இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு 31 அடையாளங்கள்
Fri Feb 19, 2016 11:07 am
இயேசுகிறிஸ்து பேசுகிறார். மத்தேயு 24:3,4 லூக்கா 21:7
1. அந்திக்கிறிஸ்துக்கள் எழும்புதல். மத்தேய 24:4 மாற்கு 13:6, லூக்கா 21:8
2. யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும். மத் 24:6,மாற்கு 13:7
3. ஜனத்திற்கு விரோதமாய் ஜனம் எழும்புதல். மத் 24;7 மாற்கு 13:8 லூக்கா 21:10
4. இராஜ்யத்துக்கு விரோதமாய் இராஜ்யம் எழும்புதல். மத் 24:7 மாற்கு 13:8
5. பஞ்சங்கள். மத் 24:7 மாற்கு 13:8 லூக்கா 21:11
6. கொள்ளை நோய்கள.; மத் 24:7 லூக்கா 21:11
7. பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகள்.மத் 24:7 மாற்கு 13:8லூக்கா 21:11
8. கலகங்கள். மாற்கு 13:8 லூக்கா21:11
9. பரிசுத்தவான்களை உபத்திரவத்துக்கு ஒப்புக்கொடுத்து அவர்களைக் கொலை செய்வார்கள். மத்24:9
10. இயேசுவின் நாமத்தின் நிமித்தம் அநேகர் சிறைச்சாலையில் அடைக்கப் படுவார்கள்.லூக்கா 21:12
11. தேவனுடைய பிள்ளைகள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவார்கள். மத் 24:9 மாற்கு 13:13 லூக்கா 21:17
12. தேவ ஜனங்கள் ஜெப ஆலயங்களில் அடிக்கப்படுவார்கள். மாற்கு 13:9
13. கிறிஸ்தவர்கள் இராஜாக்களுக்கும் தேசாதிபதிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன் நிறுத்தப்படுவார்கள் மாற்கு 13:9,11 லூக்கா 21:12
14. விசுவாசிகளில் அநேகர் இடறலடைந்து,ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து ஒருவரையொருவர் பகைப்பார்கள். மத் 24:10
15. அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். மத் 24:11
16. சகோதரன் சகோதரனையும் தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். மாற்கு 13:12
17. பெற்றோருக்கு விரோதமாய் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய்வார்கள். மாற்கு 13:12 லூக்கா 21:16
18. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். மத் 24:12,13
19. பந்துஜனங்களாலும் சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவார்கள். லூக்கா 21:16
20. பூலோகமெங்கும் சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக சுவிஷேம் பிரசங்கிக்கப்படும். மாற்கு 13:10 மத் 24:14
21. வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். லூக்கா 21:11
22. சூரியனிலும் சந்திரனிலும் நச்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும். லூக்கா 21:25மத் 24:29 மாற்கு 13:24,25
23. சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். லூக்கா 21:25
24. பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். லூக்கா 21:25
25. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். லூக்கா 21:26 மத் 24:29 மாற்கு 13:25
26. பூமியின்மேல் வரும் ஆபத்துக்குப் பயந்து மனுஷ இருதயம் சோர்ந்துபோகும். லூக்கா 21:26
27. அத்திமரமாகிய யூத ஜாதியின் ஆச்சரியமான துளிர்ப்பு. மத் 24:32-34 மாற்கு 13:28-30
28. புறஜாதி ஜனங்களாகிய மரங்களின் துளிர்ப்பு (புறஜாதி இராஜ்யங்கள் சுதந்திர நாடுகள் அமைத்து ஜனநாயக சோலிச மறையில் ஆளுகை செய்யும் காலம் இது) லூக்கா 21:29-32
29. மனுஷருடைய இருதயம் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைக ளினாலும் பாரமடைந்திருக்கும். லூக்கா 21:34-36
30. உலக முழுவதும் நோவாவின் காலத்தைப்போலவும் லோத்தின் நாட்களைப் போலவும் ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண்கொண்டும் பெண் கொடுத்தும் நிர்விசாரமாய் சாங்கோபாங்கமுமான ஜீவியிம் செய்து கொண்டிருப்பார்கள். மத் 24:37-39 லூக்கா 17:26-32 (எசேக்கி 16:49,50 எரேமியா 23:14 2பேதுரு2:5,6,9)
31. பாழாக்கும் அருவருப்பாகிய அந்திக்கிறிஸ்து என்பவன் எழும்பி பரிசுத்த நகரமாகிய எருசலேமில் நிற்க காணும் போது அவர் வருகையும் இருக்கும். மத் 24:15 மாற்கு 13:14 (தானி 9:27,11:31,12:11 2தெச 2:3,4 வெளி 13:14,15)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum