முகநூல் வரும் நோக்கம்
Mon Feb 29, 2016 8:29 am
முகநூல் வேடந்தாங்கல்
சிலர் பொழுதைப்போக்க இங்கே வருகின்றார்கள்
சிலர் அழுதுப்புலம்ப இங்கே வருகின்றார்கள்
சிலர் அன்பு செய்ய இங்கே வருகின்றார்கள்
சிலர் வம்பு செய்ய இங்கே வருகின்றார்கள்
சிலர் அறிவைப் பெருக்க இங்கே வருகின்றார்கள்
சிலர் அரியணையேற இங்கே வருகின்றார்கள்
சிலர் வலிகளை மறக்க இங்கே வருகின்றார்கள்
சிலர் விழித்திருந்து வேவுப்பார்க்க இங்கே வருகின்றார்கள்
சிலர் கலைப்பைப் போக்க இங்கே வருகின்றார்கள்
சிலர் உழைப்பைச் சுரண்ட இங்கே வருகின்றார்கள்
சிலர் வேடிக்கைப் பார்க்க இங்கே வருகின்றார்கள்
சிலர் வாடிக்கையாக இங்கே வருகின்றார்கள்
சிலர் வெட்டிக்கதைப் பேச இங்கே வருகின்றார்கள்
சிலர் குட்டிக்கதைச் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் பெருமைப் பேச இங்கே வருகின்றார்கள்
சிலர் வறுமையை சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் ஆசைக்காட்ட இங்கே வருகின்றார்கள்
சிலர் பூசை வாங்க இங்கே வருகின்றார்கள்
சிலர் துணைத் தேட இங்கே வருகின்றார்கள்
சிலர் மனைகள் விற்க இங்கே வருகின்றார்கள்
சிலர் மதத்தைப் பரப்ப இங்கே வருகின்றார்கள்
சிலர் மதத்தை ஒழிக்க இங்கே வருகின்றார்கள்
சிலர் எண்ணங்களைச் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் கன்னங்களைக் காட்ட இங்கே வருகின்றார்கள்
சிலர் அரசியல் பேச இங்கே வருகின்றார்கள்
சிலர் இரகசியம் பேச இங்கே வருகின்றார்கள்
சிலர் பாராட்ட இங்கே வருகின்றார்கள்
சிலர் போராட இங்கே வருகின்றார்கள்
சிலர் ஏக்கமுடன் இங்கே வருகின்றார்கள்
சிலர் தூக்கம் தொலைக்க இங்கே வருகின்றார்கள்
சிலர் துக்கம் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் வெக்கம் தொலைக்க இங்கே வருகின்றார்கள்
சிலர் பிறப்பைச் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் மறுப்பைச் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் கோஷம் போட இங்கே வருகின்றார்கள்
சிலர் வேஷம் போட இங்கே வருகின்றார்கள்
சிலர் வணக்கம் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் இணக்கம் கொள்ள இங்கே வருகின்றார்கள்
சிலர் இருப்பைச் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் வெறுப்பைச் சொல்ல இங்கே வருகின்றார்கள்
சிலர் கற்பைப் போற்ற இங்கே வருகின்றார்கள்
சிலர் கற்பை விற்க இங்கே வருகின்றார்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum