கட்டுப்படுத்துவோம் அறிக்கை விட்டிருக்காரு!
21. உங்க பையனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கா?
எப்படி சொல்றீங்க?
கிச்சன்ல மும்முரமா வேலைசெஞ்சிக்கிட்டுருக்கானே!
22. எதுக்கு பத்து நாள் மெடிக்கல் லீவ் கேட்கறீங்க?
பகல்ல தூங்க கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரே!
23. சில்லறை தட்டுப்பாட்டை போக்கறதுக்கு முயற்சி செஞ்சதுக்கு ஜெயில்ல போட்டுட்டாங்க!
என்ன பண்ணே?
கோயில் உண்டியலை உடைச்சேன்!

Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Tue Feb 24, 2015 8:03 am
கேள்வி;- தாஜ்மகால் யாருக்காக.. யார்
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
கட்டினார்..?
பதில்;- சுற்றுலா பயணிகளுக்காக..
கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Tue Feb 24, 2015 8:03 am
கேள்வி;- 8மாம்பழங்களை.. 6
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
பேருக்கு எப்படி சரியாக
பிரித்து கொடுப்பது..?
பதில்;- ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில்
சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Fri Feb 27, 2015 8:38 am
உங்க மனைவிகிட்டே பொய்யே பேச மாட்டீங்களாமே?
ஆமா, வாயே திறக்க மாட்டேன், எதுக்கு வம்பு? எதையாவது உளறிட்டா?
####
வேட்பாளர்: அந்த தொகுதிக்கு கால்நடை யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!
தொண்டர்: மனுஷனாவே போயி கேளுங்க தலைவரே!
####
மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
####
சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?
அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!
#####
கணவன் – இதோபாரு.... நம்ம வீட்டுல சினிமாச் செலவு ரொம்ப அதிகமாயிட்டு வருது. இதைப் பாதியா குறைக்கணும். சரியா?
மனைவி – சரிங்க.... இனிமே நான் மட்டும் சினிமாவுக்குப் போறேன்.
####
மாப்ளே? குறள் ஓன்று சொல்லு
கற்க ! கசடற . கல்கண்டு ! குமுதம் ! கற்றபின் ! பாதி விலைக்கு! விற்க.!
ஆஹா ! ஆஹா
#####
வேட்பாளர்: என் பேரை தர்மம் னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?
உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட தர்மம் தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!
####
மனைவி – வர வர எனக்கு இந்த நகை, புடைவைகள் பேரில் இருக்கிற ஆசையே விட்டுப் போயிடுச்சிங்க...
கணவன் – நிஜமாவா சொல்லற?
மனைவி – ஆமாம். எத்தனை நாளைக்குத்தான் இந்தப் பழைய நகைகளையும், பழைய புடவைகளையும் கட்டிண்டு இருக்கிறது..
####
கணவன் : வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது...
மனைவி : அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?
கணவன் : வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்...
மனைவி : கர்ர்ர்ர்ர்ர்.....

Fri Feb 27, 2015 8:45 am
பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்
1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது..
..தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப்
பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல்
ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால்
பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]
4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட
தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது.....
குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும்
போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான
பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும்
போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் ]
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில்
நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன
பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது,
நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]
9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்....
மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]
10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு,
நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]
Re: கொஞ்சம் சிரிங்க பாஸ்.......!
Fri Feb 27, 2015 1:52 pm
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோ மீட்டராவது ஓடுங்கள்.
பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள்
பகலில் இரண்டு மணி நேரம் தூங்குங்கள்.
தினசரி பேப்பரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.
தினமும் நண்பர்களுடன் காலையில் மூன்று மணி நேரமும மாலையில் மூன்று மணி நேரமும் மனம் விட்டு பேசுங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போங்கள்!
- இத்தனையையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால் நீங்கள் வேலை வெட்டியில்லாதவர்
உபயோகமான வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளுங்கள்.

Fri Feb 27, 2015 2:03 pm
"ஏன் தம்பி.... வீட்ல நேத்து ராத்திரி சட்டி பானை உருள்றது மாதிரி சத்தம் கேட்டுச்சே..?"
"அது ஒண்ணுமில்ல பெரியவரே... ரெண்டு மூணு பூனை வீட்ல சுத்திகிட்டு இருக்கா.... அதுகதான்...."
"இல்லையே....திடும் திடும்னும் சத்தம் கேட்டுச்சே.....!"
"அதுவா.... நானும், வீட்டுக்காரியும் மானாட மயிலாட டான்சுக்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம்..."
"இல்லையே......வேண்டாம்மா...வேண்டாம்மா....வெளிய தெரிஞ்சா கேவலாமாகிடும்னு அழுதுகிட்டே சொன்னா மாதிரி சத்தம் கேட்டுச்சே....!"
"யோவ்.... அதான் தெரியுதுல்ல....அப்புறம் என்ன "கேட்டுச்சே.. கேட்டுச்சே"ன்னு கேள்வி மேல கேள்வியா கேட்டு வெந்த புண்ணுல வேல பாய்ச்சுற......பேசாம போவியா...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum