தலைமுறை இடைவெளி
Thu Jan 03, 2013 7:37 pm
இளைஞருக்கும், முதியோருக்கும் இடையே எழும் கருத்து வேறுபாடு மூன்று அம்சங்களில் ஏற்படுகிறது.
1.பார்வை
2.மதிப்பீடு
3.கணக்கீடு
1.பார்வை[outlook]
மூத்தோர்,
அவர்கள் வாலிபர்களாக இருந்த காலத்தில் எப்படிப்பட்ட கண்ணோட்டம் இருந்ததோ,
அதே கண்ணோட்டத்திலேயெ பெரும்பாலும் பார்ப்பார்கள்.
நவீன முறையில் முடி
வெட்டிக்கொள்வது [ hair style] , நவீன முறையில் உடை உடுத்துவது போன்றன
அவர்கள் பார்வையில் கோமாளித்தனமாகவும், Indescent ஆகவும் தோன்றும்.
ஆனால் இவையோ வாலிபருக்கு விருப்பமானதாகவும், கவுரவச் சின்னமாகவும் [ status symbol] தோன்றும்.
சில கல்வி நிறுவனங்கள், பணியிடங்களில் , சபைகளில் கூட இளைஞருக்கு கலச்சாரக் கட்டுபாடுகள் [ Culture policing] உண்டு.
பல நேரங்களில் இளைஞர்கள் இக்கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை,
"வேதாகமத்தில் எங்கு எழுதியுள்ளது?" என்று வாக்குவாதம் செய்கின்றனர்,
"சட்டத்தில் எங்கு உள்ளது?" என போர்கொடி உயர்த்துகின்றனர்.
சுதந்திரத்தை விரும்புகின்றனர்.
ஆனால் வசனம் கூறுகின்றது ,' கீழ்படியுங்கள்'.
'அந்தப்படி இளைஞரே, மூப்பருக்கு( மூத்த வயதினருக்கு) கீழ்படியுங்கள்...... [1 பேதுரு 5:5]
2. மதீப்பீடுகள்[ Values]
மூத்தோர் சில மதிப்பீடுகளை வாழ்வில் ஆதரங்களாக கொண்டுள்ளனர்.
காலையில் சீக்கிரமாக எழுவது, பெரியவர்களுக்கு இருகரம் கூப்பி தோத்திரம்/வணக்கம் கூறுவது,
பெரியவர்களுக்கு எதிர்த்து பேசாமல் இருப்பது[அவர்கள் தவறுதலாக கூறிவிட்டாலும்],
ஞாயிற்றுக்கிழமையில் எந்தப் பிரயாணத்தையும் அலுவலையும் மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை சில உதாரணங்கள்.
இளைஞர்களோ இரவு நீண்டநேரம் படித்துவிட்டு, காலையில் தாமதமாக எழுவதை விரும்புகின்றனர்.
சத்தமாக 'வேகமான' இசையைக் கேட்க விரும்புகின்றனர்.
'ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்தான் விடுமுறை, அன்று ஆலயத்துக்குச் சென்றுவிட்டு மற்ற நேரத்தில் எதையும் செய்யலாம்' என எண்ணுகின்றனர்.
இது மூத்தோருக்கும், இளையோருக்கும் உரசலை உருவாக்குகிறது.
மூத்தோர் ஒழுங்கு[Discipline] பற்றி கவனமாயிருப்பர்.
எடுத்த பொருளை அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பர்.
இளைஞரோ , வீடு என்றால் casual -ஆகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பர்.
எது சரி என்று விவாதம் செய்வதை விட, ' ஏற்றக்காலம் வரும் வரை இளைஞரே கீழ்படியுஙகள்' என்றே கூறுகிறது தேவனுடைய வார்த்தை.
3. கணக்கீடுகள் [ Calculations]
மூத்தோர் , இளைஞராக இருந்தபோதுள்ள பணமதிப்பு அதிகம், இப்போதோ பணமதிப்பு முறைவு.
ஆகவே, இளைஞர் செலவு செய்கிற அளவு, மூத்தோருக்கு வீண்செலவு செய்வதாகத் தோன்றும்.
மூத்தோர் காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தவை, இன்று அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன.
எனவே, இளைஞர் ஆடம்பரமாக வாழ்வதாக , மூத்தோருக்கு தோன்றும்.
ஆனாலும் இளைஞரே, மூத்த வயதினருக்கு கீழ்படியுஙக்ள்.
கர்த்தர் உங்களை உயர்த்துவார்.
கடைசியாக:
* உங்களுக்கு உங்களைவிட குறைந்தபட்சம் 15 வயது மூத்த நண்பர்கள்/ தோழிகள் உண்டா??
*மூத்தோர் உங்களுக்கு பிடிக்காத கட்டளைகளை இடும்போது, அதன் நோக்கம் நல்ல நோக்கமே, என்று என்றாவது சிந்தித்ததுண்டா??
*உங்கள் பிரச்சனைக்காக என்றாவது நீங்கள் மூத்தோரிடம் ஆலோசனை கேட்டதுண்டா???
நன்றி: அன்புடன் அம்மு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum