ஆவிக்குரியவர்களின் அடையாளங்கள் என்ன ?
Sat Aug 08, 2015 10:42 pm
இன்றைய நாட்களில் அநேகர் தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், உண்மையான கிறிஸ்தவர்கள்என்றும் காட்டிகொண்டும், வெளிப்பிரகாரமாக ஆடை அணிவதிலும், குறிப்பிட்ட சபைக்கு செல்வதில் தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்வதிலும், ஆழ்ந்த சத்தியங்களை கேட்பதினால் தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்வதிலும், நேரத்தை வீண் அடிப்பார்கள். ஆனால் உண்மையில் யாரை வேதம் ஆவிக்குரியவர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் என்றும் அங்கீகரிக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம். பல ஆண்டுகள் சபைக்கு சென்று கூட்டங்களுக்கு சென்று சத்தியங்களை ஏன் கேட்கிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள். "ஆவிக்குரியவர்கள்" என்றால் கிரேக்க வார்த்தை "நிமோடிக்கோஸ்" (GK:pneumatikos) "தேவனுடைய ஆவியின் ஆளுகையில் இருப்பவன்". |
அடையாளங்கள்: |
1. எல்லாவற்றையும் நிதானித்து அறிவான்- 1 கொரி 2:15. |
"நிதானித்து" கிரேக்க வார்த்தை அனாக்ரிநோ - Gk:anakrino: 1. ஜாக்கிரதையாய் சோதனை செய்பவன், 2. தனக்குதானே கேள்வி கேட்பவன், 3. மதிப்பீடு செய்பவன், 4. குறை சொல்பவனை சோதனை செய்பவன், 5. சரியான தீர்மானங்களை எடுப்பவன், 6. உணர்ச்சி வசப்படாதவன், 7. நியாயத்தின் பக்கம் நிற்பவன். இந்த அர்த்தங்கள் ஒவ்வொன்றும் ஒரு செய்தி என்பது உங்களுக்கே தெரியும். இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்ற நிலையில் தாங்கள் விவாதத்தில் ஜெயிக்கவேண்டும் என்று இருக்கிறார்களே தவிர, மேற்சொன்னதுபோல் நிதனிப்பது இல்லை. நீங்கள் ஆவிக்குரியவர்கள் என்பதை இதில் காட்டுங்கள். நிதானித்து முடிவெடுங்கள். |
2. பெலவானாய் இருப்பான்.- அப் 1:18, 1கொரி 4:20, 1கொரி 3:2, ஏசாயா 2:3. |
"பெலன்" கிரேக்க வார்த்தை: டுனாமீஸ், 1. சாத்தான் மேற்க்கொள்ளக்கூடிய பெலன், 2. பாவத்தை மேற்க்கொள்ளக்கூடிய பெலன், 3. சகித்துகொள்ளக்கூடிய பெலன், ஆவிக்குரியவர்கள் என்று கூறுவார்கள். தாங்கள் மற்றவர்களைவிட சத்தியத்தை சரியாய் கடைபிடிக்கின்றோம் என்று காட்டிக்கொள்வார்கள். மிகுந்த பரிசுத்தவான்கள்போல் பேசுவார்கள். ஆனால் யாராவது கொஞ்சம் சீண்டினால் மண்டையை உடைத்துவிடுவார்கள். அவர்களைப்போல கெட்ட வார்த்தை யாரும் பேச முடியாது. யானையைப்போல பீளிறுவார்கள். ஆனால் அவர்களுக்கு சகித்துக்கொள்ளக்கூடிய பெலன் இருக்காது. அதிகாலையிலோ, மற்ற நேரங்களிலோ, ஜெபிக்கமாட்டார்கள். நாம் ஆவிக்குரியவர்கள் என்று சகித்து கொள்வதில் காட்டவேண்டும். |
3. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சுவிசேஷ ஊழியத்தை செய்வான். 1கொரி 9:16. |
ஆவிக்குரியவன் சுவிசேஷ ஊழியத்தை மிக இலகுவாக எண்ணமாட்டான். இதற்குதான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். வீடு, பணம், மோட்டார் சைக்கிள், கார், கோழிகறி பிரியாணி, சாப்பாடு, ஆடைகள், சுகமான படுக்கைகள் எல்லாம் நாம் எப்படியவாது ஒரு மனிதனுக்கு சுவிசேஷம் அறிவித்து பரலோகம் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே தேவன் நமக்கு கொடுக்கின்றார்.
|
( Selected )
- பிசாசினால்பிடிக்கப்பட்ட குடும்பங்களின் 12 அடையாளங்கள்...
- இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு 31 அடையாளங்கள்
- இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள்
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- 'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன
Permissions in this forum:
You cannot reply to topics in this forum