எதுவுமே கிடைக்காத தலைமுறை என்றால் அது நம் அடுத்த தலைமுறைதான்...!!
Thu Feb 11, 2016 4:08 pm
வீட்டில் பிரசவித்து..
மூன்று வயதுவரை தாய்ப்பால்
குடித்து வளர்ந்து..
தொட்டிலில் தாலாட்டுப்பாடி உறங்கி..
நடைவண்டியில் நடை பழகி..
மண்ணில் புரண்டு விளையாடி..
மரப்பாச்சி பொம்மை கடித்து பல்
முளைத்து..
மணல் வீடுகட்டி..
நிலாச்சோறு சாப்பிட்டு..
விஷமில்லா நீரை பருகி ..
மாசில்லா காற்றை சுவாசித்து..
நஞ்சில்லா பாரம்பரிய உணவுண்டு..
பாட்டி வடை சுட்ட கதை கேட்டு..
கள்ளிப்பழம் தின்று ..
நொங்கு வண்டி ஓட்டி..
வலது கையால் இடது காதை தொட்டவுடன் ஐந்து வயதில்
பள்ளியில் சேர்ந்து..
உப்பு மூட்டை சவாரி முதல் மாட்டு வண்டி சவாரி அப்பாவுடன் சென்று..
குரங்கு பெடல் சைக்கிள் ஓட்ட கற்று..
ஏர் பிடிக்க கற்று..
அரசு பள்ளியில் பயின்று..
தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்று கூட்டு குடும்பத்தில் வளர்ந்து..
ஆசா, பாசம், அன்பு, பறிவு, ஆறுதல், அரைவனைப்பு, நீண்ட ஆயுள் என்று எதுவுமே கிடைக்காத தலைமுறை என்றால்
அது நம் அடுத்த தலைமுறைதான்...!!
#கேட்டா_முன்னேறிட்டோம்னு
#சொல்றாங்க..!!
அளவா படிச்சு ..
ஒண்ணுமே விளையாத மண்ணை பொன்னு விளையுற பூமியா இளைஞர்கள் எப்ப மாத்தறாங்களோ
அன்று செழிக்கும் நம்நாடு..
வேதனையுடன் திருமூர்த்தி..
சத்தியமங்கலம்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum